பகுதி 2 – வேதாகம நீதிக் கதைகள் 1

Published by

on

நான்கு பகுதிகளைக் கொண்ட வெற்றிக்கான வழி – வேதாகம நீதிக் கதைகள் 1 என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், இரண்டாவது பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

பகிர்ந்து கொடு

வேத பகுதி: யோவான் 6:1-14

வேதாகம நிகழ்வு: தன்னிடம் இருந்ததை பகிர்ந்து கொடுத்த சிறுவன்

செய்தி: உன்னிடம் இருப்பதை பகிர்ந்து
கொடு! நீ எவ்வளவு அதிகமாகப் பகிர்கிறாயோ, அவ்வளவு
அதிகமாக நீ திரும்பப் பெறுவாய்.

அட்டவணை:
  1. பாடல் நேரம் (10 mins)
  2. மனப்பாட வசனம் ( 5 mins)
  3. வேதாகம நிகழ்வு (25 mins)
  4. பேசலாம் வாங்க (10 mins)
  5. Craft நேரம் (10 mins)

🔊Note: உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அட்டவணையை மாற்றிக்கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளையும்/ விவாதங்களையும் நடத்த உங்களுக்கு நேரம் இல்லாமல் போகலாம். கவலை படாதீர்கள். சிறுவர்களுக்கு ஏதோ ஒரு முறையில் செய்தி போய் சேர்வதே நமது குறிக்கோள், அணைத்து செயல்பாடுகளையும் செய்து முடிப்பது அல்ல.

பாடல் நேரம்

சிறுவர்களை பாடல் வேளையில் நடத்துங்கள்.

மனப்பாட வசனம்

வேதாகம நிகழ்வு

வேத பகுதி: யோவான் 6:1-14

தன்னிடம் இருந்ததை பகிர்ந்து கொடுத்த சிறுவன்

பேசலாம் வாங்க

ஆயத்தம் : பிஸ்கட்

செய்முறை:
வகுப்பை 6-7 சிறுவர்கள்க் கொண்ட சில சிறிய குழுக்களாகப் பிரிக்கவும். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பிஸ்கட் கொடுங்கள். அந்த ஒரு பிஸ்கட்டை என்ன செய்வது என்று சிறுவர்களை தங்களுக்குள் பேசி முடிவு செய்யச் சொல்லுங்கள். (ஒரு நபர் முழு பிஸ்கட்டையும் சாப்பிடுவாரோ? வேறு குழுவிற்கு கொடுப்பார்களா? தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்களா?) சிறுவர்கள் இன்று வகுப்பில் கற்றதை நடைமுறைப்படுத்துகிறார்களா என்று பாருங்கள்.

கைவினை நேரம்

தேவையான பொருள்கள்:
நீளமான காகித துண்டு, 2 சிறிய காகித துண்டுகள், crayons

செய்முறை:
முதலில் பிள்ளைகளிடம் Rectangular Chart paper ஐ சரி பாதியாக மடிக்க சொல்லுங்கள். இரண்டு சிறிய காகித கைகளை வெட்டி அவற்றை வண்ணம் தீட்டவும். மடிந்த காகிதத்தின் இரு ஓரங்களிலும் காகித கைகளை ஒட்டவும். புத்தகத்தின் பக்கங்களுக்கு இடையில் வைத்து, காட்டப்பட்டுள்ளபடி கைகளை மடியுங்கள். புக்மார்க் தயாராக உள்ளது. நீங்கள் கைகளைத் திறந்தால், புக்மார்க் வேலை செய்யும்.

டாட்டா

அர்ப்பணிப்பின் ஜெபத்தோடு பாடத்தை நிறைவு செய்யுங்கள்.

Leave a comment