பகுதி 1 – வேதாகம நீதிக் கதைகள் 1

Published by

on

நான்கு பகுதிகளைக் கொண்ட வெற்றிக்கான வழி – வேதாகம நீதிக் கதைகள் 1 என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், முதலாவது பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

நன்றி சொல்

வேத பகுதி: லூக்கா 17:11-19

வேதாகம நிகழ்வு: பத்து குஷ்டரோகிகளில் நன்றி சொன்ன ஒரு குஷ்டரோகி

செய்தி: வாழ்க்கையில் உன்னிடம்
உள்ள அனைத்தும்
ஒரு பரிசு. உன்னிடம் இருப்பது பலரிடம் இல்லை. நன்றியுடன் வாழு!

அட்டவணை:
  1. பாடல் நேரம் (10 mins)
  2. மனப்பாட வசனம் ( 5 mins)
  3. வேதாகம நிகழ்வு (25 mins)
  4. பேசலாம் வாங்க (10 mins)
  5. Game/ Craft நேரம் (10 mins)

🔊Note: உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அட்டவணையை மாற்றிக்கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளையும்/ விவாதங்களையும் நடத்த உங்களுக்கு நேரம் இல்லாமல் போகலாம். கவலை படாதீர்கள். சிறுவர்களுக்கு ஏதோ ஒரு முறையில் செய்தி போய் சேர்வதே நமது குறிக்கோள், அணைத்து செயல்பாடுகளையும் செய்து முடிப்பது அல்ல.

பாடல் நேரம்

சிறுவர்களை பாடல் வேளையில் நடத்துங்கள்.

மனப்பாட வசனம்

வேதாகம நிகழ்வு

வேத பகுதி: லூக்கா 17:11-19

சம்பவ சுருக்கம்:
சமாரியர்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாக கருதப்பட்டனர். அவர்களது அண்டை வீட்டாரான யூதர்கள் அவர்களுடன் எந்த விதமான தொடர்பும் கொண்டிருக்கவில்லை.

இச்சம்பவத்தின் போது குஷ்டரோகம் என்பது குணப்படுத்த முடியாத நோயாக இருந்தது. தொழுநோயாளிகள் ஊருக்கு வெளியே தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் தனிமையில் வாழ வைக்கப்பட்டனர்.

​​குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சமாரியனை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அவர் வாழ்க்கை எவ்வளவு கஷ்டமாகவும் தனிமையாகவும் இருந்திருக்கும், இல்லையா? அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றித்தான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

அவர் தன் வாழ்க்கையை பற்றி முணுமுணுக்க அநேக ஞாயமான கரணங்கள் இருந்தன. ஆனால் அவர் வேற மாறி வாழ்ந்தார். மற்றவர்கள் ஏன் உன்னைப்போல் செய்யவில்லை என்று இயேசப்பா அவரை பார்த்து கேட்கும் அளவு ஒரு ஆச்சரியமான நல்ல விஷயத்தை அவர் செய்தார். அதை பற்றி கேட்க நீங்க ரெடியா?

<இயேசுவால் குணமாக்கப்பட்ட 10 குஷ்டரோகிகளின் சம்பவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். முணுமுணுக்க எல்லா காரணங்களும் இருந்தாலும், இயேசுவுக்கு நன்றி தெரிவித்தவர் பற்றி அதிகம் சொல்லுங்கள்>

பேசலாம் வாங்க

கீழே கொடுக்கப்பட்ட கேள்விகளை கொண்டு சிறுவர்களை கலந்துரையாட உற்சாகப்படுத்துங்கள். பின்னர் அர்ப்பண ஜெபத்தில் சிறுவர்களை நடத்தி, இப்பகுதியை நிறைவுச் செய்யுங்கள்.

  • சமாரியன் முணுமுணுக்ககூடிய சில நியாயமற்ற கரணங்கள் என்ன?
  • சமாரியன் என்ன செய்யத் தேர்ந்தெடுத்தார்? முணுமுணுவா அல்லது நன்றி சொல்லவா?
  • நீங்கள் நன்றி சொல்வதால் என்ன நடக்கும்?
விளையாட்டு நேரம்

ஆயத்தம் : வகுப்பு தொடங்கும் முன் ஒரு சிறிய பிளாஸ்டிக் பாக்ஸை கலர் பேப்பரால் அலங்கரித்து, அதை ‘கிப்ட் பாக்ஸ்’ என்று அழைக்கவும்.

செய்முறை:
சிறுவர்களை ஒரு வட்டத்தில் நிற்க வைக்கவும். ‘கிப்ட் பாக்ஸ்’யை ஒருவரிடம் கொடுங்கள். அவர்கள் பெட்டியைப் பெற்றவுடன், நீங்கள் சத்தமாக 5 வரை எண்ணத் தொடங்கவும். நீங்கள் 5 எண்ணி முடிப்பதற்குள், பெட்டியைப் பெற்ற பிள்ளை “நன்றி” என்று கூறி, பெட்டியை வேறொருவரிடம் வீச வேண்டும். பரிசைக் பெற்றதும் “நன்றி” என்று சொல்லத் தவறினால், அவர்களை உட்காரச் சொல்லுங்கள். விளையாட்டு முன்னேறும்போது நீங்கள் எண்ணும் எண்களைக் குறைக்கவும். ஆட்டம் முடியும் வரை நின்று கொண்டிருப்பவர்களை வெற்றியாளர்களாக அறிவிக்கவும்.

கைவினை நேரம்

தேவையான பொருள்கள்:
Butterfly Cutout, சிறிய காகித துண்டு, ரிப்பன், சம்கி, crayons, பேனா அல்லது பென்சில்

செய்முறை:
முதலில் பிள்ளைகளிடம் யாருக்கு அவர்கள் நன்றி சொல்ல விரும்புகிறார்கள் என்று கேளுங்கள். பிறகு சிறிய காகித துண்டையும், பேனா அல்லது பென்சிலை கொண்டு ஒரு சிறிய நன்றி செய்தியை எழுதச் சொல்லுங்கள் பின் பிள்ளைகள் எழுதிய துண்டு காகிதத்தை சுருட்டி அதை க்ஷரவவநசகடல ஊரவடிரவ டில் நீல வாக்கில் வைத்து கட்ட சொல்லுங்கள் ( மாதிரி படத்தை பார்க்கவும் ). முடிவாக அவரவர் விருப்பத்தின் படி வண்ணம் தீட்ட சொல்லுங்கள். இப்பொழுது அவர்களின் க்ஷரவவநசகடல ரெடி.

டாட்டா

அர்ப்பணிப்பின் ஜெபத்தோடு பாடத்தை நிறைவு செய்யுங்கள்.

Leave a comment