பகுதி 3 – Angry Bird

Published by

on

நான்கு பகுதிகளைக் கொண்ட 😡 Angry Bird என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், மூன்றாம் பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

வேத பகுதி: I சாமுவேல் 25: 1 – 39அ

வேதாகம நிகழ்வு: தாவீது & நாபால் 

செய்தி:
நீங்கள் கோபமாக இருக்கும்போது பாவம் செய்ய அனைத்து வாய்ப்பும் உள்ளது என்று வேதம் சொல்கிறது. எனவே, நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் எல்லா கோபத்தையும் விட்டுவிட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
அட்டவணை:
  1. பாடல் நேரம் (10 mins)
  2. பேசலாம் வாங்க (10 mins)
  3. மனப்பாட வசனம் ( 5 mins)
  4. வேதாகம நிகழ்வு (25 mins)
  5. செயல்பாடு நேரம் (10 mins)
பாடல் நேரம்

சிறுவர்களை பாடல் வேளையில் நடத்துங்கள்.

பேசலாம் வாங்க

நோக்கம்:

இன்றைய பாடத்தின் சூழலை அமைக்க இந்தப் பகுதியைப் பயன்படுத்துவீர்கள்.

தேவையான பொருள்கள்:

ஸ்லீப் மியூசிக் வீடியோ + ஸ்மார்ட் போன் [விரும்பினால்]

செய்முறை:

  • சிறுவர்களின் ஸ்லீப் மியூசிக் வீடியோவை சில நிமிடங்கள் இயக்கி காட்டுங்கள். YouTubeல் இருந்து நீங்களே ஒன்றைக் கண்டறியலாம் அல்லது பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தலாம்: https://youtu.be/QqrX9r18lNI?si=x_pIeJKyeA3jyPU5
  • இரவில் படுக்கைக்கு சென்றவுடன் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விவரிக்கச் சொல்லுங்கள். அவர்கள் உடனடியாக தூங்குகிறார்களா? அல்லது அவர்கள் வேறு ஏதாவது செய்கிறார்களா?
  • இன்றைய பாடம் அவர்கள் தூங்கச் செல்வதற்கு முன் செய்ய வேண்டிய ஒரு காரியத்தைப் பற்றி பேசுகிறது என்று சொல்லுங்கள்.
  • வகுப்பைக் கவனமாகக் கேட்டு, அது என்ன விஷயம் என்பதைக் கண்டுபிடித்து வகுப்பு முடிவதற்குள் உங்களுக்குத் தெரியப்படுத்த சொல்லுங்கள். (எல்லா கோபத்தையும் விட்டுவிட வேண்டும்)
மனப்பாட வசனம்

வேதாகம நிகழ்வு

வேத பகுதி: I சாமுவேல் 25: 1 – 39அ
சம்பவ சுருக்கம்:

தாவீதும் அவனுடைய ஆட்களும், வயலில் இருந்த நாபாலின் ஆட்களையும் அவனுடைய மந்தையையும் பாதுகாத்தனர். ஒருமுறை தாவீதுக்கு உதவி தேவைப்பட்டதால், நாபாலுக்கு செய்தி அனுப்பினான். ஆனால் நாபால் ஒரு முரட்டுத்தனமான மனிதன். உதவுவதற்குப் பதிலாக அவன் தாவீதை அவமதித்தான். தாவீது கோபமடைந்து நாபாலுடன் சண்டையிட்டு அவனை அழிக்க நினைத்தான். நாபாலின் மனைவி அபிகாயில் இதைப் பற்றி கேள்விப்பட்டு, பிரச்சினையை விரைவில் தீர்க்க முயன்றாள். அவள் தாவீதிடம் சென்று அவனிடம் புத்திசாலித்தனமாகப் பேசினாள். கோபத்தின் காரணமாக தாவீது ஒரு பெரிய தவறு செய்யப் போகிறான் என்பதை தாவீதுக்கு உணர்த்தினாள். தேவன் விரும்பாததை செய்ய போகிறான் என்று தாவீதை எச்சரித்தாள். தாவீது தன் தவறை உணர்ந்து உடனே தன் கோபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தான். தாவீது தன் செயலால் தேவனை சந்தோஷப்படுத்தினான். தேவன் தாவீதுக்காக போராடினார், நாபால் ஒரு அதிர்ச்சியில் சில நாட்களில் மரித்துப் போனான்.
குறிப்பு: அபிகாயில் மற்றும் தாவீதின் கதையை நாபாலிற்கு பின் தொடர வேண்டாம். இது இந்நாளின் செய்தியிலிருந்து உங்களைத் திசைதிருப்பக்கூடும்.

செய்தி:
நீங்கள் கோபமாக இருக்கும்போது பாவம் செய்ய அனைத்து வாய்ப்பும் உள்ளது என்று வேதம் சொல்கிறது. எனவே, நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் எல்லா கோபத்தையும் விட்டுவிட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
செயல்பாடு நேரம்

தேவையான பொருள்கள்: கயிறு

செய்முறை:

  • இது ஓரு திருப்பதுடன் கூடிய இழுபறி (Tug-of-war)
  • வகுப்பை 2 அணிகளாகப் பிரிக்கவும்.
  • ஒவ்வொரு அணியிலிருந்தும் ஒரு வீரரை முன்வரச் சொல்லுங்கள்.
  • ஒவ்வொரு வீரருக்கும் கயிற்றின் ஒரு முனையைக் கொடுங்கள்.
  • அவர்கள் பக்கமாக கயிற்றை இறுக்கமாக இழுக்க வேண்டும்.
  • இந்த நிலையில் அவர்கள் தயாரானதும், “விடு” என்று சத்தமாக சொல்லுங்கள்.
  • முதலில் கயிற்றை விட்டு விடுபவர் வெற்றியாளர்.
  • ஒவ்வொரு அணியிலிருந்தும் வெவ்வேறு வீரர்களை விளையாட அனுமதிப்பதன் மூலம் விளையாட்டைத் தொடரவும்.

செய்தி:

ஒரு வீரர் கயிற்றை விட்டுவிட்டால் மற்ற வீரர் தடுமாறி கீழே விழுவார். கோபத்தை விட்டுவிட்டால் அவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவார்கள் என்பதை சிறுவர்களுக்கு கற்பிக்க இந்த காட்சியைப் பயன்படுத்தவும்.

டாட்டா

அர்ப்பணிப்பின் ஜெபத்தோடு பாடத்தை நிறைவு செய்யுங்கள்.

Leave a comment