பகுதி 3 – இரண்டு சிறு கண்கள்! 👀

Published by

on

நான்கு பகுதிகளைக் கொண்ட இரண்டு சிறு கண்கள்! 👀 என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், மூன்றாம் பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

மூடப்பட்ட கண்கள்

வேத பகுதி: யோவான் 9

வேதாகம நிகழ்வு: பரிசேயர்களின் கண்கள்

செய்தி: வெளியே இருந்து வரும் தகவல்களை (கூகுள், இன்ஸ்டாகிராம், நண்பர்கள், மொபைல் கேம்கள்) சார்ந்து நீங்கள் வாழ்வீர்களானால், உங்கள் கண்கள் மூடின கண்களாகவே இருக்கும். இதனால் உங்களுக்காக இயேசு செய்யும் அனைத்து நல்ல காரியங்களையும் இழந்துவிடுவீர்கள்.

அட்டவணை:
  1. பாடல் நேரம் (10 mins)
  2. பேசலாம் வாங்க (10 mins)
  3. மனப்பாட வசனம் ( 5 mins)
  4. வேதாகம நிகழ்வு (25 mins)
  5. செயல்பாடு நேரம் (10 mins)
பாடல் நேரம்

சிறுவர்களை பாடல் வேளையில் நடத்துங்கள்.

பேசலாம் வாங்க

நோக்கம்:

இன்றைய பாடத்தின் சூழலை அமைக்க இந்தப் பகுதியைப் பயன்படுத்துவீர்கள்.

தேவையான பொருள்கள்: ஒரு வெற்று தாளில் “உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன். என்னிடம் கேள்” என தடிமனான எழுத்துக்களில் எழுதவும், சிறிய வெகுமதிகள் (சாக்லேட்/பிஸ்கட்)

செய்முறை:

  • சிறுவர்கள் அனைவரது கையிலும் ஒரு மொபைல் இருப்பதைப் போல நடிக்க சொல்லுங்கள். அவர்கள் தலையைக் குனிந்து கற்பனை மொபைலைப் பார்த்து அதில் ஒரு கற்பனை விளையாட்டை விளையாட வேண்டும்.
  • சிறுவர்கள் கற்பனை விளையாட்டில் ஆழமாக இருக்கும்போது, வெகுமதி தாளைக் காட்டுங்கள். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் தொலைபேசிகளில் பிஸியாக இருந்ததால் அதை தவறவிட்டிருப்பார்கள். நீங்கள் காட்டியதைக் கவனித்து வெகுமதியைக் கேட்டவர்களுக்கு மட்டும் வெகுமதியைக் கொடுங்கள்.
  • அவர்களின் கற்பனை தொலைபேசிகளை மீண்டும் பயன்படுத்துவதைப் போல் நடிக்கச் சொல்லி விளையாட்டை மீண்டும் விளையாடவும். அவர்கள் எதிர்பாராத போது வெகுமதி தாளைக் காட்டவும்.

பின்பு இதை பகிரவும் :-
நீங்கள் உங்கள் மொபைலில் கவனம் செலுத்தியதால் உங்களுக்காக நான் வைத்திருந்த வெகுமதிகளைத் தவறவிட்டதை நீங்கள் கவனித்தீர்களா? மொபைலின் காரணமாக உங்கள் அன்றாட வாழ்வில் நீங்கள் இழக்கும் சில விஷயங்கள் என்ன? (சிறுவர்கள் பதில் சொல்லட்டும்) தவறான காரியத்தில் கவனம் செலுத்தியதால் இயேசு செய்ததை தவறவிட்ட சிலரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதையை இன்று நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். ரெடியா?

மனப்பாட வசனம்

வேதாகம நிகழ்வு

வேத பகுதி: யோவான் 9
சம்பவ சுருக்கம்:

பிறப்பிலிருந்தே பார்வையற்ற ஒரு மனிதனை இயேசு கண்டார். அவன் மேல் இரக்கம் கொண்டு அவனைக் குணமாக்கினார். இயேசு குருடனை குணமாக்கியதை அன்றையபரிசேயர்கள் என்று அழைக்கப்பட்ட மதத்தலைவா்கள் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் இயேசுவை ஒரு பாவியாக பார்த்தார்கள். அவர்களால் அவரை அற்புதம் செய்யும் தெய்வமாக பார்க்க முடியவில்லை. அவர்களிடம் ஆராய்ச்சி செய்ய கூகுள் இல்லை, ஆனால் அவர்கள் தங்களின் அறிவையும் பகுத்தறியும் திறமையையும் பயன்படுத்தி தங்கள் கண்களுக்கு முன்பாக இயேசு செய்ததை மறுத்தனர். ஏனென்று உனக்கு தெரியுமா? அவர்கள் கண்கள் மூடியிருந்தது. இயேசு அவர்களுக்கு ஒரு அற்புதத்தை செய்தபோதும் அவர்களால் அதைக் காண முடியவில்லை!

செய்தி:

வெளியில் இருந்து வரும் தகவல்களை (கூகுள், இன்ஸ்டாகிராம், நண்பர்கள், மொபைல் கேம்கள்) சார்ந்து நீங்கள் வாழ்க்கையை வாழும்போது, உங்கள் கண்கள் மூடின கண்களாகவே இருக்கும். உங்களுக்காகவும் உங்களைச் சுற்றிலும் இயேசு செய்யும் எல்லா நல்ல காரியங்களையும் நீங்கள் தவறவிடுவீர்கள். அதனால்தான் மொபைலில் அதிக நேரம் செலவிடுவது உங்கள் வாழ்க்கைக்கு ஆபத்தானது.

செயல்பாடு நேரம்

தேவையான பொருள்கள்: கண்களை கட்ட துணிகள், ஆங்காங்கே வைப்பதற்கு சில பொருள்கள்.

செய்முறை:

  • வகுப்பை இரண்டு குழுக்களாக பிரிக்கவும் (boys/ girls).
  • குழுவில் உள்ள அனைவரையும் ஒரே வரிசையில் நிற்கச் சொல்லுங்கள். கடைசி நபரைத் தவிர அனைவரின் கண்களையும் துணியால் கட்டி, ஒருவர் தோளைப் ஒருவர் பிடித்தார் போல் நிற்கச் சொல்லுங்கள்.
  • பொருட்களை ஆங்காங்கே தரையில் வையுங்கள். சிலவற்றை எளிதாக கண்டுபிடிக்கும் இடங்களிலும், சிலவற்றை கடினமாக கண்டுபிடிக்கும் இடங்களிலும் வையுங்கள்.
  • கடைசி நபர் ஒவ்வொருவரையும் தனது கை குறிப்பால் (Hands Signals) ஆங்காங்கே வைக்கப்பட்ட எளிதாக கண்டுபிடிக்க கூடிய பொருள்களுக்கு நேராக நடத்த வேண்டும். ( உதாரணமாக வலது பக்கம் திரும்ப வலது தோளை தட்டியும், இடது பக்கம் திரும்ப இடது தோளை தட்டியும், பின் செல்ல தலையை தொட்டும் வழிநடத்தலாம்)
  • இப்படியாக குழுவினர் பொருட்களை கண்டுபிடிக்க வேண்டும். இது முதல் சுற்று.
  • இரண்டாம் சுற்றில் ஆசிரியா்கள் வழி நடத்துபவராக இருந்து தனது வாய்மொழியால் குறிப்பு கொடுத்து குழுவினரை கண்டுபிடிப்பதற்கு கடினமான வைக்கப்பட்ட பொருள்களுக்கு நேராக நடத்தி செல்ல வேண்டும்.
  • இறுதியில் சிறுவர்களிடம் “பொருள்களை கண்டுபிடிக்க எந்த சுற்று மிகவும் உதவியாக இருந்தது?” என்று கேளுங்கள்.
  • இரண்டாவது சுற்று எளிதாக இருந்தது என்று சிறுவா்கள் சொல்வார்கள்.

உதாரணத்திற்கு இந்த வீடியோவை பார்க்கவும்:
https://youtu.be/MANhV_KSsH0?si=ve4YdOtT1ttA7BGM

செய்தி:

இயேசுவின் சத்தத்தை கேட்டு நீ வாழ்ந்தால் உன் வாழ்வில் எதையும் இழக்கமாட்டாய். இயேசு சொல்வதை கவனிக்காமல் மற்றவா்கள் சொல்வதை கேட்டு நடந்தால் பார்க்காமல் மற்றவர்களை கேட்டு நடந்தால், அநேக நல்ல காரியங்களை இழந்துவிடுவாய்.

டாட்டா

அர்ப்பணிப்பின் ஜெபத்தோடு பாடத்தை நிறைவு செய்யுங்கள்.

Leave a comment