பகுதி 4 – இரண்டு சிறு கண்கள்! 👀

Published by

on

நான்கு பகுதிகளைக் கொண்ட இரண்டு சிறு கண்கள்! 👀 என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், நான்காவது பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

தெளிவான கண்கள்

வேத பகுதி: 2 இராஜாக்கள் 22

வேதாகம நிகழ்வு: யோசியாவின் கண்கள்

செய்தி: தேவனுடைய வார்த்தை உங்கள் கண்களை தெளிவுபடுத்தும். அதற்கு கீழ்ப்படிந்தால் உங்கள் வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்.

அட்டவணை:
  1. பாடல் நேரம் (10 mins)
  2. பேசலாம் வாங்க (10 mins)
  3. மனப்பாட வசனம் ( 5 mins)
  4. வேதாகம நிகழ்வு (25 mins)
  5. செயல்பாடு நேரம் (10 mins)
பாடல் நேரம்

சிறுவர்களை பாடல் வேளையில் நடத்துங்கள்.

பேசலாம் வாங்க

நோக்கம்:

இன்றைய பாடத்தின் சூழலை அமைக்க இந்தப் பகுதியைப் பயன்படுத்துவீர்கள்.

தேவையான பொருள்கள்: கொடுக்கப்பட்ட படங்கள்.

படம் 1 க்கு, ஸ்லைடரை (மையத்தில் வட்ட பட்டன்) வலதுபுறமாக நகர்த்தவும். படம் 2 க்கு, ஸ்லைடரை இடது பக்கம் நகர்த்தவும்.

செய்முறை:

மோகன் என்ற சிறுவனை குறித்த கதையைச் சொல்லி ஒரு கலந்துரையாடலை நடத்துங்கள்.

(படம் 1 ஐக் காட்டுங்கள்) மோகனால் சரியாக பார்க்க முடியவில்லை என்று சில நாட்களாகவே சொல்லிக்கொண்டிருந்தான். பள்ளியில் ஆசிரியர் போர்டில் எழுதுவதை அவனால் சரியாக வாசிக்க முடியவில்லை. வீட்டிலும் அவனது தங்கச்சியுடன் ஒரே சண்டை தான். ஏன் தெரியுமா? தன தங்கச்சி மிக அழுக்காக இருப்பதாக அவளிடம் சொன்னான். அதன் பின் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும்! சமீபகாலமாக அவனது நண்பர்கள்கூட அவனை தவிர்த்து வருகின்றனர். படத்தைப் பார்த்து மோகனின் பிரச்சனையை என்ன என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

சிறுவர்கள் சிறிது நேரம் யோசித்து பதில் சொல்லட்டும். இந்த கலந்துரையாடலுக்கு சிறுவர்களை சிறு குழுக்களாக பிரிக்கலாம்.

பின்பு இதை பகிரவும் :-
மோகனுடைய பிரச்சனை தனது அழுக்கு கண்ணாடி தான். அவனால் தெளிவாக பார்க்க முடியவில்லை. அவனுடைய கண்ணாடியை மாற்றினால், எல்லாம் சரியாகிவிடும். (படம் 2 ஐக் காட்டுங்கள்)
தெளிவான கண்கள் எவ்வளவு முக்கியம் என்பதை பார்க்க முடிகிறதா? வாழ்வில் வெற்றிபெற வாய்ப்பே இல்லாத ஒரு சிறுவனைப் பற்றிய கதையை இன்று உங்களுக்குச் சொல்லப் போகிறேன். தோற்றுபோக வேண்டிய சி
றுவன் வெற்றி பெற்றான். அவனுடைய வெற்றியின் ரகசியத்தை நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். ரெடியா?

மனப்பாட வசனம்

வேதாகம நிகழ்வு

வேத பகுதி: 2இராஜாக்கள் 22

சம்பவ சுருக்கம்:
யோசியா ஒரு சக்தி வாய்ந்த, ஆனால் அவனுடைய குடும்பம் உடைந்திருந்தது. அவனுடைய தந்தை, ஆமோன், ஒரு மோசமான ராஜாவாக இருந்தார். பல தீய செயல்களைச் செய்தார். அவருடைய ஆட்சியின் மூன்றாம் ஆண்டில், மக்கள் அவருக்கு எதிராக சதி செய்து அவரைக் கொன்றனர். பட்டத்து இளவரசராக இருந்த யோசியாவை அரசனாக்கினர். யோசியாவுக்கு அப்போது எட்டு வயதுதான் இருக்கும். ஒருபுறம், யோசியா தனது தந்தையை இழந்தான், மறுபுறம், அவன் தனது குடும்பத்தை காயப்படுத்திய மக்களுக்கு சேவை செய்ய வேண்டியிருந்தது. இந்த சிறிய வயதில் யோசியாவுக்கு இந்த சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
அவனைச் சுற்றி எல்லாம் மோசமாக இருந்தபோதும், அவன் யூதாவின் மிகப்பெரிய ராஜாக்களில் ஒருவராக மாறினான். அவன் மிகப் பெரிய வெற்றியடைந்தான். அவனது தந்தையைப் போல இல்லாமல் நீண்ட காலம் (31 ஆண்டுகள்) ஆட்சி செய்தான். இது எப்படி தெரியுமா? அவனுக்கு தெளிவான கண்கள் இருந்தன. அவனுக்கு எப்படி தெளிவான கண்கள் வந்தது? அவன் வேதாகமத்தை (தேவனுடைய வார்த்தையை) கண்டுபிடித்து, அதை படிக்க ஆரம்பித்தான். அவன் அதைப் படித்தபோது, ​​அவன் செய்த தவறுகளும், அவனுடைய மக்கள் செய்த தவறுகளும் என்ன என்பதை புரிந்துகொண்டான். அவன் தேவனுக்கு கீழ்படிந்தான். அதனால் அவனுடைய வாழ்க்கை வெற்றிகரமாக மாறியது.

செய்தி:
தேவனுடைய வார்த்தை உங்கள் கண்களை தெளிவுபடுத்தும். இன்று வேதம் வாசித்தீர்களா?
(வேத புத்தகம் இல்லாத சிறுவர்களுக்கு நீங்கள் ஒரு வேதத்தை கொடுங்கள்)

செயல்பாடு நேரம்

தேவையான பொருள்கள்: கண்களை கட்ட துணிகள், ஆங்காங்கே வைப்பதற்கு சில பொருள்கள்.

ஆயத்தம் : முடிந்தால், குறிப்பு படத்தில் காட்டப்பட்டுள்ளபடி காகிதத்தால் ஒரு கலங்கரை விளக்கை உருவாக்கவும். இல்லையென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள கலங்கரை விளக்கின் படத்தைக் காட்டலாம்.

செய்முறை:

  • சதுர காகிதத்தைப் பயன்படுத்தி சிறிய காகிதப் படகுகளை உருவாக்க சொல்லுங்கள்.
  • அதை அவர்கள் விரும்பும் விதத்தில் அலங்கரித்து, படகுகளில் தங்கள் பெயரை எழுத சொல்லுங்கள்.
  • வகுப்பின் மையத்தில் காகித கலங்கரை விளக்கத்தை/ படத்தை வைக்கவும்.
  • சிறுவர்களை வட்டமாக உட்கார வைக்கவும்.
  • அவர்கள் படகை தரையில், அவர்களுக்கு அடுத்ததாக வைக்க வேண்டும்.
  • கலங்கரை விளக்கத்தை நோக்கி படகை ஊதச் சொல்லுங்கள்.
  • முதலில் கலங்கரை விளக்கத்திற்கு தங்கள் படகை சேர்ப்பவர்கள் விளையாட்டின் வெற்றியாளர்.

செய்தி:

தேவனுடைய வார்த்தை இருண்ட கடலில் கப்பலை வழிநடத்தும் கலங்கரை விளக்கம் போன்றது. நீங்கள் தேவனுடைய வார்த்தையை வாசித்து, அதற்கு கீழ்படிந்தால் உங்கள் வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்.

டாட்டா

அர்ப்பணிப்பின் ஜெபத்தோடு பாடத்தை நிறைவு செய்யுங்கள்.

Leave a comment