நான்கு பகுதிகளைக் கொண்ட “Hello👋🏼” என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தில், இரண்டாவது பகுதியை இங்கு பார்ப்போம்.
நம்முடன் ஆழமான உறவை வைக்க விரும்பும் தேவனை இந்தத் தொடர் அறிமுகப்படுத்திகிறது. மேலும் அறிய அல்லது பிற மொழிகளில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
நோக்கம்:
எல்லா சூழ்நிலையிலும் தேவனிடம் செல்ல முடியும் என்று சிறுவர்கள் கற்றுக்கொள்வார்கள். தேவனிடம் பேசுவதை ஜெபம் என்று அழைக்கிறோம். தேவன் சிறுவர்களை மிகவும் நேசிக்கிறார் அவர்கள் செய்யும் ஜெபங்களை கவனமாய் கேட்கிறார் .
அட்டவணை:
- அறிமுகம்
- பாடல் நேரம் (15 mins)
- மனப்பாட வசனம் (5 mins)
- வேதாகம நிகழ்வு (20 mins)
- செயல்பாடு (10 mins)
- விளையாட்டு (10 mins)
அறிமுகம்
உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் மிகவும் வருத்தத்தோடும் பயத்தோடும் இருக்கிறீர்கள். இந்த சூழ்நிலையில் உங்கள் நண்பரிடம் சென்று உதவி கேட்பீர்களா? ஆம்! நம்மில் பெரும்பாலோர் நம் நண்பர்களை நம்புவதால் அவர்களிடம் உதவி கேட்போம்.
இன்று நான் உங்களுக்கு மிகவும் புத்திசாலியான ஒரு பெரிய ராஜாவை அறிமுகப்படுத்தப் போகிறேன். அவர் உதவிக்காக தனது சிறந்த நண்பரிடம் சென்று தன்னையும் தனது ராஜ்யத்தையும் ஒரு பெரிய சிக்கலில் இருந்து காப்பாற்றினார். நாம் தொடங்கலாமா?
மனப்பாட வசனம்
இதுவரை நீங்கள் என்பேரால் எதையும் கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். யோவான் 16:24a (Tamil Easy Reading Version)
ஒரு வைட் போர்டில் அல்லது சார்ட் பேப்பரில் , வசனத்தை பெரிய எழுத்துக்களில் எழுதுங்கள். வசனத்தை சிறிய பகுதிகளாகப் பிரிக்கவும். சிறு காகித துண்டுகளை வைத்து ஒவொரு பகுதியையும் மறைக்கவும்.
இந்தத் காகித துண்டுகள் மேல் 1-லிருந்து தொடங்கி எண்களை எழுதுங்கள். மறைக்கப்பட்ட வசனத்தின் வார்த்தைகளை சிறுவர்கள் யூகிக்க வேண்டும். இது சாத்தியமற்றதாக இருக்கும். அவர்களிடம் காகிதத்தின் மேல் எழுதப்பட்டுள்ள எண்களில் ஏதாவது ஒன்றை சத்தமாக கூற சொல்லுங்கள். அவர்கள் சொன்ன எண்ணின் காகிதத்தை அகற்றி அதனுள் இருக்கும் வசன பகுதியை காட்டுங்கள். சிறுவர்களை அதை சத்தமாக வாசிக்க சொல்லுங்கள். இப்படி ஒன்றின் பின் ஒன்றாக காகித துண்டுகளை நீக்கி வசனத்தை முழுமையாக காட்டி வசனத்தை கற்றுக்கொடுங்கள்.
செய்தி: அட்டைகளை அகற்றும்படி நீங்கள் கேட்கும் வரை அந்த வசனம் என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை. நீங்கள் கேட்கும் போது பெறுவீர்கள், தேவனிடம் கேட்டல் நிச்சயம் பதில் பெறுவீர்கள்.
வேதாகம நிகழ்வு
வேத பகுதி: 2 இராஜாக்கள் 18:17 – 19:37
கதை: சேக்கியா தேவனிடம் பேசினார்
செய்தி:
எசேக்கியா ஒரு பெரிய ராஜா. அவர் தேவனோடு உறவு வைத்திருந்தார். ஒரு நாள் அவரையும் அவர் ராஜ்யத்தையும் வீழ்த்த ஒரு சக்திவாய்ந்த எதிரி வந்தான். எதிரி அவருடைய படையை ஏளனம்மாக பேசினான். தன்னை எதிர்த்துப் போராடி யாராலும் வெல்ல முடியாது என்றான்.எசேக்கியா நம்பிய தேவனும் தனக்கு முன் சக்தியற்றவர் என்று எதிரி கூறினான். “நீ தோற்றுப்போவாய்” என்று தொடர்ந்து உங்களை சுத்தி இருப்பவர்கள் சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? சோர்ந்துபோவோம் இல்லையா?
ஆனால் எசேக்கியா ராஜா தேவனையும் அவருடைய வல்லமையையும் அறிந்திருந்தார். நேராக தேவனிடம் சென்று எதிரி சொன்னதை எல்லாம் சொன்னான். இதைத்தான் ‘ஜெபம்’ என்கிறோம். உன் மனதில் உள்ளதையெல்லாம் நீ தேவனிடம் சொல்லலாம்.
பின்பு என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள்? தேவன் எசேக்கியாவின் ஜெபத்தைக் கேட்டார். அவர் எசேக்கியாவுக்கு உதவி செய்து வெற்றியைக் கொடுத்தார். நீங்கள் எதையும் தேவனிடம் பேசலாம். அவர் உங்களை நேசிப்பதால் அவர் உங்கள் பேச்சைக் கேட்கிறார்.
செயல்பாடு
ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு துண்டு காகிதத்தை கொடுங்கள். அவர்கள் தேவனிடம் சொல்ல விரும்பும் ஒரு விஷயத்தை அல்லது ஒரு விண்ணப்பத்தை எழுத சொல்லுங்கள். அதில் தங்கள் பெயர்களை எழுத வேண்டியதில்லை. சிறுவர்களிடமிருந்து சேகரித்து ஒரு பெட்டியில் வைக்கவும்.
பாக்ஸிலிருந்து ஒரு சீட்டைத் தேர்ந்தெடுத்து, ஒரு லைனர் (one line) ஜெபத்தை எப்படி செய்வது என்று சிறுவர்களுக்கு காட்டுங்கள். உதாரணமாக, ‘என் அம்மா உடம்பு சரியில்லை’ என்று ஒரு சீட் கூறினால், இப்படி ஜெபிக்கலாம் “அன்புள்ள இயேசுவே, என் அம்மாவைக் குணமாக்குங்கள் ப்ளீஸ். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன், ஆமென்”.
நீங்கள் சில எடுத்துக்காட்டுகளைக் காட்டிய பிறகு, சிறுவர்களில் ஒருவருக்கு ஒரு பந்தை வீசுங்கள். பந்தைப் பெறுபவர் பெட்டியிலிருந்து ஒரு ஜெப சீட்டை எடுக்க வேண்டும். நீங்கள் காட்டிய உதாரணத்தைப் பயன்படுத்தி அவர்கள் ஒரு சிறிய ஜெபம் செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் பந்தை கூட்டத்தில் வேறு ஒருவருக்கு வீச சொல்லுங்கள். அவர்கள் வந்து மற்றொரு ஜெப சீட்டை எடுத்து ஜெபிப்பார்கள்.
விளையாட்டு
சைனீஸ் வீஸ்பெர் (Chinese Whisper) எனப்படும் நன்கு அறியப்பட்ட விளையாட்டை விளையாடப் போகிறீர்கள். சிறுவர்களை ஒரு வட்டத்தில் உட்கார வைக்கவும். உங்கள் அருகில் இருக்கும் பிள்ளையின் காதுகளில் ஒரு சிறிய செய்தியை முணுமுணுக்கவும்.
பக்கத்தில் இருப்பவரின் காதில் அவர் அந்த செய்தியை கிசுகிசுக்க வேண்டும். வட்டத்தில் உள்ள கடைசி பிள்ளைக்குச் செய்தி செல்லும் வரை இது தொடர வேண்டும். அவன்/அவள் செய்தியை உரக்கச் சொல்ல வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அசல் செய்தி இழக்கப்படும். வட்டத்தில் வேறு நபருடன் தொடங்குவதன் மூலம் விளையாட்டை மீண்டும் விளையாடவும். விளையாட்டின் இறுதிச் சுற்றில், கடைசி நபருடன் நேரடியாக செய்தியைப் பகிருங்கள். இந்த முறை, செய்தி இழக்கப்படாது.
செய்தி: பலர் கடவுளிடம் வேறொருவர் மூலம் பேச முயற்சி செய்கிறார்கள். தங்களுக்காக வேறொருவர் ஜெபிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நீங்கள் அவருடன் நேரடியாகப் பேச வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நீங்கள் அவரிடம் பேசுவீர்களா?

Leave a comment