இரண்டு சிறு கண்கள்! 👀

Published by

on

100வது வீடியோவைப் பார்த்துக்கொண்டே இதை உங்கள் சூப்பர் ஸ்மார்ட் 2K சிறுவர்கள் கேட்கலாம்/ (பணிவாக) எச்சரிக்கலாம், “வேதத்தில் ‘ஸ்மார்ட்ஃபோன்’ எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது? என்னை நச்சரிப்பதை நிறுத்துங்கள், இந்த ஒரு வீடியோவை நிம்மதியாகப் பார்க்க விடுங்களேன்!”. தொழில்நுட்ப ரீதியாக சாிதான் (‘ஸ்மார்ட்ஃபோன்’ குறிப்பிடப்படவில்லை) ஆனால்…

நமது ஞானமுள்ள தேவன் இந்தப் பிரச்சினையை (‘ஸ்மார்ட்போன் அடிமையாதல்’) ஒட்டுமொத்தமாக எடுத்து, பிரச்சனையின் மையத்தை அம்பலப்படுத்தியுள்ளார். ஒரு எளிய வாக்கியத்தில் அழகாகச் சொல்லிவிட்டார் – கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். [மத்தேயு 6:22]

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “நீ மொபைல் போதைக்கு ஆளாகாதபடி உன் இரண்டு சிறிய கண்களை சரிபார்” என்று இயேசு கூறுகிறார். என்ன ஒரு ஆழமான யோசனை! நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் இல்லையா?

இரண்டு சிறு கண்கள்” என்ற 4 பகுதி கொண்ட பாடத் திட்டத்தை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தச் செய்தியை சிறுவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அவர்களுக்கு எடுத்துச் செல்ல இந்த பட திட்டம் உதவும் என்று நம்புகிறோம்.

குறிப்பு: செய்தியின் ஆழத்தை உங்கள் பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்க உங்கள் அனுபவத்தைப் பயன்படுத்தவும்.

ஞாயிறு பள்ளிக் சிறுவர்களுக்கான நடைமுறைப் பாடத் திட்டம் பற்றிய தகவல்களுக்கு, எங்கள் வாட்ஸ்அப் குழுவில் இணையவும்!
https://chat.whatsapp.com/JWglQvONCPAAOhAcrIlXsF

ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே அழுத்தவும் –

J4K Lesson Plan > Outline

Click the buttons for detailed lessons.

01


“சோதனை” கண்கள்

வேத பகுதி: ஆதியாகமம் 3

வேதாகம நிகழ்வு: ஏவாளின் கண்கள்

செய்தி:
நீங்கள் பயனற்ற, ஆனால் பார்க்க அழகாக இருக்கும் விஷயங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தால், தேவனின் ஆசீர்வாதத்தை இழந்து விடுவீர்கள்.

மனப்பாட வசனம்:
மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். [சங்கீதம் 119:37]

02


கூக்லி (Googly) கண்கள்

வேத பகுதி: தானியேல் 6

வேதாகம நிகழ்வு: தேசாதிபதிகளின் & பிரதானிகளின் கண்கள்

செய்தி:
உங்களிடம் இல்லாததை அடுத்தவர்களிடம் இருப்பதைப் பார்த்துக் கொண்டே இருந்தால், உங்களிடம் இருப்பதையும் விரைவில் இழக்க நேரிடும்.

மனப்பாட வசனம்:
பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக. [யாத்திராகமம் 20:17]

03


மூடப்பட்ட கண்கள்

வேத பகுதி: யோவான் 9

வேதாகம நிகழ்வு: பரிசேயர்களின் கண்கள்

செய்தி:
வெளியில் இருந்து வரும் தகவல்களை (கூகுள், இன்ஸ்டாகிராம், நண்பர்கள், மொபைல் கேம்கள்) சார்ந்து நீங்கள் வாழ்க்கையை வாழும்போது, உங்கள் கண்கள் மூடின கண்களாகவே இருக்கும்.

மனப்பாட வசனம்:
என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. [யோவான் 15:5]

04


வேத பகுதி: 1 இராஜாக்கள் 22

வேதாகம நிகழ்வு: யோசியாவின் கண்கள்

செய்தி:
தேவனுடைய வார்த்தை உங்கள் கண்களை தெளிவுபடுத்தும். அதற்கு கீழ்ப்படிந்தீர்கள் அனால் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்.

மனப்பாட வசனம்:
கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். [மத்தேயு 6:22]

Leave a comment