எப்படி இருக்கிறாய்?

Published by

on

நான்கு பகுதிகளைக் கொண்ட “Hello👋🏼” என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தில், முதல் பகுதியை இங்கு பார்ப்போம்.

நம்முடன் ஆழமான உறவை வைக்க விரும்பும் தேவனை இந்தத் தொடர் அறிமுகப்படுத்திகிறது. மேலும் அறிய அல்லது பிற மொழிகளில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

நோக்கம்:

சிறுவர்கள் தாங்கள் தேவனுக்கு விசேஷமானவர்கள் என்பதையும் அதனால் அவர் அவர்களின் வாழ்க்கையில் மிகுந்த அக்கறை காட்டுகிறார் என்பதையும் அறிந்துகொள்வார்கள்.

அட்டவணை:
  1. அறிமுகம்
  2. பாடல் நேரம் (15 mins)
  3. மனப்பாட வசனம் (5 mins)
  4. வேதாகம நிகழ்வு (20 mins)
  5. செயல்பாடு (10 mins)
  6. விளையாட்டு (10 mins)
அறிமுகம்

உங்களில் எத்தனை பேர் புதிய நண்பர்களைக் கண்டுபிடிக்க விரும்புகிறீர்கள்? உங்கள் பள்ளியில் மிகவும் பிரபலமான ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் வகுப்பில் உள்ள அனைவரும் இந்த நபரின் நண்பராக இருக்க விரும்புகிறார்கள். ஒரு நாள் இந்த நபர் உங்களிடம் வந்து, “நீ என் நண்பராக இருப்பாயா?” என்று கூறுகிறார். வகுப்பின் நட்சத்திரம் உங்கள் நண்பராக விரும்பும்போது நீங்கள் எப்படி உணருவீர்கள்?

உங்களிடம் நண்பர் கோரிக்கை வைக்க விரும்பும் உலகின் மிகப் பெரிய விஐபியைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். ரெடியா? ஆரம்பித்துவிடுவோம்!

மனப்பாட வசனம்

கர்த்தாவே, நான் போகுமிடத்தையும் நான் படுக்கும் இடத்தையும் நீர் அறிகிறீர். நான் செய்யும் ஒவ்வொன்றையும் நீர் அறிகிறீர். சங்கீதம் 139:3


வசனத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு செயலைக் கற்பிக்கவும்.
🔸 கர்த்தாவே, நான் போகுமிடத்தையும் – நடப்பது போல் செயல்படுங்கள்
🔸 நான் படுக்கும் இடத்தையும் நீர் அறிகிறீர் – தூங்குவது போல் செயல்படுங்கள்
🔸 நான் செய்யும் ஒவ்வொன்றையும் நீர் அறிகிறீர் – ஏதாவது செய்வது போல் செயல்படுங்கள்

ஒரு பகுதியை நீங்கள் சத்தமாக சொல்லும்போது சிறுவர்கள் ஆக்ஷ்ன் செய்ய வேண்டும்.  நீங்கள் செயலைச் செய்தால், சிறுவர்கள் வசனத்தை சத்தமாக சொல்ல வேண்டும்.

வேதாகம நிகழ்வு

வேத பகுதி: லூக்கா 15:2-7
கதை: காணாமல் போன ஆடுகளின் உவமை
செய்தி: ஒரு நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளின் நிலையை முழுமையாக அறிந்திருக்கிறார். உவமையில் வரும் மேய்ப்பன் தன் ஆடு ஒன்று தொலைந்து போனதை அறிந்தார். அவ்வாறே தேவன் உங்களை மிகவும் நேசிப்பதால் உங்களை முழுமையாக அறிந்திருக்கிறார். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவருக்குத் தெரியும். நீங்கள் சோகமாக இருக்கும்போது அவருக்குத் தெரியும். நீங்கள் அவருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவர் என்பதால் அவர் உங்களை உன்னிப்பாக கவனிக்கிறார், மிகுந்த அக்கறை காட்டுகிறார்.

செயல்பாடு

கொடுக்கப்பட்டுள்ள ஆடு டெம்ப்ளட்டில் இருந்து சிறுவர்கள் தங்களுக்கு ஒரு ஆடை தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். அதில் அவர்கள் பெயரை எழுத்து, சிறிது பஞ்சை அதன் தலையில் ஒட்டி அலங்கரிக்க சொல்லுங்கள். சிறுவர்கள் தங்கள் ஆடுகளை ஒரு பொதுவான Chartல் ஒட்ட வேண்டும். முடிந்தால் அதை அலங்கரிக்கவும் (கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்).

இது வகுப்பு அட்டை (Class Chart) என்று அழைக்கப்படும் மற்றும் வருகையைக் (Attendance) குறிக்கப் பயன்படும் (அவர்கள் வகுப்பில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு வாரத்திற்கும் அவர்களின் ஆடுகளுக்கு அடுத்ததாக ஒரு நட்சத்திரத்தைக் குறிக்கவும்). நீங்களும் ஒரு ஆடு தான், இயேசு மட்டுமே மேய்ப்பன் என்பதைக் காட்ட, உங்கள் பெயருடன் ஒரு ஆட்டையும் ஒட்டவும்.

விளையாட்டு

சிறுவர்களை ஒரு வட்டத்தில் உட்கார வைக்கவும். அவர்களில் ஒருவரை “கண்டுபிடிப்பவராக” இருக்கும்படி நியமித்து, வகுப்பிலிருந்து சிறிது நேரம் தூர அனுப்பவும். வட்டத்தில் உள்ள சிறுவர்களில் ஒருவருக்கு ஒரு சிறிய பந்தை (அல்லது ஏதேனும் சிறிய பொருளை) கொடுங்கள். அந்த பிள்ளை பொருளை மறைக்க வேண்டும் (அதை தங்கள் பாக்கெட்டில் வைக்கலாம் அல்லது அதன் மீது உட்காரலாம்). “கண்டுபிடிப்பவர்” ஐ மீண்டும் அழைத்து, பொருளை மறைத்து வைத்திருக்கும் நபரைக் கண்டுபிடிக்கச் சொல்லுங்கள். வேறொரு “கண்டுபிடிப்பவர்” வைத்து விளையாட்டை மீண்டும் தொடரவும்.
செய்தி: நீங்கள் பந்தை மறைத்து இருக்கலாம் அல்லது பந்தை மறைக்காமல் இருக்கலாம். கண்டுபிடிப்பாளரால் உங்களை எளிதாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தேவன் உங்களை நன்கு அறிவார். நீங்கள் அவருக்கு முக்கியமானவர் என்பதால் அவர் உங்களை ஆர்வமாக கவனிக்கிறார்.

Leave a comment

Previous Post
Next Post