
இன்றைய உலகில் மற்றவர்களை வார்த்தைகளால் புண்படுத்திவிட்டு “சும்மா (எளிமையாக தமிழில்) சொன்னேன்” என்று எளிமையாகச் சொல்வது பரவாயில்லை. உயர்வதற்கு மற்றவர்களை கீழ்ப்படுத்துவது அவசியமாய் தோன்றுகிறது. “என்னக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” என்று சொல்வது நாகரீகமானது. குழந்தைகள் பெற்றோரை மதிப்பதை விட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மதிக்கிறார்கள். தேவனுக்காகவும் ஊழியத்திற்காகவும் தன்னையும் குடும்பத்தையும் புறக்கணிப்பது பாராட்டக்கூடிய விஷயம்மாக தோன்றுகிறது.
ஆனால் வேதம் முற்றிலும் மாறுபட்ட வழியை பரிந்துரைக்கிறது. மகத்துவத்திற்கு வழிவகுக்கும் ஒரு வழி ஆகும். கிட்டத்தட்ட தொலைந்து போன ஒரு வழியும் ஆகும்.
இழந்த கனத்தையைக் கண்டுபிடிக்க வேண்டிய காலம் இது. வார்த்தையை, மற்றவர்களளை, தேவனை, பெற்றோர்களை மற்றும் தன்னை கனம் கொடுக்க வேண்டிய நேரம் இது.
இந்த உயர்ந்த வேதாகம கோட்பாடுகளை கைக்கொண்டால், சிறுவர்கள் சிறந்த மனிதர்களாக அவர்கள் இருக்கும் இடங்களில் மாறுவார்கள். சிறுவர்களிடம் இந்த முக்கிய சத்தியத்தை அறிவிக்க எங்களுடன் இணைவீர்களா, ஆசிரியர்களே?
“காணாமற்போன கனம்” என்ற 5 பகுதி கொண்ட பாடத் திட்டத்தை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தச் செய்தியை சிறுவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அவர்களுக்கு எடுத்துச் செல்ல இந்த பாடத் திட்டம் உதவும் என்று நம்புகிறோம்.
குறிப்பு: செய்தியின் ஆழத்தை உங்கள் பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்க உங்கள் அனுபவத்தைப் பயன்படுத்தவும்.
Quick Links
J4K Lesson Plan > Outline
விரிவான பாடங்களுக்கு பட்டன்களை கிளிக் செய்யவும்.
01
பேச்சைக் கனப்படுத்து
வேத பகுதி: மாற்கு 4: 35-41
வேதாகம நிகழ்வு: இயேசு தன் வார்த்தையை கனப்படுத்தினார்
மனப்பாட வசனம்:
உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். [மத்தேயு 5:37]
02
பிறரைக் கனப்படுத்து
வேத பகுதி: மத்தேயு 20: 20-28
வேதாகம நிகழ்வு: இயேசு மற்றவர்களுக்கு சேவை செய்தார்
மனப்பாட வசனம்:
உங்களில் ஒருவன் பெரியவனாக ஆக விரும்பினால், அவன் உங்களுக்கு ஒரு வேலைக்காரனைப் போல ஊழியம் செய்ய வேண்டும். [மத்தேயு 20:26]
03
தேவனைக் கனப்படுத்து
வேத பகுதி: யோவான் 9:1-38
வேதாகம நிகழ்வு: பார்வையற்றவன் தேவனை கனப்படுத்தினார்
மனப்பாட வசனம்:
மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன். [மத்தேயு 10:32]
04
பெற்றோரைக் கனப்படுத்து
வேத பகுதி: லூக்கா 2:41-52
வேதாகம நிகழ்வு: இயேசு தன்னுடைய பூமிக்குரிய பெற்றோருக்குக் கீழ்ப்படிந்தார்
மனப்பாட வசனம்:
உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. [யாத்திராகமம் 20:12b]
05
உன்னைக் கனப்படுத்து
வேத பகுதி: மாற்கு 1: 35-39
வேதாகம நிகழ்வு: இயேசுவுக்கு “என்” நேரம் (Me Time) இருந்தது
மனப்பாட வசனம்:
உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக. [மாற்கு 12:31b]

Leave a comment