ஐந்து பகுதிகளைக் கொண்ட 🚢 கடல் பயணம் என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தில், முதல் பகுதியை இங்கு பார்ப்போம்.
நோக்கம்:
தேவன் தங்களிடம் ஏதாவது செய்யச் சொன்னால் அது எப்போதும் சரியானதை இருக்கும் என்பதை சிறுவர்கள் கற்றுக் கொள்வார்கள். அது சரியானது தான் என்பதை கீழ்ப்படிவத்தின் விளைவுகள் முலமாக அறிந்து கொள்ளலாம் – அவர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் உதவும்.
அட்டவணை:
- அறிமுகம்
- பாடல் நேரம் (10 mins)
- பேசலாம் வாங்க (10 mins)
- வேதாகம நிகழ்வு (20 mins)
- செயல்பாடு (10 mins)
- விளையாட்டு (10 mins)
அறிமுகம்
எப்பொழுதும் யாரோ ஒருவர் ஏதாவது செய்யச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அது நீங்கள் பார்க்கும் வீடியோக்களில் உள்ள ஒருவராகவோ அல்லது பள்ளியில் உள்ள நண்பராகவோ அல்லது உங்கள் சொந்த மனதிலிருந்தோ இருக்கலாம். எதை கீழ்ப்படிந்தால் சரியாக இருக்கும் என்று கண்டுபிடிப்பதே சவால். சிறந்ததை தேர்ந்தெடுக்க ஒரு செரியான வழியை நான் உங்களுக்கு காட்ட போகிறேன். [பதில்: சரியான வழியை கண்டுபிடிக்க வேதத்தில் தேவன் என்ன சொல்கிறார் என்று கண்டுபிடிப்பதே சிறந்த வழி]
பாடல் நேரம்
இந்த “Action Kids” பாடலை நீங்கள் கற்பிக்கலாம்.
பேசலாம் வாங்க
J4K கடல் பயணம் என்பது 5 தீவுகள் வழியாக சிறுவர்களை அழைத்துச் செல்லும் ஒரு சாகசக் கப்பல். கப்பலின் கேப்டன் ஒரு கடற்கொள்ளையர் (பைரேட்). அவர் மிக மோசமான மனிதராய் வாழ்ந்துவந்தார். ஆனால் ஒரு கடல் பயணம் அவர் வாழ்க்கையை தலைகிழாக மாற்றியது. அந்த பயணத்தில் அவர் சந்தித்த ஒரு சிறந்த நண்பரே அவர் வாழ்கை மாற்றங்களுக்கு கரம் என்கிறார். நம்மையும் அதே பயணத்தில் அழைத்து செல்ல விரும்புகிறார்.
இந்த பைரேட்டை சந்திக்க, நாம் வீடியோ கால் (Video call) செய்யப்போகிறோம் (சிறுவர்களுக்கு வீடியோவைக் காட்டும்போது போனில் வீடியோ கால் செய்வது போன்று நடித்து காட்டுங்கள். வீடியோவை சில இடங்களில் பாஸ் (pause) செய்து நீங்கள் சில வார்த்தைகளை கூற வேண்டியது இருக்கும். கீழ் உள்ள ஸ்கிரிப்ட்டை (Script) பயன்படுத்தவும். இந்த பகுதியிலே இன்றைய வேத வசனத்தையும் கற்று கொடுப்பீர்கள்).
No-Entry தீவுக்கான (தீவு #1) ஸ்கிரிப்ட் இங்கே:
நீங்கள்: வாங்க நான் சொன்ன பைரேட்டிடம் பேசலாம். வீடியோ கால் பண்ணலாமா? (உங்கள் ஃபோனைப் பயன்படுத்தி வீடியோ அழைப்பைச் செய்வது போல் செய்யுங்கள்)
பைரேட் வீடியோ: (கடற்கொள்ளையர் ஹாய் சொல்வார்)
நீங்கள்: பைரேட், நீங்கள் எங்களை ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னீர்கள். போலாமா ப்ளசிஸ்?
பைரேட் வீடியோ: (கடற்கொள்ளையர் பாஸ்வர்ட் (Password) கேட்பார்)
நீங்கள்: (பாஸ்வர்ட் என்பது அன்றைய வேத வசனம். வசனத்தை மூன்று முறை சொல்ல சொல்லுங்கள். வசனம் வாசிக்க அதிக நேரம் எடுத்தால் வீடியோவை இடைநிறுத்தி, தொடரவும்.)
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. [சங்கீதம் 119:105]
பைரேட் வீடியோ: (பைரேட் கடற்கொள்ளையர் உங்களை தீவு முழுவதும் அழைத்துச் சென்று அதைப் பற்றி பேசுவார்)
நீங்கள்: (பைரேட்டிற்கு டாடா சொல்லுங்கள்)
வேதாகம நிகழ்வு
வேத பகுதி: ஜோனா1:1-3
கதை சுருக்கம்:
யோனா வேதத்தில் உள்ள பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவர். யோனா தேவன் பேசுவதை கேட்க அறிந்திருந்தார். தேவன் சொல்வது நல்லது சரியானது என்று அறிந்திருந்தார். தேவன் சொல்வதை செய்தல் தனக்கும் தன்னை சுற்றியிருக்கிறவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்றும் அறிந்திருந்தார்.
ஒரு நாள், தேவன் யோனாவை நினிவேக்கு போகச் சொன்னார். மக்கள் திருந்தி நல்வாழ்வு வாழாவிட்டால் அழிவு வரும் என்று எச்சரிக்கை சொனார். தேவன் யோனாவிடம் சரியானதைச் செய்யும்படி கேட்டார் என்று நினைக்கிறீர்களா? ஆம்! அது ஏன் சரி என்று நினைக்கிறீர்கள்? [சிறுவர்கள் பதிலளிக்கட்டும்]
ஆனால் யோனா கீழ்ப்படியவில்லை. அவர் சரியானதை அறிந்திருந்தாலும், அவர் தவறு செய்தார். அவர் தர்ஷீசுக்கு செல்லும் படகை எடுத்துக்கொண்டு ஓடிப்போனார். கடினமான காரியத்தைச் செய்வதிலிருந்து தப்பித்துவிட்டதாக அவர் நினைத்தார். அவர் கப்பலின் அடி தளத்தில் தூங்கினார்.
அவர் கீழ்ப்படியாததற்கு சரியாக தோன்றும் காரணங்கள் இருக்கலாம் – (1) அசீரியர்கள் (நினிவே மக்கள்) இஸ்ரேலின் எதிரிகள். யோனா இஸ்ரவேலனாக இருந்ததால் அவர்கள் அவரைக் கொன்றுவிடலாம்; (2) இஸ்ரவேல் மக்கள் அவர் தேசத்துரோகம் செய்கிறார், தங்கள் எதிரிக்கு உதவி செய்கிறார் என்று நினைக்கலாம்; (3) தேவன் அவர்களை மன்னித்து, தவறுகளுக்கு தண்டனை அளிக்காமல் போய்விட்டாள் தான் சொன்ன செய்தி பொய்யாக தோன்றும்
இருப்பினும் யோனாவின் தவறான தேர்வு கடுமையான விளைவுகளுக்கு வழிவகுத்தது. தர்ஷீசுக்கு செல்ல அவர் எடுத்துச் சென்ற படகு புயலில் சிக்கியது. யோனா உட்பட படகில் இருந்த அனைவரும் பெரும் ஆபத்தில் இருந்தனர். அடுத்து என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகிறீர்களா? அடுத்த வாரம் தவறவிடாதீர்கள்!
செயல்பாடு
ஒவ்வொரு வயதினருக்கும் செயல்பாடு வேறுபடும் – Special (3-7 வயது), Strong(8-12 வயது), Dee(13-15 வயது)
Special (3-7 வயது)
பக்கம் 1: சிறுவர்கள் கீழ்ப்படிய வேண்டிய பெரியோரை (பெற்றோர், தாத்தா-பாட்டி, ஆசிரியர்கள்) வரையுமாறு சொல்லுங்கள்.
பக்கம் 2: படங்களைப் பார்த்து கதையைச் சொல்ல சொல்லுங்கள்.
Strong (8-12 years)
பக்கம் 1: சிறுவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து (கீழ் வலதுபுறம்) இயேசு இருக்கும் இடத்திற்கு (மேல் இடதுபுறம்) வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். பின்னர் அவர்கள் வழியில் சேகரிக்கும் எழுத்துக்களால் வெற்றிடங்களை நிரப்பவும்.
பதில்: நான் இயேசுவுக்குக் கீழ்ப்படிவேன்
பக்கம் 2: முதல் மேட்ரிக்ஸில் (box) ஒரு எண்ணை வட்டமிட சொல்லுங்கள். பின்னர் அறிவுறுத்தல் தாள் #1 ஐக் காட்டவும். அவர்கள் வெடிகுண்டுடன் ஏதேனும் எண்ணைத் தேர்ந்தெடுத்திருந்தால், அந்தச் சுற்றுக்கு அவர்கள் புள்ளிகளைப் பெற மாட்டார்கள். அவர்கள் விளையாட்டை 4 முறை விளையாடுவார்கள். இரண்டாவது முறையிலிருந்து, தாளைக் காண்பிப்பதற்கு முன் வாய்மொழியாக அறிவுறுத்தல்களை வழங்கவும் (எ.கா. முதல் பத்தியில் (first column) வெடிகுண்டுகள் உள்ளன) இந்த முறை அவர்கள் உங்கள் பேச்சைக் கவனமாகக் கேட்டு, கீழ்ப்படிந்தால், அவர்கள் வெடிகுண்டிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
பதில்: எங்கிருந்து ரவிக்கு அறிவுரைகள் கிடைக்கின்றன? வேதம்
விளையாட்டு
இந்த விளையாட்டின் மூலம் சிறுவர்களுக்கு வேத பகுதிகளை கண்டுபிடிக்க கற்று தருவீர்கள். குறைந்த வேத புத்தகங்கள் இருந்தால் சிறுவர்களை சிறு குழுக்களாக பிரித்துக்கொள்ளுங்கள். தேவையான வேத புத்தகங்கள் இருந்தால் அணைத்து சிறுவரும் ஒரு வேதா புத்தகத்தை கொடுங்கள். கட்டளைகள் உள்ள வேத வசங்கள் இருக்கும் இடத்தை ஒன்றின் பின் ஒன்றாக சத்தமாக சொல்லுங்கள் (உ.தா. எபேசியர் 6:1)
வசனத்தைக் கண்டுபிடித்து அதை சத்தமாக வாசிக்கும் குழு சுற்றில் வெற்றி பெறும். ஒவ்வொரு வசனத்திற்குப் பிறகும் சிறுவர்களிடம் அதன் அர்த்தம் என்ன என்று கேட்டு, ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ வேதம் எவ்வாறு அறிவுறுத்துகிறது என்பதைப் பற்றி விவாதிக்கவும்.

Leave a comment