நோக்கம்:
இயேசு உள்ளத்தில் பிறக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் ஒரு குறு நாடகம் ( 5-7 mins).
கதாபாத்திரங்கள் (Casts):
- அக்கா
- தங்கச்சி
- குட்டி ஆடு (2)
- சாஸ்திரி 1
- சாஸ்திரி 2
- சாஸ்திரி 3
- மரியாள்
- ஜோசேப்பு
- மேய்ப்பன் 1
- மேய்ப்பன் 2
- வளர்ந்த இயேசு
- தூதர்கள் (minimum 2)
- ஆடு (minimum 1)
ஆயத்தம்:
- உள்ளங்கை அளவிலான இதயங்களை வெள்ளை காகிதத்தில் இருந்து வெட்டுங்கள். ஒவ்வொரு நடிகர்களுக்கும் (தேவ தூதர்கள், 2 ஆடு குட்டிகள் மற்றும் தங்கச்சி தவிர) இந்த காகித இதயங்களில் ஒன்று தேவை.
- முடிந்தால் ஒரு மாட்டு தொழுவம் போன்ற அமைப்பை உருவாக்கவும்.
Script:
[நடிகர்கள் நிலை 0 இல் நிற்க வேண்டும்]

======= SCENE 1 =======
அக்கா : ஹா ஹா ஹா ஹா உன்கிட்ட இவ்வளவு டாய்ஸ் தான் இருக்கா? என்கிட்ட இருக்க டாய்ஸ்-அ காமிக்கவா?
ரெடி அக்க்ஷன்!
[நடிகர்கள் நிலை 1 இல் நிற்க வேண்டும்]

அக்கா : நல்லா பாரு! நான் பேபி ஜீசஸ் டாய்ஸ் வச்சிருக்கேன். மரியாள், யோசேப்பு, ராஜாக்கள், மேய்ப்பர்கள், தூதர்கள் மற்றும் குட்டி ஆடுனு, நிறைய டாய்ஸ் இருக்கே. இன்னொரு விஷயம் தெரியுமா? என் டாய்ஸ் எல்லாம் நல்ல பேசும்.
தங்கச்சி: அக்கா ப்ளீஸ் நானும் உன்கூட சேர்ந்து விளையாடவா? என்கிட்ட இருக்கிற இரண்டு குட்டி ஆடுகளை உனக்கு தரேன்.
அக்கா: காமெடி பண்ணாத. என் டாய்ஸ் என் friend என் birthday-க்கு தந்தது. உனக்கு வேணும்னா உன் friend கிட்ட போய் கேளு!
தங்கச்சி:
[ஏமாற்றத்துடன் இரண்டு ஆடுகளுடன் மேடையை விட்டு வெளியேற வேண்டும்.]
அக்கா: வாங்க டாய்ஸ், நம்ம ஜாலியா விளையாடலாம்!
[நடிகர்கள் நிலை 2 இல் நிற்க வேண்டும்]

======= SCENE 2 =======
சாஸ்திரி 1: என்கிட்ட தக தக தங்கம் இருக்குதே! என் gift தான் இயேசப்பாக்கு ரொம்ப பிடுச்சிருக்கும்.
சாஸ்திரி 2: தங்கமெல்லாம் இப்போ பேஷன் இல்ல bro. நான் வச்சிருக்க வெள்ளைப்போளம் தான் ட்ரெண்டிங் ஆயிட்டிருக்கு.
சாஸ்திரி 1:
[தன்னிடம் இருந்த தங்கத்தை கீழே வைத்து விட்டு சாஸ்திரி 2 இடம் இருந்த வெள்ளைப்போளத்தை பிடுங்க முயற்சி செய்ய வேண்டும்]
அப்போ என்னக்கு தான் அது வேணும். தா! இப்போவே தா!
சாஸ்திரி 3:
[கீழே இருக்கும் தங்கத்தை திருட்டுத்தனமாக எடுத்துக்கொள்ள வேண்டும்]
[மற்ற பொம்மைகள் பேசும் நேரத்தில் சத்தம் இல்லாமல் சாஸ்திரிகள் சண்டையை தொடர வேண்டும்]
======= SCENE 3 =======
மரியாள்: Room புக் பண்ணுங்க, புக் பண்ணுங்கன்னு ஏப்போவே சொன்னேன்! கேட்டீங்களா? இப்போ பாருங்க, room இல்லாம கஷ்டப்படுறோம். ஆடு மாடுகளோட தங்கவேண்டியதாயிருக்கு!
ஜோசேப்பு: எல்லா ஹோட்டலும் நிரம்பினதிற்கு நான் என்னமா பண்ணுவேன்?
மரியாள்: cha நீங்க எப்பவுமே இப்படித்தான்!
[மரியாள் முகம் சுளித்து மறுபக்கம் திரும்ப வேண்டும். ஜோசேப்பு தன் கோபத்தைக் காட்ட வேண்டும்.]
======= SCENE 4 =======
மேய்ப்பன் 1: அந்த ராத்திரி நான் மட்டும் தான் முழிச்சிருந்து தேவ தூதர்களை பார்த்தேன்.
மேய்ப்பன் 2: நாங்களும் அப்பறம் எழுந்து பார்த்தோம்மே.
மேய்ப்பன் 1: ஆனால் நான் தான் முதல்ல பார்த்தேன் வேவ வ வ வ…
[மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் கீழே இழுத்து சண்டையிட வேண்டும்]
======= SCENE 5 =======
அக்கா: ஐயோ, என்ன நடக்குது. இந்த விளையாட்டு ஜாலியவே இல்லையே. என் தங்கச்சியோட சண்டை போட்டுட்டனே. என் மனசு ரொம்ப கஷ்டமாயிருக்கே. என் இதயம் அழுக்காயிருச்சே.
என்ன செய்றது? ஐடியா!
எங்க Sunday School-ல இயேசப்பாகிட்ட பேச சொல்லி கொடுத்திருக்காங்க. வாங்க டாய்ஸ் try பண்ணலாம்.
======= SCENE 6 =======
[அக்கா மற்றும் பொம்மைகள் (தேவ தூதர்கள் தவிர) முழங்கால் படியிட்டு கீழே கொடுக்க பட்டுள்ள பாடலை ஜெபமாக பாடுவார்கள். அவர்கள் பாடுகையில் தேவதூதர்கள் மகிழ்ந்து நடனம் ஆடுவார்கள் (லூக்கா 15:7)]
[சரணம் ஆரம்பிக்கும் பொழுது, இயேசுவைபோல் நடிப்பவர் மேடையின் ஒரு முலையில் இருந்த நடந்து வரவேண்டும். முழங்கால் இட்டிருக்கும் அக்கா மற்றும் பொம்மைகளுக்கு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள சுத்தமான காகித இதயத்தை தரவேண்டும். பாடல் முடிவில் இயேசு மேடையை விட்டு சென்றுவிடுவார்.]

======= SCENE 7 =======
அக்கா: ஜாலி ஜாலி இயேசப்பா நமக்கு நல்ல இதயம் தந்துட்டாங்க. அவரை போல நம்மை மாற்றிட்டாங்க. வாங்க டாய்ஸ் நம்ம தங்கச்சியோட சேர்ந்து விளையாடலாம்.
[நடிகர்கள் நிலை 1 இல் நிற்க வேண்டும்]

======= SCENE 8 =======
அக்கா: என்னை மன்னிச்சுக்கோப்பா. நான் இயேசப்பாவுக்கு பிடிக்காததை செஞ்சிட்டேன். இயேசப்பா என்னை மாற்றிட்டாரு. நம்ம சேர்ந்து விளையாடலாமா?
[அக்காவும் தங்கச்சியும் சந்தோஷமாக கட்டிப்பிடிக்க வேண்டும். கீழே உள்ளதைப் போன்ற ஒரு உற்சாக பாடலுடன் ஸ்கிட்டை முடிக்கவும்.]
Song Courtesy:
En Ullathil –
Composed by: Rev. J Devadasan Kalaiarasan
Sung By: Sis. Linda Shiny
Jingle Bells Tamil –
Composed & Sung by: Ps. Alwin Thomas


Leave a comment