பகுதி 1 – இரண்டு சிறு கண்கள்! 👀

Published by

on

நான்கு பகுதிகளைக் கொண்ட இரண்டு சிறு கண்கள்! 👀 என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், முதல் பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

“சோதனை” கண்கள்

வேத பகுதி: ஆதியாகமம் 3

வேதாகம நிகழ்வு: ஏவாளின் கண்கள்

செய்தி: நீங்கள் அழகாக தோற்றமளிக்கும் காரியங்களால் திசைத்திருப்பப்படுவீர்களானால், தேவன் உங்களுக்கென்று வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை இழந்துவிடுவீர்கள்.

புதிய வார்த்தை: ஆசீர்வாதம்
என்பது தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் நல்ல விஷயங்கள்

அட்டவணை:
  1. பாடல் நேரம் (10 mins)
  2. பேசலாம் வாங்க (10 mins)
  3. மனப்பாட வசனம் ( 5 mins)
  4. வேதாகம நிகழ்வு (25 mins)
  5. செயல்பாடு நேரம் (10 mins)
பாடல் நேரம்

சிறுவர்களை பாடல் வேளையில் நடத்துங்கள்.

பேசலாம் வாங்க

நோக்கம்:

இன்றைய பாடத்தின் சூழலை அமைக்க இந்தப் பகுதியைப் பயன்படுத்துவீர்கள்.

தேவையான பொருள்கள்: ஏவாளின் “சோதனை” கண்கள் படம் [விரும்பினால்]

செய்முறை:

சிறுவர்களிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்டு, “தேவனின் ஆசீர்வாதம்” என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள உதவுங்கள்.

  • ஆசீர்வாதம் என்றால் என்ன? [பதில்: தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் நல்ல விஷயங்கள்]
  • உங்களிடம் ஏற்கனவே உள்ள சில ஆசீர்வாதங்கள் என்ன? [பதில்: நல்ல பெற்றோர், நல்ல நண்பர்கள், நல்ல உடல்நலம், நல்ல பள்ளி போன்றவை]

இந்த ஓப்பனரை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:
[ஏவாளின் படத்தைக் காட்டுங்கள்] தேவனால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவரைப் பற்றி இன்று நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். தேவன் அவளுக்கு கொடுத்த ஒரு சூப்பரான ஆசீர்வாதம் என்ன தெரியுமா? அவளுக்கு குட்டி பாண்டா மற்றும் காண்டாமிருகம் போன்றவற்றை செல்லப்பிராணிகளாக கொடுத்தார். அவள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருப்பாள் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? ஆனால், அந்த ஆசீர்வாதங்கள் அனைத்தையும் ஒரே நாளில் இழந்தாள். என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? ஏவாளின் கதையை சொல்கிறேன் கேளுங்க.

மனப்பாட வசனம்

வேதாகம நிகழ்வு

வேத பகுதி: ஆதியாகமம் 3
சம்பவ சுருக்கம்:

ஏவாள் தேவனின் ஆசீர்வாதங்களைப் பெற்றிருந்தாள் – அவள் பூமியின் மிகஅழகான இடத்தில் வாழ்ந்தாள்; தேவன் தினமும் மாலை நேரத்தில் அவளிடம் பேச வருவாள்; அவள் சமைக்க வேண்டியதில்லை; தோட்டத்திலிருந்து சுவையான உணவு அவளுக்கு கிடைத்தது; அவள் அழகான குட்டி யானைகளையும், வலிமையான சிங்கங்களையும் செல்லப் பிராணிகளாக கொண்டிருந்தாள். ஒரு மரத்திலுள்ள பழத்தைத் தவிர தோட்டத்தில் உள்ள அனைத்தையும் தேவன் அவளுக்குக் கொடுத்திருந்தார். ஆனால் அந்த மரத்தில் இருந்த பழம் மிகவும் அழகாக அவளுக்கு தொிந்தது. ஏவாள் அந்தப் பழத்தை உண்ண ஆசைப்பட்டாள். அவளுக்கு “சோதனை” கண்கள் வந்தன. பிசாசு சொன்னதைக் கேட்டு பழத்தைப் பறித்து சாப்பிட்டாள். தேவன் அவளுக்கு இலவசமாக கொடுத்த அனைத்து ஆசீர்வாதங்களையும் அவள் ஒரே நாளில் இழந்தாள்.

செய்தி:

நீங்கள் பார்க்கும் காரியங்களைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும். பார்ப்பதற்கு அருமையாய் தோன்றும் பயனற்ற விஷயங்களையே நீங்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பீர்களானால், தேவன் உங்களுக்கென்று வைத்திருக்கும் அனைத்து நல்ல விஷயங்களையும் இழக்க நேரிடும். தேவனின் ஆசீர்வாதத்தை இழந்துவிடுவீர்கள்.

செயல்பாடு நேரம்

தேவையான பொருள்கள்: 4 காகித கண்கள்; ஒரு நீளமான துண்டு காகிதம் அல்லது ரிப்பன்; குறிப்பான்கள் (Markers); ஸ்டேப்லர் / பசை

செய்முறை:

  • சிறுவர்களுக்கு நான்கு காகிதக் கண்களைக் கொடுங்கள்.
  • அவர்களின் கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களை (எ.கா. YouTube வீடியோக்கள்; மொபைல் கேம்கள் போன்றவை) நான்கு கண்களில் இரண்டில் எழுதச் சொல்லுங்கள்.
  • பின்னர் மற்ற இரண்டு கண்களிலும் சுருள்களை வரையச் சொல்லுங்கள்.
  • காட்டப்பட்டுள்ளபடி ரிப்பன்/நீளமான காகிதத்தில் கண்களைப் பொருத்துங்கள்.
  • விரும்பினால் நீங்கள் இரண்டு புருவங்களை சேர்க்கலாம்.
  • செய்து வைத்துள்ள கண்கள் கொண்ட ரிப்பனை தலையை சுற்றி கட்டவும்
  • மொபைல் அடிமைத்தனத்தால் ஏற்படும் பாதிப்புகளை கலந்துரையாடுங்கள் . பின்வரும் வீடியோக்கள் இதை பற்றின அறிவியல் அறிக்கைகளை வழங்குகின்றன. சிறுவர்களிடம் பேசுவதற்கு முன் கூடுமான பட்சம் விடீயோக்களை பார்க்க முயலுங்கள். நேரம் அனுமதித்தால் அவற்றில் சிலவற்றைக் சிறுவர்களிடம் காட்டலாம்.

மொபைல் அடிமைத்தனத்தின் எதிர்மறை விளைவுகள்

செய்தி:

நம் ஒவ்வொருவருக்கும் விளையாடுவதற்கும் வேடிக்கை பார்ப்பதற்கும் நேரம் தேவை. நீங்கள் உங்கள் மொபைல்களைப் பயன்படுத்தலாம். சில சமயங்களில் உங்கள் பள்ளிக்கும் அவை தேவைப்படும். ஆனால் அவசியத்தை விட அதிக நேரத்தை அதின் மீது செலவழித்தால், அது உங்களை திசை திருப்பிவிடும் மற்றும் தேவனின் ஆசீர்வாதங்களை இழக்க செய்துவிடும். எதை பார்க்கிறீர்கள் என்று கவனமாகப் பாருங்கள்.

டாட்டா

அர்ப்பணிப்பின் ஜெபத்தோடு பாடத்தை நிறைவு செய்யுங்கள்.

Leave a comment