வெற்றிக்கான வழி – வேதாகம நீதிக் கதைகள் 1

Published by

on

வெற்றிக்கான வழி – வேதாகம நீதிக் கதைகள் 1” என்ற 4 பகுதி கொண்ட பாடத் திட்டத்தை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தச் செய்தியை சிறுவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அவர்களுக்கு எடுத்துச் செல்ல இந்த பாடத் திட்டம் உதவும் என்று நம்புகிறோம்.

குறிப்பு: செய்தியின் ஆழத்தை உங்கள் பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்க உங்கள் அனுபவத்தைப் பயன்படுத்தவும்.

இந்தப் பாடத் திட்டமானது (கட்டாயமற்ற) பணித்தாள்களுடன் வருகிறது. நீங்கள் அதை எங்கள் ஆன்லைன் ஸ்டோரில் வாங்கலாம்.

J4K Lesson Plan > Outline

விரிவான பாடங்களுக்கு பட்டன்களை கிளிக் செய்யவும்.

01


நன்றி சொல்

வேத பகுதி: லூக்கா 17:11-19

வேதாகம நிகழ்வு: பத்து குஷ்டரோகிகளில் நன்றி சொன்ன ஒரு குஷ்டரோகி

செய்தி :
வாழ்க்கையில் உன்னிடம்
உள்ள அனைத்தும்
ஒரு பரிசு. உன்னிடம் இருப்பது பலரிடம் இல்லை.
நன்றியுடன் வாழு!

மனப்பாட வசனம்:
எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள். [1 தெசலோனிக்கேயர் 5:18]

02


பகிர்ந்து கொடு

வேத பகுதி: யோவான் 6:1-14

வேதாகம நிகழ்வு: தன்னிடம் இருந்ததை பகிர்ந்து கொடுத்த சிறுவன்

செய்தி :
உன்னிடம் இருப்பதை பகிர்ந்து
கொடு! நீ எவ்வளவு
அதிகமாகப் பகிர்கிறாயோ, அவ்வளவு
அதிகமாக நீ திரும்பப் பெறுவாய்.

மனப்பாட வசனம்:
கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்
[லூக்கா 6:38]

03


ஒப்பிடாதே

வேத பகுதி: தானியேல் 6

வேதாகம நிகழ்வு: பொறாமை கொண்ட பிரதானிகளும் தேசாதிபதிகளும்

செய்தி:
உன்னை மற்றவர்களுடன் ஒப்பிடாதே. உன்னை
உன்னுடன் மட்டுமே ஒப்பிடு.
அப்படி வாழ்ந்தால் நீ எப்போதும்
வெற்றியை நோக்கி
ஓடுவாய்

மனப்பாட வசனம்:
ஒருவன் தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. அவனவன் தனது செயல்களைச் சீர்தூக்கிப் பார்ப்பானாக. பிறகு அவன் தன்னால் செய்ய முடிந்த காரியங்களைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்ள இடமிருக்கும். [கலாத்தியர் 6:4]

04


வேத பகுதி: 1 இராஜாக்கள் 19 : 19

வேதாகம நிகழ்வு: கடின உழைப்பாளியான எலிசா

செய்தி:
சோம்பேறிகள் வெற்றி பெற மாட்டார்கள். கடின உழைப்பாளிகளே இறுதியில் வெற்றி பெறுவார்கள். நீ கடினமாய் உழைப்பவரா?

மனப்பாட வசனம்:
சோம்பேறி பலவற்றை விரும்புவான், ஆனால் அவனால் அவற்றை அடைய முடிவதில்லை.ஆனால் கடினமாக உழைக்கிறவர்கள் தாம் விரும்புவதைப் பெற்றுக்கொள்வார்கள். [நீதிமொழிகள் 13:4]

Leave a comment