
அக்டோபர் 8, 2023 அன்று, 19 வயதுடைய பெண் ஒருவர் தனது இரண்டு தங்கைகளையும் (6 & 7 வயது) ஆத்திரத்தில் கொலை செய்தார். இந்த கோர சம்பவம் வேறு எங்கேயோ நடந்ததல்ல – இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு நகரத்தில் நடந்தது. சபைச் செல்லும் சிறுவர்களுக்கு சமீபத்தில் கருத்துக் கணிப்பு நடத்தினோம். அதில் 10 சிறுவர்களில் 4 பேர் கோபம் என்ற குணத்துடன் போராடுவதாகக் கூறினர். கோபம் வருகிறது என்று சொன்ன ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளிலும் பள்ளிகளிலும் தாங்கள் சந்திக்கும் முதன்மைக் கஷ்டம் ‘கோபம்’ என்று கூறினார்கள். நாம் வாழும் உலகம் ஒரு கோபமான இடமாக மாறிவிட்டது! இல்லையா?
இதற்காகவே, கோபத்தின் அகோரத்தை விவரிக்க 4 பகுதி கொண்ட ஆங்கிரி பெர்ட் (Angry Bird) என்ற பாட திட்டத்தை அமைத்துளோம். தேவன் காட்டும் முறையில் கோபத்தை எதிர்த்துப் போராடுவது எப்படி என்று பகிர்ந்துகொள்வதே எங்கள் குறிக்கோள்.
குறிப்பு: இது எல்லா வயதினரையும் மனதில் வைத்து எழுதப்பட்டது. உங்கள் அனுபவத்தைப் பயன்படுத்தி, உங்கள் சிறுவர்களின் வயது அடிப்படையில் பாட செய்தியின் ஆழத்தை ஏற்றி/ குறைக்கவும்.
ஞாயிறு பள்ளிக் சிறுவர்களுக்கான நடைமுறைப் பாடத் திட்டம் பற்றிய தகவல்களுக்கு, எங்கள் வாட்ஸ்அப் குழுவில் இணையவும்!
https://chat.whatsapp.com/JWglQvONCPAAOhAcrIlXsF
ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே அழுத்தவும் –
J4K Lesson Plan > Outline
Click the buttons for detailed lessons.
01
ஏன் கோபமாக இருக்கிறாய், சொல்
வேத பகுதி: ஆதியாகமம் 4: 1-12
வேதாகம நிகழ்வு: காயீன் & ஆபேல்
செய்தி:
இயேசுவிடம் உங்கள் கோபத்தைப் பற்றி பேசுகிறீர்களா? உங்களுக்கு என்ன கோபம், யார் உங்களை கோபப்படுத்துகிறார்கள், ஏன் கோபப்படுகிறீர்கள் என்று அவரிடம் சொல்லுங்கள். அதிலிருந்து மீள அவர் உங்களுக்கு உதவுவார்! உங்கள் கோபத்தை நீங்கள் அடக்கிக் கொள்ள அல்லது ஆளுகை செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
மனப்பாட வசனம்:
உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும். [பிரசங்கி 7:9]
02
கோபமான சூழ்நிலையிலிருந்து விலகிச் செல்
வேத பகுதி: ஆதியாகமம் 26: 12 – 33
வேதாகம நிகழ்வு: ஈசாக்கு & அபிமெலேக்
செய்தி:
உங்களை கோபப்படுத்தக்கூடிய சூழ்நிலையிலிருந்து எவ்வளவு விரைவாக விலக முடியுமோ அவ்வளவு விரைவாக விலகிச் செல்லுங்கள். நீங்கள் அப்படி செய்தால் தேவன் உங்களுக்காக யுத்தம் செய்வார். அவர் உங்களோடு இருப்பதை மற்றவர்களுக்குக் காட்டுவார்.
மனப்பாட வசனம்:
கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். [நீதிமொழிகள் 15:18]
03
கோபத்தோடே இருக்காதே
வேத பகுதி: I சாமுவேல் 25: 1 – 39a
வேதாகம நிகழ்வு: தாவீது & நாபால்
செய்தி:
நீங்கள் கோபப்படும் நாளில், அதைத் தீர்க்க உங்களுக்கு அந்த நாளில் தோராயமாக மாலை 6 மணி வரை மட்டுமே நேரம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த நேரத்திற்குள் கோபத்திலிருந்து உங்களை விரைவாக விடுவித்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் கோபத்தை இதயத்தில் தங்க வைக்கும் முட்டாள் போல் ஆகிவிடுவீர்கள்.
மனப்பாட வசனம்:
நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; [எபேசியர் 4:26]
04
மற்றவர்களை கோபப்படுத்தாதே
வேத பகுதி: 1 இராஜாக்கள் 12: 1- 19
வேதாகம நிகழ்வு: ரெகொபெயாம் & இஸ்ரவேலர்கள்
செய்தி:
மற்றவர்களை கோபப்படுத்தாதீர்கள். கடுமையாகப் பேசினால் பிறரைக் கோபப்படுத்துவீர்கள். ஒரு மென்மையான பதில் மூலம் நீங்கள் சூழ்நிலைகளை சமாதானப்படுத்தலாம்.
மனப்பாட வசனம்:
மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும். [நீதிமொழிகள் 15:1]

Leave a comment