கிட்ஸ் கேம்ப 2022

Published by

on

சாய்வு நாற்காலி. மெல்லிய தென்றல். சில்லுனு ஒரு கிளாஸ் ஜிகர்தண்டா.

அசந்து தூக்கம்.

திடீரென்று ஒரு அழைப்பு, “யோனா, நினிவேக்கு போ!”

“என்ன, நினிவே பட்டணமா? சான்சே இல்லை! நான் போகமாட்டேன்!” என்றான் அவன்.

இதன் பின் நடந்த சம்பவம் – ஒரு புயல், பெரிய மீன், மீண்டும் நிலம், மற்றும் பட்டுப்போன செடி.

இடையில் சில நல்ல மற்றும் சில தவறான தேர்வுகளை செய்த ஒரு மனிதனைக் காண்கிறோம். அவன் பெயர் யோனா. தன் தேர்வுகள் அவனின் வாழ்க்கையை வடிவமைத்தன.

நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்திலும் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு நம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது (கடவுள் வழங்கிய சுய சித்தத்தின் [Free-will] பரிசு இது). ஒவ்வொரு சரியான தேர்வும் உங்கள் வாழ்க்கையை உருவாக்குகிறது மற்றும் தவறான தேர்வுகள் அதை உடைக்கிறது. மேலும், பூமியில் நாம் செய்யும் தேர்வுகளுக்கு நித்திய விளைவுகள் உண்டு.

தேர்வுகளின் மதிப்பை குழந்தைகள் புரிந்துகொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? கடவுளுடைய வார்த்தையிலிருந்து சரியான தெரிவுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வழியை சிறுவயதிலே அவர்களுக்குக் கற்பிப்பது எவ்வளவு அவசியம்!

இயேசுவை அவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அறிமுகப்படுத்துகிறோம். அவரைத் தேர்ந்தெடுப்பது நம் வாழ்வின் மிக முக்கியமான தேர்வாக இருக்கிறது என்பதைப் பகிர்ந்துகொள்ளுவது ​​இவ்வருட கிட்ஸ் கேம்ப்பின் நோக்கம். இப்பணியில் எங்களோடு இணைவீர்களா?

குழந்தைகள் முகாம் (Kids Camp) என்பது 5 அமர்வு பாடத் திட்டமாகும். இது 5 நாட்கள்/ 3 நாட்கள்/ 5 வாரங்களில் நீங்கள் பிள்ளைகளுக்கு நடத்தலாம். இவ்வருடம் நேரிலும் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் நடத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் சபைக்கு பொருத்தமான தளத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.

ஆசிரியர் பயிற்சியில் (Teacher’s Workshop) உங்களைப் பதிவு செய்ய, கீழ் உள்ள பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும். ஒன்லைன் பயிற்சியும் இவ்வருடம் zoomல் நடத்தப்படும்.

உங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!

மேலும் விவரங்களுக்கு அல்லது உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
Email: jesus4kidz@gmail.com
Phone/ Whatsapp: +91 9686544988

Leave a comment

Previous Post
Next Post