பகுதி 2 – இரண்டு சிறு கண்கள்! 👀

Published by

on

நான்கு பகுதிகளைக் கொண்ட இரண்டு சிறு கண்கள்! 👀 என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், இரண்டாவது பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

“கூக்லி (Googly)” கண்கள்

வேத பகுதி: தானியேல் 6

வேதாகம நிகழ்வு: தேசாதிபதிகள் மற்றும் பிரதானிகளின் கண்கள்

செய்தி: உங்களிடம் இல்லாத ஒன்று அடுத்தவர்களிடம் இருப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்தால், உங்களிடம் இருப்பதையும் விரைவில் இழக்க நேரிடும்.

அட்டவணை:
  1. பாடல் நேரம் (10 mins)
  2. பேசலாம் வாங்க (10 mins)
  3. மனப்பாட வசனம் ( 5 mins)
  4. வேதாகம நிகழ்வு (25 mins)
  5. செயல்பாடு நேரம் (10 mins)
பாடல் நேரம்

சிறுவர்களை பாடல் வேளையில் நடத்துங்கள்.

பேசலாம் வாங்க

நோக்கம்:

இன்றைய பாடத்தின் சூழலை அமைக்க இந்தப் பகுதியைப் பயன்படுத்துவீர்கள்.

தேவையான பொருள்கள்: கீழே உள்ள படம்

செய்முறை:

மேலே உள்ள படத்தைக் காட்டி, கொடுக்கப்பட்ட காட்சியைப் பகிரவும். பின்னர் கலந்துரையாடல் கேள்வியைக் கேட்டு, அதிலுள்ள பிரச்சினையைப் பற்றி பேச சிறுவர்களை ஊக்குவிக்கவும்.

இதை பகிரவும் :- உங்கள் கண்கள் மற்றவர்களைப் பார்த்து, உங்களிடம் இருப்பதை மறந்தால், விசித்திரமான ஒன்று நடைபெறும் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் கண்கள் கூக்லி (googly) கண்கள் போல் ஆகிவிடும் (எப்போதும் மற்றவர்களைப் பார்க்கும் கண்கள்). கூக்லி கண்கள் கொண்ட சில தலைவர்களுக்கு நடந்த காரியத்தை உங்களோடு பகிர போகிறேன். நீங்கள் தயாரா?

மனப்பாட வசனம்

வேதாகம நிகழ்வு

வேத பகுதி: தானியேல் 6
சம்பவ சுருக்கம்:

தரியு ராஜா தனது அரசை 120 மாகாணங்களாகப் பிரிக்க முடிவு செய்தார். ஒவ்வொரு மாகாணத்தையும் ஆட்சி செய்ய ஒரு உயர் அதிகாரியை (தேசாதிபதி) நியமித்தார். பின்னர், உயர் அதிகாரிகளை கண்காணிக்கவும், ராஜாவின் நலனை பாதுகாக்கவும் 3 நிர்வாகிகளை (பிரதானிகள்) தேர்வு செய்தார். அப்படி தெரிந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளில் ஒருவர் தான் தானியேல். அவர் தனது பணியில் சிறந்து விளங்கினார். எனவே, அவரை முழு சாம்ராஜ்யத்தின் மீதும் தலைவராக வைக்க ராஜா திட்டமிட்டார். இதை அறிந்த மற்ற நிர்வாகிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கூக்லி கண்கள் வந்தது. அவர்கள் தங்களிடம் இருந்ததை மறந்துவிட்டு தானியேலிடம் இருந்தவற்றில் கவனம் செலுத்தினர் – அவர்கள் ஏற்கனவே பெரிய தலைவர்கள் என்பதை மறந்துவிட்டனர். அவர்கள் தானியேலுக்கு எதிராக சதி செய்து அவரை சிங்கங்களின் மூலம் அழிக்க முயன்றனர். தேவன் தானியேலைக் காப்பாற்றினார். தலைவர்கள் செய்த தவறுக்காக தரியு ராஜா அவர்களைத் தண்டித்து சிங்கத்தின் குகைக்குள் தள்ளினார். அவர்களிடம் ஏற்கனவே இருந்தவற்றையும் இழந்தனர்.

செய்தி:

உங்களிடம் ஏற்கனவே பல நல்ல விஷயங்கள் உள்ளன. உங்களிடம் இருப்பதை கவனிக்காமல் மற்றவர்களைப் பார்க்கத் தொடங்கும் போது, ​​உங்களுக்கு கூக்லி கண்கள் வந்துவிடும், உங்களிடம் இருப்பதை மறந்துவிடுவீர்கள். இருப்பதை மறந்துவிட்டால், இருப்பதை இழக்க நேரிடும்.

செயல்பாடு நேரம்

தேவையான பொருள்கள்: 2 அட்டைப்பெட்டி / ஷூ பெட்டிகள்; 2 சிறிய முகக் கண்ணாடி; பரிசு மடக்கு காகிதம்; குறிப்பான்கள் / அலங்கார பொருட்கள்; செலோபேன் டேப்/ பசை

ஆயத்தம்: அட்டைப்பெட்டிகளின் அடிப்பகுதியில் முகம் பார்க்கும் கண்ணாடியை ஒட்டவும். அது நகராத அளவிற்கு அதை இறுக்கமாகப் ஒட்டவும். பெட்டியை லகுவாக திறக்க முடியாதளவிற்கு செல்லோடேப் கொண்டு பெட்டியை மூடவும்.

செய்முறை:

  • வகுப்பை இரண்டு குழுக்களாகப் பிரிக்கவும் – (Girls Vs Boys)
  • மறைக்கப்பட்ட கண்ணாடி உள்ள இரண்டு பெட்டிகளைக் காட்டி, சிறந்த பெட்டி எது என்பதைக் கண்டறிய நீங்கள் ஒரு போட்டியை நடத்தப் போகிறீர்கள் என்று அறிவியுங்கள்.
  • குழுவினர் தங்களுக்கென்று ஒரு பெட்டியைத் தேர்ந்தெடுத்து, தங்களால் முடிந்தவரை சிறப்பாக அலங்கரிக்க வேண்டும்.
  • போட்டியின் முடிவில், வெற்றியாளர் யார் என்று பெட்டிக்குள் இருப்பதாக அறிவியுங்கள்.
  • சிறுவர்கள் பெட்டியைத் திறக்கும்போது, ​​அதில் கண்ணாடி தங்களையே பிரதிபலித்து அவர்கள் தான் வெற்றியாளர்கள் என்ற முடிவிற்கு வருவார்கள்.

செய்தி:

“யார் பெரியவர்? யார் சிறந்தவர்?” என்றக் கேள்விகளுக்குப் பதிலளிக்க உங்கள் கண்கள் உங்களை எல்லா இடங்களிலும் பார்க்கத் தூண்டும். கூக்லி கண்களைப் பெறாதீர்கள். உங்களை உள்ளே பாருங்கள், உங்களில் எது சிறந்தது என்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். இதன் மூலம் நீங்கள் மற்றவர்களில் உள்ள சிறந்ததை பாராட்டுவீர்கள், அவர்கள் மீது பொறாமை கொள்ள மாடீர்கள்.

டாட்டா

அர்ப்பணிப்பின் ஜெபத்தோடு பாடத்தை நிறைவு செய்யுங்கள்.

Leave a comment