பகுதி 1 – Angry Bird

Published by

on

நான்கு பகுதிகளைக் கொண்ட 😡 Angry Bird என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், முதலாவது பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

வேத பகுதி: ஆதியாகமம் 4: 1-12

வேதாகம நிகழ்வு: காயீன் & ஆபேல்

செய்தி:
கோபம் கெட்ட காரியங்களைச் செய்ய வைக்கிறது. நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்தாவிட்டால் வாழ்க்கையில் அனைத்தையும் இழந்துவிடுவீர்கள். நீங்கள் கோபமாக இருக்கும்போது இயேசுவிடம் பேசுங்கள். அவர் உங்களுக்கு சரியானதைச் செய்ய உதவுவார்.
அட்டவணை:
  1. பாடல் நேரம் (10 mins)
  2. பேசலாம் வாங்க (10 mins)
  3. மனப்பாட வசனம் ( 5 mins)
  4. வேதாகம நிகழ்வு (25 mins)
  5. செயல்பாடு நேரம் (10 mins)
பாடல் நேரம்

சிறுவர்களை பாடல் வேளையில் நடத்துங்கள்.

பேசலாம் வாங்க

நோக்கம்::

கோபத்தை உலகளாவிய பிரச்சனையாக (அனைவருக்கும் கோபம் வரும்) நிறுவ இந்தப் பகுதியைப் பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்: ஒரு சிறிய பந்து

செய்முறை:

  • வகுப்பில் உள்ள ஒரு சிறுவரிடம் பந்தை பாஸ் செய்யுங்கள்.
  • பந்தை பிடித்த சிறுவர் இந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் “யார் உன்னை மிகவும் கோபப்படுத்துகிறார்கள்?” (எ.கா. சகோதரன்/சகோதரி/நண்பர் போன்றவை)
  • பின்னர் அந்தக் சிறுவர் மற்றொரு சிறுவருக்கு பந்தை பாஸ் செய்ய வேண்டும்.
  • பந்தை பிடித்த அந்த சிறுவர் அதே கேள்விக்கு பதில் அளித்து விளையாட்டை தொடருவார்.
  • நேரம் அனுமதிக்கும் அளவு விளையாட்டைத் தொடரவும்.
  • விளையாட்டின் முடிவில் இந்த கேள்வியை கேளுங்கள் – கோபம் வரும்போது என்ன செய்வீர்கள்?

செய்தி:

நீங்கள் ஒன்றை கவனித்தீர்களா, இங்கே நம்மில் யாருமே எனக்கு கோபம் வராது என்று சொல்லவில்லை. நம் அனைவருமே அவ்வப்போது கோபப்படுகிறோம். கோபம் வந்தால் என்ன செய்ய வேண்டிய சரியான காரியம் என்ன என்பது பற்றி இன்று பேசப் போகிறோம். நீங்கள் தயாரா?

மனப்பாட வசனம்

வேதாகம நிகழ்வு

வேத பகுதி: ஆதியாகமம் 4: 1-12
சம்பவ சுருக்கம்:

காயீனும் அவனுடைய சகோதரன் ஆபேலும் தேவனுக்கு ஒரு பரிசு கொடுத்தனர். ஆபேலின் பரிசில் தேவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். சில கெட்ட காரியங்களைச் செய்ததால் காயீனின் பரிசை அவர் ஏற்கவில்லை. காயீன் தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, தன் சகோதரனிடம் மிகவும் கோபம் கொண்டான். தனது சகோதரனை எப்படி காயப்படுத்துவது என்று திட்டமிட்டான். தேவன் இதைக் கவனித்து, காயீனிடம் பேச வந்தார். அவர் அவரிடம், “காயீன், நீ ஏன் கோபமாகவும் சோகமாகவும் இருக்கிறாய்?”என்று மெதுவாக கேட்டார். அவனது பரிசு ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதையும் தேவன் விளக்கினார். ஆனால் காயீன் தேவனிடம் பேச விரும்பவில்லை. காயீன் என்ன திட்டமிட்டு கொண்டிருக்கிறான் என்பதை தேவன் அறிந்திருந்தார், அதனால் அவர் அவனிடம் “காயீன், பாவம் உன்னை கெட்ட காரியங்களைச் செய்ய வைக்க விரும்புகிறது. ஆனால் உன்னால் அதை வெல்ல முடியும்!” என்று எச்சரித்தார். இன்னும் காயீன் தேவனிடம் பேச விரும்பவில்லை. காயீன் தனது தீய திட்டத்தை நிறைவேற்றினான். பாவம் செய்தான். அவன் ஆபேலை மோசமாக காயப்படுத்தினான். ஆபேல் மரித்துப் போனான். காயீனுக்கு என்ன நடந்தது என்று தெரியுமா? காயீன் எல்லாவற்றையும் இழந்தான் – அவனுடைய வேலை தாங்க முடியாததாக மாறியது, தனது வீட்டை இழந்தான், அவன் அலைந்து திரிந்தவனாக மாறினான். எல்லாவற்றிற்கும் மேலாக தேவனை இழந்தான். வாழ்க்கையின் மகிழ்ச்சியை இழந்தான். அவன் சபிக்கப்பட்ட மனிதனாக மாறினான்.
கோபம் கெட்ட காரியங்களைச் செய்ய வைக்கிறது. நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்தாவிட்டால் வாழ்க்கையில் அனைத்தையும் இழந்துவிடுவீர்கள்.
நீங்கள் கோபமாக இருக்கும்போது தேவனிடம் பேசுங்கள். அப்போது தேவன் உங்களுக்கு சரியானதைச் செய்ய உதவுவார்.
செயல்பாடு நேரம்

தேவையான பொருள்கள்: காகித கப், வண்ண காகித துண்டுகள், பசை, பேனா அல்லது பென்சில், கத்திரிக்கோல்

ஆயத்தம்:

  • காகிதக் கப்பின் அடிப்பகுதியில் கத்தரிக்கோலால் ஒரு சிறிய ஓட்டை போடுங்கள்.
  • வண்ண காகிதத்தை நீண்ட கீற்றுகளாக வெட்டுங்கள்.

செய்முறை:

  • ஒரு துளை போட்ட காகித கப்பையும், சில வண்ண காகித துண்டுகளையும் ஒவொரு சிறுவருக்கும் கொடுங்கள்.
  • காகிதக் கோப்பையின் வெளியே ஒரு முகத்தை வரையச் சொல்லுங்கள்.
  • ஒவ்வொரு வண்ணத் துண்டு காகிதத்திலும் அவர்களை கோபப்படுத்துகிற காரியங்கள் என்ன என்று எழுதவோ அல்லது வரையவோ சொல்லுங்கள் .
  • பின்னர் காகித துண்டுகளின் ஒரு முனையை காகிதக் கப்பின் உள் விளிம்பில் ஒட்ட வேண்டும் (படத்தைப் பார்க்கவும்).
  • காகித துண்டுகளின் மற்ற முனையை கப்புக்குள் வைக்க வேண்டும்.
  • அனைவரும் செய்து முடித்தபின், கீழே உள்ள துளையை பயன்படுத்தி, காற்றை ஊத்தி, காகித துண்டுகளை வெளியே தள்ள சொல்லுங்கள்.
  • காகித கீற்றுகள் அழகாக வெளியே பறக்கும்.

செய்தி:

உங்கள் இதயம் இந்த கப்பை போன்றது. காகிதக் கீற்றுகளில் நீங்கள் எழுதியதைப் போல உங்களைக் கோபப்படுத்தும் பல விஷயங்கள் இருக்கும். ஆனால் அதையெல்லாம் வெளியே தள்ளவில்லை என்றால், உங்கள் இதயத்தை நல்ல விஷயங்களால் நிரப்ப முடியாது.

நீங்கள் கோபமாக இருக்கும்போது தேவனிடம் பேசுங்கள், சரியானதைச் செய்ய அவர் உங்களுக்கு உதவுவார்.

டாட்டா

அர்ப்பணிப்பின் ஜெபத்தோடு பாடத்தை நிறைவு செய்யுங்கள்.

Leave a comment