பகுதி 4 – Upright Island

Published by

on

ஐந்து பகுதிகளைக் கொண்ட 🚢 கடல் பயணம் என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தில், நான்காவது பகுதியை இங்கு பார்ப்போம்.

நோக்கம்:

சரியான தேர்வு செய்யும்போது தங்களுக்கும் தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் உதவுவார்கள் என்பதை சிறுவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்..

அட்டவணை:
  1. பாடல் நேரம் (10 mins)
  2. பேசலாம் வாங்க (10 mins)
  3. வேதாகம நிகழ்வு (20 mins)
  4. செயல்பாடு (10 mins)
  5. விளையாட்டு (10 mins)
பாடல் நேரம்

இந்த “Action Kids” பாடலை நீங்கள் கற்பிக்கலாம்.

பேசலாம் வாங்க

J4K கடல் பயணம் என்பது 5 தீவுகள் வழியாக சிறுவர்களை அழைத்துச் செல்லும் ஒரு சாகசக் கப்பல். கப்பலின் கேப்டன் ஒரு கடற்கொள்ளையர் (பைரேட்). அவர் மிக மோசமான மனிதராய் வாழ்ந்துவந்தார். ஆனால் ஒரு கடல் பயணம் அவர் வாழ்க்கையை தலைகிழாக மாற்றியது. அந்த பயணத்தில் அவர் சந்தித்த ஒரு சிறந்த நண்பரே அவர் வாழ்கை மாற்றங்களுக்கு கரம் என்கிறார். நம்மையும் அதே பயணத்தில் அழைத்து செல்ல விரும்புகிறார்.

இந்த பைரேட்டை சந்திக்க, நாம் வீடியோ கால் (Video call) செய்யப்போகிறோம் (சிறுவர்களுக்கு வீடியோவைக் காட்டும்போது போனில் வீடியோ கால் செய்வது போன்று நடித்து காட்டுங்கள். வீடியோவை சில இடங்களில் பாஸ் (pause) செய்து நீங்கள் சில வார்த்தைகளை கூற வேண்டியது இருக்கும். கீழ் உள்ள ஸ்கிரிப்ட்டை (Script) பயன்படுத்தவும். இந்த பகுதியிலே இன்றைய வேத வசனத்தையும் கற்று கொடுப்பீர்கள்).

Upright தீவுக்கான (தீவு #4) ஸ்கிரிப்ட் இங்கே:

நீங்கள்: தம்பி தங்கச்சி உங்க எல்லாருக்கும் பைரேட் பிடுச்சிற்குல? வீடியோ கால் பண்ணலாமா? (உங்கள் ஃபோனைப் பயன்படுத்தி வீடியோ அழைப்பைச் செய்வது போல் செய்யுங்கள்)
பைரேட் வீடியோ: (பைரேட் ஹாய் சொல்வார். பாஸ்வர்ட் (Password) கேட்பார்)
நீங்கள்: (பாஸ்வர்ட் என்பது அன்றைய வேத வசனம். வசனத்தை மூன்று முறை சொல்ல சொல்லுங்கள். வசனம் வாசிக்க அதிக நேரம் எடுத்தால் வீடியோவை இடைநிறுத்தி, தொடரவும்.)
அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள் [1 பேதுரு 4:10]
(or)
உங்களில் ஒவ்வொருவரும் தேவனிடமிருந்து வரங்களைப் பெற்றுக்கொண்டீர்கள். எனவே நல்ல பணியாட்களாக இருந்து தேவனுடைய வரங்களை ஒருவருக்கொருவர் சேவை செய்வதற்குப் பயன்படுத்துங்கள் [1 பேதுரு 4:10 (Tamil easy reading version)]
பைரேட் வீடியோ: (பைரேட் கடற்கொள்ளையர் உங்களை தீவு முழுவதும் அழைத்துச் சென்று அதைப் பற்றி பேசுவார்)
நீங்கள்: (பைரேட்டிற்கு டாடா சொல்லுங்கள்)

வேதாகம நிகழ்வு

வேத பகுதி: ஜோனா 3
கதை சுருக்கம்:

நினிவேக்கான பணியைப் பற்றி தேவன் யோனாவிடம் இரண்டாவது முறையாக பேசினார். யோனா இந்த முறை சரியான தேர்வு செய்தார் என்று நினைக்கிறீர்களா? ஆம் சரியானதை அவர் செய்தார்! அவர் நினிவே மக்களிடம் சென்று, தேவன் எப்படி நீதியுள்ளவர் என்றும் அவர்கள் செய்யும் எல்லா கெட்ட காரியங்களுக்காகவும் அவர்களைத் தண்டிப்பார் என்றும் கூறினார்.

தேவனிடமிருந்து இந்தச் செய்தியைக் கேட்ட ராஜா, தன் தவறுகளை உணர்ந்து, தானும் தன் மக்களும் செய்த எல்லாத் தவறுகளுக்காகவும் வருந்தினார். ராஜா உடனடியாக உபவாசத்தை அறிவித்தார். ராஜாவும் அனைத்து மக்களும் சேர்ந்து தேவனிடம் மன்னிப்பு கேட்டார். தேவன் என்ன பதில் அளித்தார் என்று நினைக்கிறீர்கள்? நம் நல்ல தேவன் அவர்களை மன்னித்தார். நியாயமாக வராயிருந்த தண்டனைகளை நீக்கி போட்டார்.

தேவனுக்குக் கீழ்ப்படிந்து, நினிவே மக்களுக்கு தேவ செய்தியை அறிவித்ததினால் யோனா முழு தேசத்திற்கும் உதவினார். யோனா சரியான தேர்வு செய்ததால் அன்று ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் (1,20,000) காப்பாற்றப்பட்டனர். நீங்கள் சரியான தேர்வு செய்தால், உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் உதவுவீர்கள்.

செயல்பாடு

ஒவ்வொரு வயதினருக்கும் செயல்பாடு வேறுபடும் – Special (3-7 வயது), Strong (8-12 வயது), Deep (13-15 வயது)

Special (3-7 வயது)
பக்கம் 1: மற்றவர்களுக்கு எப்படியெல்லாம் உதவ முடியும் என்று பிள்ளைகளிடம் கேளுங்கள். Worksheet ல் கொடுக்கப்படடுள்ள  மக்களைக் காட்டி உரையாடலை நடத்துங்கள். Worksheet ல் கொடுக்கப்படடுள்ள மக்களுக்கு கீழே உள்ள Box-ல், மற்றவர்களுக்கு எவ்விதம் உதவ முடியும் என்பதைக் குறித்து படம் வரையை சொல்லுங்கள்.
பக்கம் 2: சிறுவர்கள் கீழ்ப்படிய வேண்டிய பெரியோரை (பெற்றோர், தாத்தா-பாட்டி, ஆசிரியர்கள்) வரையுமாறு சொல்லுங்கள்.

Strong (8-12 வயது)
பக்கம் 1:

ஒர்க் ஷீட்டில் உலகில் சரித்திரம் படைத்த இயேசுவின் 4 நண்பர்கள் உள்ளனர். அவர்கள் அறிவியல், இறையியல், மருத்துவம், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் பங்களித்துள்ளனர். ஃபோன் கேமரா/ QR குறியீடு ரீடரை பயன்படுத்தி பணித்தாளில் கொடுக்கப்பட்டுள்ள QR-ஐ செய்ய சொல்லுங்கள். முன் பக்கத்திலுள்ள பெரிய மனிதர்களின் பெயர்கள் மற்றும் சாதனைகளைக் காட்டும் தளத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லும். முன் தாளில் உள்ள வெற்றிடங்களை சரியான நபரின் பெயருடன் பொறுத்த பிள்ளைகளுக்கு உதவுங்கள். படத்தில்கள் உள்ளன.

பக்கம் 2: தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு எப்படிச் சேவை செய்வது என்பதைப் பற்றி சிந்திக்க பிள்ளைகளுக்கு ஒரு நிமிடம் கொடுங்கள். கொடுக்கப்பட்டுள்ள பெட்டியில் அவர்களின் எண்ணங்களை வரையச் சொல்லுங்கள்.

விளையாட்டு

ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு சிறிய தாள் (ஒரு உள்ளங்கையின் அளவு) கொடுங்கள். அவர்கள் வளர்ந்தபின் என்ன ஆக விரும்புகிறார்கள் என்பதை எழுதச் சொல்லுங்கள் (உதா. ஆசிரியர், போதகர், மருத்துவர் , டெய்லர், இன்ஜினியர், முதலியன) அவர்களின் பெயரையும் கீழே எழுதி உங்களிடம் ஒப்படைக்கச் சொல்லுங்கள். ஒரு பிள்ளையை முன் வருமாறு அழைப்பு கொடுங்கள். சிறுவர்கள் உங்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து ஒரு அட்டையைத் தேர்ந்தெடுத்து முன் நிற்கும் பிள்ளையின் தலைக்கு மேல் வைக்கவும். அட்டையில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை இந்தக் பிள்ளை பார்க்க கூடாது. மற்ற எல்லா சிறுவர்களும் எந்த சத்தமும் இல்லாமல் அட்டையில் எழுதப்பட்ட தொழிலை நடித்து காட்ட வேண்டும். முன் நிற்கும் பிள்ளை சரியான தொழிலைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், பெரிய கனவுகளைக் கண்டதற்காக சிறுவர்களை வாழ்த்தவும். தேவனின் உதவியைக் கேட்டால் அவர்களின் கனவுகளை நிறைவேற்ற அவர் உதவுவார் என்பதை நினைவூட்டவும். நேரம் அனுமதிக்கும் அளவு மற்றொரு பிள்ளைகொண்டு மற்றொரு அட்டையை பயன்படுத்தி விளையாட்டைத் தொடரவும்.

Leave a comment