நான்கு பகுதிகளைக் கொண்ட என் வழி! 🏞 என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், இரண்டாவது பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
சாத்தியமற்ற வழி!
வேத பகுதி: யாத்திராகமம் 14:5-31
வேதாகம நிகழ்வு: தேவன் சாத்தியமற்ற சூழ்நிலையில் ஒரு வழியை உருவாக்குகிறார்.
செய்தி: உங்கள் பிரச்சனைகளை தேவனிடம் சொல்லுங்கள். அவரால் மட்டுமே சாத்தியமற்ற சூழ்நிலைகளிலிருந்து ஒரு வழியை உருவாக்க முடியும். அவர் உங்களுக்காக எதையும் செய்வார். ஏனென்றால் அவர் உன்னை அவ்வளவு நேசிக்கிறார்!
அட்டவணை:
- பாடல் நேரம் (10 mins)
- பேசலாம் வாங்க (10 mins)
- மனப்பாட வசனம் ( 5 mins)
- வேதாகம நிகழ்வு (25 mins)
- Game/ Craft நேரம் (10 mins)
🔊Note: உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அட்டவணையை மாற்றிக்கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளையும்/ விவாதங்களையும் நடத்த உங்களுக்கு நேரம் இல்லாமல் போகலாம். கவலை படாதீர்கள். சிறுவர்களுக்கு ஏதோ ஒரு முறையில் செய்தி போய் சேர்வதே நமது குறிக்கோள், அணைத்து செயல்பாடுகளையும் செய்து முடிப்பது அல்ல.
பாடல் நேரம்
சிறுவர்களை பாடல் வேளையில் நடத்துங்கள்.
பேசலாம் வாங்க
நோக்கம்:
இன்றைய பாடத்தின் சூழலை அமைக்க இந்தப் பகுதியைப் பயன்படுத்துவீர்கள்.
தேவையான பொருள்கள்: கீழே உள்ள இரண்டு படங்கள்.


செய்முறை:
கார்ட்டூனில் துரத்தல் காட்சியைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு பெரிய ரோபோ அல்லது பூனை ஒரு சிறு பிள்ளையை அல்லது எலியைத் துரத்துகிறதைப் பார்த்திருக்கிறீர்களா? (சிறுவர்களுக்குப் படங்களைக் காட்டி இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கச் சொல்லுங்கள்)
- படத்தில் உள்ள சிறு பையனாகவோ அல்லது எலியாகவோ இருந்தால் நீங்கள் துரத்தப்படும் போது எப்படி உணருவீர்கள்?
- நீங்கள் துரத்தப்படும்போது எதைத் தேடுவீர்கள்?
பின்பு இதை பகிரவும் :-
சில நேரங்களில் வாழ்க்கை நம்மை துரத்துவது போன்ற உணர்வைத் தருகிறது – உங்களுக்கு அடுத்த நாள் தேர்வு இருக்கும் ஆனால் படிக்க நேரம் போதாது; உங்கள் பள்ளி, உங்கள் வகுப்பை வெளியூர் பயணத்திற்கு அழைத்துச் செல்லலாம், ஆனால் அதற்கு உடனடியாக பணம் செலுத்த உங்கள் பெற்றோரிடம் பணம் இல்லாமல் இருக்கலாம்; உங்கள் நண்பர்கள் ஏதாவது தவறு செய்யும்படி உங்களை வற்புறுத்துவார்கள், என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.
அத்தகைய சூழ்நிலைகளில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உதவி தேடுவீர்கள். உங்களுக்கு உதவ யாரும் இல்லை என்றால், நீங்களே ஒரு வழியைத் தேடுவீர்கள். ஏறக்குறைய 3500 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரவேலர்கள் கடந்து வந்த அதிவேக துரத்தல் பற்றி இன்று நான் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். அவர்கள் தப்பித்தார்களா? ஒரு வழியைக் கண்டுபிடித்தார்களா? அல்லது தோல்வியடைந்தார்களா? நீங்கள் சம்பவத்தைக் கேட்கத் தயாரா? வாங்க ஆரம்பிக்கலாம்!
மனப்பாட வசனம்
கை அசைவுகள் அல்லது ஏதேனும் ஒரு செய்முறையைப் (Actions) பயன்படுத்தி பின்வரும் மனப்பாட வசனத்தை சிறுவர்களுக்குக் கற்பிக்கவும்.
நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். [ஏசாயா 43:19b]
வேதாகம நிகழ்வு
வேத பகுதி: யாத்திராகமம் 14:5-31
சம்பவ சுருக்கம்:
இஸ்ரவேலர்கள் கிட்டத்தட்ட 400 ஆண்டுகளாக எகிப்தியர்களின் கீழ் அடிமைகளாக இருந்தனர். கடவுளின் ஊழியர் மற்றும் அவர்களின் பெரிய தலைவரான மோசே மூலம் வலிமைமிக்க அற்புதங்களைச் செய்து எகிப்தை விட்டு வெளியேற தேவன் அவர்களுக்கு உதவினார். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் இஸ்ரவேலர்கள் வெளியேறி சுமார் 3 நாட்கள் சென்றபோது, எகிப்தியர்கள் தாங்கள் செய்ததை உணர்ந்தனர். அவர்கள் தங்கள் அடிமைகளை விடுவித்து விட்டனர், இப்போது அவர்கள் அனைத்து கடினமான வேலைகளையும் தாங்களே செய்ய வேண்டியிருந்தது. அவர்களுக்கு அது பிடிக்கவே இல்லை. பார்வோன் ராஜா 600 ரதங்களை உள்ளடக்கிய தனது பெரிய படையைத் திரட்டி இஸ்ரவேலியர்களுக்குப் பின் அனுப்பினார். அதிவேக துரத்தல் அங்குதான் தொடங்குகிறது.
இஸ்ரவேலர்கள் மகிழ்ச்சியுடன் செங்கடலுக்கு முன்பாக முகாமிட்டுக் கொண்டிருந்தார்கள். தேவன் தங்களுடைய அடுத்த கட்டத்தைக் காட்டுவதற்காகக் காத்திருந்தார்கள். திடீரென்று, பயங்கரமான எகிப்திய இராணுவம் தங்களை நோக்கி வருவதை அவர்கள் கவனித்தனர். பீதியடைந்தனர். அழுது பிரார்த்தனை செய்தனர். தங்கள் தலைவன் மோசேயிடம் முறையிட்டு, எகிப்தியர்கள் தங்களைக் கொன்றுவிடுவார்கள் என்று சொன்னார்கள். அவர்கள் நினைத்ததும் சரிதான். வெளியேற வழியில்லை – அவர்களுக்கு முன்னால் செங்கடல் மற்றும் பின்னால் கொலையாளி இராணுவம் இருந்தது.
ஆனால் உடன் இருந்த இன்னொருவரை மறந்துவிட்டார்கள். அது யார் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஆம்! தேவன். தேவன் அங்கே இருந்தார், அவர் இஸ்ரவேலர்களை ஒரு சாத்தியமற்ற வழியைக் காண தயாராகும்படி சொன்னார்! அவர் மோசேயிடம் தனது தடியை கடலை நோக்கி நீட்ட சொன்னார். என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள்? கடல் இரண்டாகப் பிரிந்தது. பலத்த காற்று வீசியதால் கடலின் அடிப்பகுதி காய்ந்தது. தேவன் ஒரு சாத்தியமற்ற சூழ்நிலையில் ஒரு வழியை உருவாக்கினார். இஸ்ரவேலர்கள் இரண்டு பெரிய நீர் மதில்கள் நடுவில் உள்ள வறண்ட நிலத்தின் சென்று கடலைக் கடந்தார்கள். எவ்வளவு ஆச்சரியமாக இருந்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
எதிரிகளுக்கு என்ன ஆனது? அவர்கள் தண்ணீர் மதில்கள் வழியாக இஸ்ரவேலியர்களை பின்தொடர முயன்றனர். ஆனால் தேவன் அவர்களின் படையைக் குழப்பினார். அவர்களின் ரதச் சக்கரங்கள் தானாக கழன்றுவிட்டன. தேவன் இஸ்ரவேலியர்களுக்கு ஒரு வழி செய்கிறார் என்பதையும், தாங்கள் அவர்கள் தேவனுக்கு எதிராகப் போராடுகிறோம் என்று எகிப்தியர்கள் உணர்ந்தார்கள். இஸ்ரவேலர்கள் கடலை கடந்ததும், கடல் நீர் தன் நிலைக்குத் திரும்பியது. இஸ்ரவேலியர்களைப் பின்தொடர்ந்து கடலுக்குள் சென்ற எகிப்தின் முழு இராணுவமும் கடல் நீரில் மூழ்கியது.
உங்கள் பிரச்சனைகளைப் பற்றி தேவனிடம் பேசுங்கள். முடியாத சூழ்நிலையில் அவரால் மட்டுமே வழி உண்டாக முடியும். உங்களுக்காக அவர் எல்லாவற்றையும் செய்வர். உங்களை அவ்வளவு நேசிக்கிறார்!
விளையாட்டு நேரம்
தேவையான பொருள்கள்: எதுவும் இல்லை

செய்முறை:
- சிறுவர்களை 4 சம குழுக்களாக பிரிக்கவும்.
- காட்டப்பட்டுள்ளபடி 4 வரிகளில் ஒன்றன் பின் ஒன்றாக நிற்க வைக்கவும்.
- 4 வரிகளுக்கு இடையில் 3 இடைவெளிகள் இருக்கும். அவற்றை 1, 2, 3 அல்லது நிறம்/ விலங்கு/ பூ போன்றவையை பெயரிடவும்.
இடைவெளிகளை நிரப்ப, கைகளை பக்கமாக உயர்த்தச் சொல்லுங்கள் (படத்தைப் பார்க்கவும்). - இடைவெளிகளின் பெயர்களை வெவ்வேறு வரிசையில் அழைக்கவும்.
- அழைக்கப்படும் இடைவெளியை நிரப்பும் சிறுவர்கள் தங்கள் கைகளைத் கீழே போட்டு ஒரு வழியை உருவாக்க வேண்டும்.
- வரிசையில் யாரேனும் தவறாகப் செய்தால், அவர்களை வரிசையின் பின்புறம் சென்று உட்காரச் சொல்லுங்கள்.
- இறுதிவரை நிற்பவர்கள் வெற்றியாளர்கள்.
- இன்றைய செய்தியை நினைவூட்டுங்கள் – நம் தேவன் சாத்தியமற்ற வழிகளை உருவாக்குகிறார்.
கைவினை நேரம்
தேவையான பொருள்கள்: ஒவ்வொரு சிறுவருக்கும் ஒரு சிறிய செவ்வக வெள்ளை மற்றும் நீல நிற காகிதம், ஸ்கெட்ச் பேனா, பசை

ஆயத்தம்:
- நீல தாளை பாதியாக வெட்டுங்கள். இரண்டு தாள்களின் ஒரு பக்கத்திலும் செருகல்களைச் செய்யுங்கள். இது தண்ணீரின் சுவர்களை உருவாக்க பயன்படும். (குறிப்பு: நீல தாள் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு வெள்ளை தாளைக் கொடுத்து, சிறுவர்களை நீல நிறம் தீட்ட சொல்லுங்கள் )
- காட்டப்பட்டுள்ளபடி வெள்ளை தாளை நடுவில் பிரிக்கும் இரண்டு (நேராக/வளைந்த) கோடுகளை வரையவும். கோடுகளுக்கு இடையில் உள்ள இடத்தை வட்டங்களால் நிரப்பவும்.

செய்முறை
- சிறுவர்கள் நீலத் தாள்களில் மீன்களை வரைந்து, காட்டப்பட்டுள்ளபடி வெள்ளைத் தாளின் இரு பக்கங்களில் ஓட்ட வேண்டும்.

- காட்டப்பட்டுள்ளபடி தண்ணீரின் சுவர்களை உருவாக்க தாள்களை மேல்நோக்கி மடியுங்கள்.
- சாத்தியமற்ற வழியில் நடந்த இஸ்ரவேலர்களை உள் வட்டங்கள் குறிக்கின்றன.
- சிறுவர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து, வட்டத்திற்குள் ஈமோஜிகளை வரையச் சொல்லுங்கள்.
- விரும்பினால் அவர்கள் உலர்ந்த தரையையும் வண்ணமயமாக்கலாம்.

டாட்டா
அர்ப்பணிப்பின் ஜெபத்தோடு பாடத்தை நிறைவு செய்யுங்கள்.

Leave a comment