நான்கு பகுதிகளைக் கொண்ட 😡 Angry Bird என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், இரண்டாவது பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
வேத பகுதி: ஆதியாகமம் 26: 12 – 33
வேதாகம நிகழ்வு: ஈசாக்கு & அபிமெலேக்
செய்தி:
| உங்களை கோபப்படுத்தக்கூடிய சூழ்நிலையிலிருந்து எவ்வளவு விரைவாக விலக முடியுமோ அவ்வளவு விரைவாக விலகிச் செல்லுங்கள். நீங்கள் அப்படி செய்தால் தேவன் உங்களுக்காக யுத்தம் செய்வார். அவர் உங்களோடு இருப்பதை மற்றவர்களுக்குக் காட்டுவார். |
அட்டவணை:
- பாடல் நேரம் (10 mins)
- பேசலாம் வாங்க (10 mins)
- மனப்பாட வசனம் ( 5 mins)
- வேதாகம நிகழ்வு (25 mins)
- செயல்பாடு நேரம் (10 mins)
பாடல் நேரம்
சிறுவர்களை பாடல் வேளையில் நடத்துங்கள்.
பேசலாம் வாங்க
நோக்கம்:
அன்றாட வாழ்க்கையில் நம்மை கோபப்படுத்த தொந்தரவு செய்பவா்களைப் பற்றி பேச இந்தப் பகுதியைப் பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்: கொடுக்கப்பட்ட இரண்டு படங்கள்
1. நேரடி தாக்குதல் (Direct Bullying)
2. இணைய தாக்குதல் (Cyber Bullying)


செய்முறை:
- சண்டைக்காரர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று சிறுவர்களை கண்டுபிடிக்க சொல்லுங்கள்.
- சிறுவர்கள் தடையின்றி பேச தொடங்கியதுடன், பள்ளியிலோ அல்லது அக்கம் பக்கத்திலோ அவர்கள் சந்தித்த கோபப்படுத்துபவர்களைப் பற்றிய தங்கள் தனிப்பட்ட அனுபவங்களைப் பகிரச் சொல்லுங்கள்.
பல சிறுவர்களுக்கு இது மிகவும் உணர்ச்சிகரமான தலைப்பு அவர்களால் அதை வெளிப்படையாகப் பகிர முடியாத ஒன்று என்பதை நினைவில் கொள்ளவும்.
மனப்பாட வசனம்
கை அசைவுகளைப் (Actions) பயன்படுத்தி பின்வரும் மனப்பாட வசனத்தை சிறுவர்களுக்குக் கற்பிக்கவும்.
கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். [நீதிமொழிகள் 15:18]
வேதாகம நிகழ்வு
வேத பகுதி: ஆதியாகமம் 26: 12 – 33
சம்பவ சுருக்கம்:
| ஈசாக்கு தேவனை நேசித்தார். அவருடன் தினமும் பேசுவார். தேவன் அவரை ஆசீர்வதித்து அவருடைய செல்வத்தைப் பெருகச் செய்தார். அவருக்கு நிறைய மந்தைகளும் வேலைக்காரர்களும் இருந்தனர். இது அண்டை வீட்டாரை (பெலிஸ்தியர்களை) மிகவும் பொறாமைப்படுத்தியது. அதனால், அவரை தொந்தரவு செய்தார்கள். ஈசாக்கின் தந்தை ஆபிரகாம் தோண்டிய கிணறுகளையெல்லாம் மூடிவிட்டார்கள். அந்நாட்டின் அரசனான அபிமெலேக்கும் ஈசாக்கின் மீது பொறாமை கொண்டார். ஈசாக்கை தங்கள் இடத்தைவிட்டு வேறு இடத்தில் குடியேறும்படி கட்டளையிட்டார். ஈசாக்கின் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? ஈசாக்கு விலகிச் சென்றார். எதிர்த்துப் போராடவில்லை. தேவனிடம் பேசியிருப்பார். அவர் அவர்களை விட்டு கேரார் பள்ளத்தாக்குக்கு சென்றார். பெலிஸ்தர்கள் மூடிப்போட்ட கிணறுகளை மீண்டும் திறந்தார். ஆனால் அந்த சண்டைக்காரா்கள் அவரை சும்மா விடவில்லை. அவர்கள் திரும்பி வந்து அவர் மீண்டும் திறந்து வைத்த கிணறுகளை திரும்பவும் மூடினார்கள். ஈசாக்கின் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? ஈசாக்கு விலகிச் சென்றார். எதிர்த்துப் போராடவில்லை. தேவனிடம் பேசியிருப்பார். புதிய கிணறு தோண்டினார். நல்ல குடிநீரைக் கண்டுபிடிக்க தேவன் அவருக்கு உதவினார். சண்டைக்காரா்கள் திரும்பி வந்தனர். “இந்த நிலமும் எங்களுடையது. தண்ணீரும் எங்களுடையது” என்று தகராறு செய்தனர். ஈசாக்கின் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? ஈசாக்கு விலகிச் சென்றார். எதிர்த்துச் சண்டையிடவில்லை. மற்றொரு கிணறு தோண்டினார். அதற்கு சித்னா (எதிர்ப்பு) என்று பெயரிட்டார். மிரட்டல் விடுத்தவர்கள் மீண்டும் தகராறு செய்தனர். ஈசாக்கு எதிர்த்துச் சண்டையிடவில்லை. மற்றொரு கிணறு தோண்டினார். ஆனால் இந்த முறை சண்டைக்காரர்கள் சோர்வடைந்து ஈசாக்கை விட்டுவிட்டனர். ஈசாக்கு அந்த கிணற்றிற்கு ரெகொபோத் என்று பெயரிட்டார். அதற்கு “கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார்” என்று பொருளாகும். ஈசாக்கு தன்னை சீண்டியவர்களை தேவனை சார்ந்து கோபப்படுத்தக்கூடிய சூழ்நிலையிலிருந்து விலகிச் சென்ற விதம் தேவனுக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. தேவன் ஈசாக்குக்கு தாிசனமாகி, அவரை இன்னும் ஆசீர்வதிப்பதாக வாக்குறுதி அளித்தார். சண்டைக்காரர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியுமா? ஈசாக்கைப் பார்க்க அவர்கள் திரும்பி வந்தனர். ஆனால் சண்டை போட வரவில்லை நண்பர்களாகும் படி வந்தனர். தேவன் ஈசாக்கோடு இருந்து அவருக்கு உதவுவதால், அவர்கள் ஈசாக்கோடு நண்பர்களாக விரும்பினார். செய்தி: உங்களை கோபப்படுத்தக்கூடிய சூழ்நிலையிலிருந்து எவ்வளவு விரைவாக விலக முடியுமோ அவ்வளவு விரைவாக விலகிச் செல்லுங்கள். நீங்கள் அப்படி செய்தால் தேவன் உங்களுக்காக யுத்தம் செய்வார். அவர் உங்களோடு இருப்பதை மற்றவர்களுக்குக் காட்டுவார். |
செயல்பாடு நேரம்
தேவையான பொருள்கள்: பலூன், செய்தித்தாள், Woolen நூல், Marker/ Sketch, கால் மிதி
ஆயத்தம்:
- Woolen நூலை சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்.
செய்முறை:
- ஒரு பலூன், செய்தித்தாள் மற்றும் ஒரு கொத்து துண்டு நூலை ஒவ்வொரு சிறுவருக்கும் கொடுங்கள்.
- செய்தித்தாளை வைத்து சிறு காகித பந்துகளை செய்து அவைகளை பலூனுக்குள் போடச் சொல்லுங்கள்.

- பலூன் பந்து போல ஆன பின்பு உல்லன் நூல் கொண்டு கட்டச் சொல்லுங்கள் . (படத்தை பார்க்கவும்)
- பலூன் பந்தில் கண், மூக்கு மற்றும் வாய் போன்றவற்றை வரைந்து அவர்களின் பெயர்களை கீழே எழுதச் சொல்லுங்கள்.
- பலூன் பந்து இப்பொழுது விளையாட ரெடி.
விளையாட்டு விதிமுறை:
- சிறுவர்களை ஒரு வட்டமாக நிற்கச் சொல்லுங்கள்.
- வட்டத்தின் மையத்தில் கால் மிதியை வைக்கவும்.
- ஒரு பிள்ளையை வட்டத்திற்கு வெளியே நிற்க சொல்லுங்கள். இவர் தான் “கால் மிதி” போல் நடிப்பார்.

- மற்ற சிறுவர்கள் தங்கள் பந்துகளை வட்டத்தின் மையத்தில் உள்ள உண்மையான கால் மிதிவை நோக்கி குறிவைக்க வேண்டும்.
- அவர்களின் பலூன் பந்துகள் கால் மிதிகுள் விழ வேண்டும்.
- பந்துகள் கால் மிதிக்கு வெளியே விழுந்தால், பந்தின் உரிமையாளர் வட்டத்தை விட்டு வெளியேற வேண்டும். மேலும் அவர்களால் விளையாட்டில் தொடர முடியாது.
- கால் மிதி போன்று நடிப்பவரை அழைத்து பந்தை அவன் மேல் (கால் மிதி மேல்) வீசினவர்களை என்ன செய்ய போகிறார்கள் என்று கேளுங்கள் . 1. அவர்களை எதிர்த்து போராடலாம் அல்லது 2. புறக்கணிக்கலாம்.
- அவர்கள் எதிர்த்து போராட தேர்வுசெய்தால், அவர்கள் “கால் மிதி”யாக விளையாடுவதற்கு வேறொரு நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் அவர்கள் மற்றவர்களுடன் வட்டத்தில் சேரலாம்.
- அவர்கள் புறக்கணிக்க தேர்வுசெய்தால், அவர்கள் தொடர்ந்து கால் மிதியாக இருப்பார்கள்.
- புறக்கணிக்க தேர்ந்தெடுக்கும் சிறுவர்களை ரகசியமாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
- வட்டத்தில் சிறுவர்கள் இருக்கும் வரை சுற்றை தொடரவும்.
- விளையாட்டை மீண்டும் விளையாட புதிய கால் மிதியை தேர்வுசெய்யுங்கள்.
- விளையாட்டின் வெற்றியாளர் “கால் மிதி”யாக நடித்து தாக்குதல்களை அதிகம் புறக்கணித்தவர்.
- விளையாட்டின் முடிவில் வெற்றியாளர்களை அறிவியுங்கள்.
செய்தி:
வட்டத்தில் உள்ள சிறுவர்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு சுற்றுக்கும் குறைப்பது போல, நீங்கள் தொடர்ந்து கோபப்படுத்துபவர்களை புறக்கணித்தால், சீண்டுபவர்கள் சோர்வடைந்து கலைந்து செல்வார்கள்.
சீண்டுபவா்கள் மீது கோபம் கொள்ளாமல் அவா்கள் புறக்கணித்தால் இறுதியில் நீங்கள் தான் வெற்றியாளர் ஆவீர்கள்.
டாட்டா
அர்ப்பணிப்பின் ஜெபத்தோடு பாடத்தை நிறைவு செய்யுங்கள்.

Leave a comment