நான்கு பகுதிகளைக் கொண்ட வெற்றிக்கான வழி – வேதாகம நீதிக் கதைகள் 1 என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், மூன்றாவது பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
ஒப்பிடாதே
வேத பகுதி: தானியேல் 6
வேதாகம நிகழ்வு: பொறாமை கொண்ட பிரதானிகளும் தேசாதிபதிகளும்
செய்தி: உன்னை மற்றவர்களுடன் ஒப்பிடாதே. உன்னை
உன்னுடன் மட்டுமே ஒப்பிடு.
அப்படி வாழ்ந்தால் நீ எப்போதும்
வெற்றியை நோக்கி
ஓடுவாய்.
அட்டவணை:
- பாடல் நேரம் (10 mins)
- மனப்பாட வசனம் ( 5 mins)
- வேதாகம நிகழ்வு (25 mins)
- பேசலாம் வாங்க (10 mins)
- Craft நேரம் (10 mins)
🔊Note: உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அட்டவணையை மாற்றிக்கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளையும்/ விவாதங்களையும் நடத்த உங்களுக்கு நேரம் இல்லாமல் போகலாம். கவலை படாதீர்கள். சிறுவர்களுக்கு ஏதோ ஒரு முறையில் செய்தி போய் சேர்வதே நமது குறிக்கோள், அணைத்து செயல்பாடுகளையும் செய்து முடிப்பது அல்ல.
பாடல் நேரம்
சிறுவர்களை பாடல் வேளையில் நடத்துங்கள்.
மனப்பாட வசனம்
கை அசைவுகள் அல்லது ஏதேனும் ஒரு செய்முறையைப் (Actions) பயன்படுத்தி பின்வரும் மனப்பாட வசனத்தை சிறுவர்களுக்குக் கற்பிக்கவும்.
ஒருவன் தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. அவனவன் தனது செயல்களைச் சீர்தூக்கிப் பார்ப்பானாக. பிறகு அவன் தன்னால் செய்ய முடிந்த காரியங்களைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்ள இடமிருக்கும். [கலாத்தியர் 6:4]
வேதாகம நிகழ்வு
வேத பகுதி: தானியேல் 6
பொறாமை கொண்ட பிரதானிகளும் தேசாதிபதிகளும்
பேசலாம் வாங்க
செய்முறை:
சிறுவர்களை இரண்டு குழுக்களாகப் பிரிக்கவும். ஒவ்வொரு குழுவிற்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையை தேர்ந்தெடுத்து விளைவுகளைச் செயல்படுத்தச் சொல்லுங்கள்.
சூழ்நிலை #1: தானியேலின் சகாக்கள் தங்களை தானியேல் உடன் ஒப்பிட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டனர்.
சூழ்நிலை #2: தானியேலின் சகாக்கள் தங்களை தானியேல் உடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் வாழ்வில் செழித்தனர்.
கைவினை நேரம்
தேவையான பொருள்கள்: ஒர்க்க்ஷீட், பென்சில்/ பேணா
செய்முறை: சிறுவர்களிடம் ஒர்க்ஸீட்டை கொடுத்து இரு படங்களுக்கும் உள்ள பத்து வித்தியாசங்களை கண்டுபிடிக்கச்சொல்லுங்கள். பின் படத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் எழுத சொல்லுங்கள். இன்றைய தினத்தின் செய்தியை மீண்டும் அவர்களுக்கு ஞாபகப்படுத்துங்கள்.

படத்தில் உள்ள யானையை ஒட்டகச்சிவிங்கியுடன் ஒப்பிட்டுப் பார்த்தாயா? இல்லை
யானையை யானையுடன் தானே ஒப்பிட்டாய்? ஆம்
உன்னை யாருடன் ஒப்பிட வேண்டும்? உன்னுடன்
டாட்டா
அர்ப்பணிப்பின் ஜெபத்தோடு பாடத்தை நிறைவு செய்யுங்கள்.

Leave a comment