பகுதி 4 – வேதாகம நீதிக் கதைகள் 1

Published by

on

நான்கு பகுதிகளைக் கொண்ட வெற்றிக்கான வழி – வேதாகம நீதிக் கதைகள் 1 என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், நான்காவது பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

கடினமாக உழை

வேத பகுதி: 1 இராஜாக்கள் 19 : 19

வேதாகம நிகழ்வு: கடின உழைப்பாளியான எலிசா

செய்தி: சோம்பேறிகள் வெற்றி பெற மாட்டார்கள். கடின உழைப்பாளிகளே இறுதியில் வெற்றி பெறுவார்கள். நீ கடினமாய் உழைப்பவரா?

அட்டவணை:
  1. பாடல் நேரம் (10 mins)
  2. மனப்பாட வசனம் ( 5 mins)
  3. வேதாகம நிகழ்வு (25 mins)
  4. விளையாட்டு + பேசலாம் வாங்க நேரம் (20 mins)

🔊Note: உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அட்டவணையை மாற்றிக்கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளையும்/ விவாதங்களையும் நடத்த உங்களுக்கு நேரம் இல்லாமல் போகலாம். கவலை படாதீர்கள். சிறுவர்களுக்கு ஏதோ ஒரு முறையில் செய்தி போய் சேர்வதே நமது குறிக்கோள், அணைத்து செயல்பாடுகளையும் செய்து முடிப்பது அல்ல.

பாடல் நேரம்

சிறுவர்களை பாடல் வேளையில் நடத்துங்கள்.

மனப்பாட வசனம்

வேதாகம நிகழ்வு

வேத பகுதி: 1 இராஜாக்கள் 19 : 19

உங்களில் யாராவது 1 இராஜாக்கள் 19:19 ஐ சத்தமாக வாசிக்க முடியுமா? இந்த வசனம் எலிசா வயலை உழுது கொண்டிருந்ததாக கூறுகிறது. இந்த ஒரு வசனத்திலிருந்து எலிசாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் வேலைக்காரரா? அவர் எஜமானரா? (சிறுவர்கள் பதிலளிக்கட்டும்) யாருக்கும் உறுதியாகத் தெரியாது ஆனால் வேதத்தில் அவரைப் பற்றி சொல்லப்பட்ட விவரங்கள், அவர் ஒரு பணக்கார குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதைக் காட்டுகின்றன. அவரது குடும்பம் பணக்காரர்களால் மட்டுமே வாங்கக்கூடிய 12 எருது அணிகளை வைத்திருந்தது. வாங்க எலிசாவைப் பற்றி இன்னும் ஆழமாக ஆராய்வோம். வயல்களை உழுவதற்கு போதுமான வேலையாட்கள் அவருக்கு நிச்சயம் இருந்திருக்க வேண்டும். வேலைகளை செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிடும் எஜமானராக அவர் இருந்திருக்கலாம். ஆனால் எலிசாவைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது தெரியுமா? மீண்டும் 19வது வசனத்தை வாசிப்போம். எலிசா பன்னிரண்டாம் அணியுடன் சேர்ந்து உழவு செய்து கொண்டிருந்தார் என்று அது கூறுகிறது. அது கடின உழைப்பு. எலிஷா சோம்பலை விட கடின உழைப்பைத் தேர்ந்தெடுத்தார்.
இதை யார் பார்த்தார் என்று நினைக்கிறீர்கள்? ஆம், தேவன் பார்த்தார். முழு பிரபஞ்சத்திலும் மிகப் பெரிய முதலாளியான அவருக்கு சேவை செய்ய எலிசாவை அழைத்தார். தேவன் எலிசா மூலம் பலத்த அற்புதங்களைச் செய்தார். எலிசா தேவனின் உதவியால் கசப்பான நீரை இனிமையாக்கினார், ஒரு குஷ்டரோகியை குணப்படுத்தினார், ஒரு பையனை மரணத்திலிருந்து எழுப்பினார். தேவன் கடின உழைப்பாளிகளைத் பார்க்கிறார். அவர்களை தேர்ந்தெடுத்து, தங்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் பெரிய காரியங்களைச் செய்ய அவர்களைப் பயன்படுத்துகிறார். நீங்கள் கடினமாக உழைப்பவரா?

விளையாட்டு + பேசலாம் வாங்க நேரம்

தேவையான பொருள்கள்: செய்தித்தாள்கள்

செய்முறை: வகுப்பை சிறிய குழுக்களாகப் பிரிக்கவும். ஒவ்வொரு குழுவிற்கும் சில செய்தித்தாள்கள் கொடுங்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு உயரமான கோபுரத்தை உருவாக்க சொல்லுங்கள். மிக உயரமான கோபுரத்தை உருவாக்கும் அணி வெற்றி பெறும். விளையாட்டின் முடிவில் கீழ் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை சிறுவர்களிடம் கேட்டு கலந்துரையாடுங்கள்.

  • வாழ்க்கையில் சாதிக்க முயற்சியும் கடின உழைப்பும் தேவையா? இல்லையா? ஏன் அப்படி நினைக்கிறீர்கள் என்று விவரித்து சொல்லுங்களேன்.
  • இன்றைய சவாலை நன்றாய் செய்ய யாரெல்லாம் முயற்சி எடுத்தீர்கள்?
  • முயற்சி செய்யாமல் ஒரு கோபுரத்தை கட்டியிருக்க முடியுமா?
டாட்டா

அர்ப்பணிப்பின் ஜெபத்தோடு பாடத்தை நிறைவு செய்யுங்கள்.

Leave a comment