நான்கு பகுதிகளைக் கொண்ட 😡 Angry Bird என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், மூன்றாம் பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
வேத பகுதி: 1 இராஜாக்கள் 12: 1- 19
வேதாகம நிகழ்வு: ரெகொபெயாம் & இஸ்ரவேலர்கள்
செய்தி:
| மற்றவர்களை கோபப்படுத்துவது கெட்ட செயல் |
அட்டவணை:
- பாடல் நேரம் (10 mins)
- பேசலாம் வாங்க (10 mins)
- மனப்பாட வசனம் ( 5 mins)
- வேதாகம நிகழ்வு (25 mins)
- செயல்பாடு நேரம் (10 mins)
பாடல் நேரம்
சிறுவர்களை பாடல் வேளையில் நடத்துங்கள்.
பேசலாம் வாங்க
நோக்கம்:
இன்றைய பாடத்தின் சூழலை அமைக்க இந்தப் பகுதியைப் பயன்படுத்துவீர்கள்.
தேவையான பொருள்கள்:
பின்வரும் இரண்டு படங்களின் பிரிண்ட்அவுட்கள் [விரும்பினால்]
செய்முறை:
- சிறுவர்களை நிற்கச் செய்து அவர்களுக்கு முன்னால் இந்த படங்களைப் காட்டுங்கள்.
- “எனக்கு தண்ணீர் வேண்டும்” அல்லது “எனக்கு பசியாக இருக்கிறது” போன்று தினசரி நாம் ஏதேனும் ஒரு சொற்றொடரைப் சொல்லுங்கள்.
- நீங்கள் “வாவ்” படத்தைக் காட்டும்போது, சிறுவர்கள் அந்த வாக்கியத்தை பணிவாக சொல்ல வேண்டும்.
- நீங்கள் “Grrrr” என்பதைக் காட்டும்போது, சிறுவர்கள் அதே வாக்கியத்தைக் சண்டை போடுவது போல் கோபமாய் சொல்ல வேண்டும்.
- படங்களை மாற்றும் வேகத்தை அதிகரித்தும் குறைத்தும் விளையாட்டை தொடருங்கள்.
- தவறு செய்யும் சிறுவர்களை அவரவர் இடங்களில் அமர வைத்து விளையாட்டை தொடருங்கள்.
- “ஒரு சின்ன விஷயத்திற்காக மற்ற சிறுவர்கள் கத்தின போது / திட்டின போது எப்படி உணர்ந்தீர்கள்” என்று உட்கார்ந்திருக்கும் சிறுவர்களிடம் கேளுங்கள். அது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்ததா? அல்லது அவர்களை கோபம் மூட்டியதா?
- பெரும்பாலான சந்தர்ப்பங்களில், யாரோ ஒருவர் கத்துவதையும் சண்டையிடுவதையும் கேட்பது நமக்கு மகிழ்ச்சியற்றதாகவும் கோபம் மூட்டுவதாக இருக்கும்.
- “மற்றவர்களைக் கோபப்படுத்துவது நல்லதா அல்லது கெட்டதா?” என்ற கேள்வியோடு வகுப்பை தொடருங்கள்.
மனப்பாட வசனம்
கை அசைவுகள் அல்லது ஏதேனும் ஒரு செய்முறையைப் (Actions) பயன்படுத்தி பின்வரும் மனப்பாட வசனத்தை சிறுவர்களுக்குக் கற்பிக்கவும்.
மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும். [நீதிமொழிகள் 15:1]
வேதாகம நிகழ்வு
வேத பகுதி: 1 இராஜாக்கள் 12: 1- 19
சம்பவ சுருக்கம்:
| இஸ்ரவேல் நாடு 12 கோத்திரங்களால் ஆனது. 12 மாநிலங்களைக் கொண்ட நாடாக நீங்கள் நினைத்தக்கொள்ளலாம். அந்த நாட்டை அரசாண்ட சாலமோன் ராஜா இறந்துவிட்டார். அவருடைய மகன் ரெகொபெயாம் புதிய ராஜாவானார். இஸ்ரவேலர்கள் தங்கள் புதிய அரசராக அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அவர்கள் புதிய அரசரிடமிருந்து ஒரே ஒரு உதவியை மட்டுமே நாடினர் – அவர்களின் வேலை அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் மிகவும் பாரமாக இருந்தது; எனவே, ராஜா தங்கள் உத்தியோகபூர்வ வேலையை குறைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அரண்மனையில் இருந்த மூத்த புத்திசாலித்தனமான ஆலோசகர்கள் ரெகொபெயாமிடம், அவர்களின் எளிய வேண்டுகோளுக்கு இணங்கினால், எல்லா மக்களையும் தன் பக்கம் வெல்ல முடியும் என்று கூறினார்கள். அதனால் மக்கள் மகிழ்ச்சியுடன் அவருக்கு சேவை செய்வார்கள் என்றும் கூறினார்கள். ஆனால் அவரது வயதில் சிறிய நண்பர்கள் வேறுவிதமாக பரிந்துரைத்தனர். புதிய ராஜா எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பதைக் காட்ட முரட்டுத்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை கூறினார்கள். ரெகொபெயாம் தன் நண்பர்கள் சொல்வதைக் கேட்டான். அவர் தனது நாட்டு மக்களுக்கு கடுமையாக பதிலளித்தார். மக்கள் மிகவும் கோபமடைந்தனர். அதன் விளைவாக 12 மாநிலங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டன. 12 கோத்திரங்களில் 2 கோத்திரங்கள் மட்டுமே ரெகொபெயாமை தங்கள் ராஜாவாக ஏற்றுக்கொண்டனர். மற்றவர்கள் புதிய அரசரைத் தேர்ந்தெடுத்தனர். மற்றவர்களை கோபப்படுத்தியதால் தனது செல்வாக்கை இழந்த அரசனாக ரெகொபெயாம் வரலாற்றில் இடம்பிடித்தார். செய்தி: மற்றவர்களை கோபப்படுத்துவது ஒரு கெட்ட செயல் |
செயல்பாடு நேரம்
தேவையான பொருள்கள்: செய்தித்தாள்
செய்முறை:
- ஒவ்வொரு சிறுவருக்கும் ஒரு துண்டு செய்தித்தாளை கொடுங்கள்.
- அதை அவர்கள் எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி, ஒரு சிறிய பந்து செய்ய வேண்டும்
- வகுப்பை இரண்டாகப் பிரித்து இரண்டு குழுக்களுக்கும் இடையே ஒரு கோட்டை வரையவும்.
- ஆட்ட துவக்கத்தை அறிவித்ததுடன், சிறுவர்கள் தங்கள் பந்துகளை மற்ற அணியின் எல்லைக்குள் வீச வேண்டும்.
- சிறிது நேரத்திற்கு பின் ஆட்டத்தை நிறுத்துங்கள்.
- பின்னர் இரு குழுவின் இருப்பிடத்திலும் உள்ள பந்துகளை எண்ணுங்கள்.
- அதிக பந்துகளை வைத்துள்ள அணி வெற்றி பெற்றது.
- குறிப்பு: வெற்றியாளர்களை அறிவிக்கும் வரை வெற்றிக்கான அளவுகோலை (அதிக பந்தைக் கொண்ட அணி) ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள்.
செய்தி:
மற்றவர்கள் மீது ஆத்திரத்தை வீசும்போது நீங்கள் தவறிவிடுவீர்கள். மற்றவர்களை கோபப்படுத்துவது நல்ல எண்ணமே இல்லை.
டாட்டா
அர்ப்பணிப்பின் ஜெபத்தோடு பாடத்தை நிறைவு செய்யுங்கள்.



Leave a comment