பகுதி 3 – U Turn Island

Published by

on

ஐந்து பகுதிகளைக் கொண்ட 🚢 கடல் பயணம் என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தில், மூன்றாவது பகுதியை இங்கு பார்ப்போம்.

நோக்கம்:

வாழ்க்கையில் சரியான தேர்வு செய்ய விரும்புவோருக்கு தேவன் உதவுகிறார் என்பதை சிறுவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

அட்டவணை:
  1. பாடல் நேரம் (10 mins)
  2. பேசலாம் வாங்க (10 mins)
  3. வேதாகம நிகழ்வு (20 mins)
  4. செயல்பாடு (10 mins)
  5. விளையாட்டு (10 mins)
பாடல் நேரம்

இந்த “Action Kids” பாடலை நீங்கள் கற்பிக்கலாம்.

பேசலாம் வாங்க

J4K கடல் பயணம் என்பது 5 தீவுகள் வழியாக சிறுவர்களை அழைத்துச் செல்லும் ஒரு சாகசக் கப்பல். கப்பலின் கேப்டன் ஒரு கடற்கொள்ளையர் (பைரேட்). அவர் மிக மோசமான மனிதராய் வாழ்ந்துவந்தார். ஆனால் ஒரு கடல் பயணம் அவர் வாழ்க்கையை தலைகிழாக மாற்றியது. அந்த பயணத்தில் அவர் சந்தித்த ஒரு சிறந்த நண்பரே அவர் வாழ்கை மாற்றங்களுக்கு கரம் என்கிறார். நம்மையும் அதே பயணத்தில் அழைத்து செல்ல விரும்புகிறார்.

இந்த பைரேட்டை சந்திக்க, நாம் வீடியோ கால் (Video call) செய்யப்போகிறோம் (சிறுவர்களுக்கு வீடியோவைக் காட்டும்போது போனில் வீடியோ கால் செய்வது போன்று நடித்து காட்டுங்கள். வீடியோவை சில இடங்களில் பாஸ் (pause) செய்து நீங்கள் சில வார்த்தைகளை கூற வேண்டியது இருக்கும். கீழ் உள்ள ஸ்கிரிப்ட்டை (Script) பயன்படுத்தவும். இந்த பகுதியிலே இன்றைய வேத வசனத்தையும் கற்று கொடுப்பீர்கள்).

U-Turn தீவுக்கான (தீவு #3) ஸ்கிரிப்ட் இங்கே:

நீங்கள்: தம்பி தங்கச்சி உங்க எல்லாருக்கும் பைரேட் பிடுச்சிற்குல? வீடியோ கால் பண்ணலாமா? (உங்கள் ஃபோனைப் பயன்படுத்தி வீடியோ அழைப்பைச் செய்வது போல் செய்யுங்கள்)
பைரேட் வீடியோ: (பைரேட் ஹாய் சொல்வார். பாஸ்வர்ட் (Password) கேட்பார்)
நீங்கள்: (பாஸ்வர்ட் என்பது அன்றைய வேத வசனம். வசனத்தை மூன்று முறை சொல்ல சொல்லுங்கள். வசனம் வாசிக்க அதிக நேரம் எடுத்தால் வீடியோவை இடைநிறுத்தி, தொடரவும்.)
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். [யோவான் 3:16]
பைரேட் வீடியோ: (பைரேட் கடற்கொள்ளையர் உங்களை தீவு முழுவதும் அழைத்துச் சென்று அதைப் பற்றி பேசுவார்)
நீங்கள்: (பைரேட்டிற்கு டாடா சொல்லுங்கள்)

வேதாகம நிகழ்வு

வேத பகுதி: ஜோனா1: 15-17; 2;
கதை சுருக்கம்:

யோனா கப்பலில் இருந்து ஆழ்கடலில் விழுந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் யோனா என்ன உணர்ந்திருப்பார் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? பயந்திருப்பார். குற்ற உணர்வோடு இருந்திருப்பார். முதலே சரியான தேர்வு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று கவலைப்பட்டிருப்பார்.

வாங்க தேவனை பற்றி இப்போ பேசலாம். ஒரு நல்ல கடவுள் மக்களை ஏன் தண்டிக்கிறார் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்! நான் உங்களுக்கு பதில் சொல்ல போகிறேன்.

ஒரு நல்ல நீதிபதி, மக்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப சரியான முறையில் தண்டிக்கிறார். குற்றவாளிகளைத் தண்டிக்காமல் விடுவதில்லை. தேவன் நீதியுள்ளவர். மறுபுறம், தேவன் அன்பானவர். ஞாயமாக தண்டிக்கப்பட்டாலும் மக்கள் அவதிப்படுவதை அவர் விரும்புவதில்லை. உங்கள் பெற்றோரிடம் இருந்து நீங்கள் தண்டனை வாங்கும்போது, உங்கள் பாட்டி உங்களுக்காக பேசுவார்கள் இல்லையா? அதுபோலவே தேவன் உங்களை தண்டனையிலிருந்து தப்புவிக்க விரும்புகிறார்.

தேவனுக்கு இருக்கும் பிரச்சனையை பார்க்கிறீர்களா? ஒரு பக்கம், நம்மை மிகவும் நேசிப்பதால் நாம் செய்யும் கெட்ட காரியங்களுக்காக நம்மை தண்டிப்பது அவர் விரும்பவில்லை. ஆனால் மறுபுறம், அவர் நீதியுள்ளவர் என்பதால் தண்டித்தே ஆகவேண்டும். நீங்களும் நானும் உட்பட உலகில் உள்ள அனைவரும் தவறு செய்திருக்கிறார்கள் என்று வேதம் சொல்கிறது. தேவனிடமிருந்து நித்திய பிரிவினை என்பது தண்டனையாகும். அது நரகம். அது எவ்வளவு மோசமான நிலமை என்று கற்பனை செய்யமுடிகிறதா?

நாம் நரகத்தை அனுபவிப்பதை தேவன் விரும்பவில்லை. அதனால் நமக்கு உதவி செய்ய மனிதனானார். 2000 ஆண்டுகளுக்கு முன்பு பெத்லகேமில் மனிதனாகப் பிறந்தார். நாம் அவரை இயேசு என்று அழைக்கிறோம். அவர் நல்ல வாழ்க்கை வாழ்ந்தார். அவர் சென்ற இடமெல்லாம் நல்லது செய்தார். அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றாலும் குற்றவாளியாக சிலுவையில் அறையப்பட்டார். அவர் சிலுவையில் மரித்தார். நாம் பெற வேண்டிய தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார். அவர் சக்தி வாய்ந்தவர் என்பதால், அவர் மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். இன்று அவர் பரலோகத்தில் வீற்றிருக்கிறார். உங்களுக்கும் எனக்கும் ஒரு இடத்தைத் தயார் செய்துவருகிறார். தேவனிடம் மன்னிப்பும் உதவியும் கேட்பவர்கள் மன்னிக்கப்படுகிறார்கள் . அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கிறார்கள். தேவன் எவ்வளவு நல்லவர் என்று பார்க்கிறீர்களா?

யோனாவுக்கும் இதுதான் நடந்தது. யோனா மாண்டுபோவதை தேவன் விரும்பவில்லை. யோனா கடலில் விழுந்து கொண்டிருந்தபோது, யோனாவை விழுங்க தேவன் ஒரு பெரிய மீனை அனுப்பினார். யோனா மீனின் வயிற்றில் 3 நாட்கள் இருந்தார். தேவன் தன்னைக் காப்பாற்றியத்தை நினைத்து யோனா மிகவும் சந்தோஷமானார். மீனின் வயிற்றில் இருந்து தேவனிடம் பேசினார். ஆழ்கடலில் மூழ்கிக்கொண்டிருந்த தனது ஜெபத்தைக் கேட்ட தேவனுக்கு நன்றி சொன்னார். தேவன் எவ்வளவு நல்லவர் என்பதையும், அவரிடம் உதவி கேட்பவர்களுக்கு அவர் எவ்வாறு உதவுகிறார் என்பதையும் யோனா நன்கு அறிந்துகொண்டார்.

யோனாவுக்கு உதவிய தேவன் உங்களுக்கும் உதவுவார்! தேவன் யோனாவுக்கு உதவியது மட்டுமல்லாமல், யோனா மூலம் பலருக்கு உதவினார். என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? தயவுசெய்து அடுத்த வாரம் வர தவறவிடாதீர்கள்!

செயல்பாடு

ஒவ்வொரு வயதினருக்கும் செயல்பாடு வேறுபடும் – Special (3-7 வயது), Strong(8-12 வயது), Dee(13-15 வயது)

Special (3-7 வயது)
பக்கம் 1: கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பார்த்து, சிறுவர்களுக்கு காகித மீன் தயாரிக்க உதவுங்கள். “தேவன் யோனாவை எப்படிக் காப்பாற்றினார்?” என்ற கேள்விக்கு விடையாக மீனை ஒர்க் ஷீட்டில் ஒட்டவும்.
ஓரிகமி மீன்: https://youtu.be/djPgd1m6IMY
பக்கம் 2: படங்களைப் பார்த்து கதையைச் சொல்ல சொல்லுங்கள்.

Strong (8-12 years)
பக்கம் 1: வண்ணம் தீட்ட சொல்லுங்கள். அவர்கள் அவ்வாறு செய்யும்போது, இயேசு ஏன் மரித்தார் என்று அவர்களிடம் கேட்டு, அவர்களின் பதில்களின் அடிப்படையில் உரையாடலை தொடருங்கள்.
பக்கம் 2:

வட்டங்களில் பொருத்தமான செய்திகளுடன் படங்களை இணைக்க சொல்லுங்கள். பதில்களுக்கு படத்தைப் பார்க்கவும். இயேசுவுடனான உங்கள் உறவைப் பற்றிய உங்கள் தனிப்பட்ட சாட்சியைப் பகிர்ந்து கொள்ள இந்த நேரத்தைப் பயன்படுத்தவும் (நீங்கள் எப்படி இயேசுவுடன் நேரத்தை செலவிடுகிறீர்கள்; அவர் உங்களுடன் எப்படி பேசுகிறார், முதலியன) .

விளையாட்டு

ஒரு பெரிய தொட்டி / வாளியில் தண்ணீர் நிரப்பவும். சில செடிகள், பூக்கள் மற்றும் புல் சேர்க்கவும். ஒரு ஐஸ்கிரீம் குச்சியில் ஒரு முகத்தை வரையவும். இது யோனாவைக் குறிக்கும். சிறுவர்களுக்கு யோனாவைக் காட்டுங்கள், பின்னர் அதை தாவரங்கள் நிறைந்த தண்ணீரில் ஆழமாக மறைக்கவும். சிறுவர்களை கையை தண்ணீரில் உள்ளெ விட்டு ஜோனாவைக் கண்டுபிடிக்கச் சொல்லுங்கள். உங்கள் வகுப்பில் 5 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இருந்தால், சிறுவர்களை 5 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கவும். ஒவ்வொரு அணியும் ஒன்றன் பின் ஒன்றாக விளையாடவும், ஒவ்வொரு குழுக்களுக்கும் நேரம் ஒதுக்கவும். குறைந்த நேரத்தில் யோனாவை கண்டுபிடிக்கும் குழுவை வெற்றியாளராக அறிவிக்கவும்.

Leave a comment