ஐந்து பகுதிகளைக் கொண்ட காணாமற்போன கனம் என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், முதலாவது பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
பேச்சைக் கனப்படுத்து
வேத பகுதி: மாற்கு 4: 35-41
வேதாகம நிகழ்வு: இயேசு தன் வார்த்தையை கனப்படுத்தினார்
செய்தி: எவ்வளவு கடினமாக இருந்தாலும் நீங்கள் சொல்வதை செய்யுங்கள். வாழ்க்கையில் வெற்றிபெறுபவர்கள் தங்கள் சொந்த வார்த்தையை கணம் செய்கிறார்கள்.
அட்டவணை:
- பாடல் நேரம் (10 mins)
- மனப்பாட வசனம் ( 5 mins)
- பேசலாம் வாங்க (10 mins)
- வேதாகம நிகழ்வு (25 mins)
- Game/ Craft நேரம் (10 mins)
🔊Note: உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அட்டவணையை மாற்றிக்கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளையும்/ விவாதங்களையும் நடத்த உங்களுக்கு நேரம் இல்லாமல் போகலாம். கவலை படாதீர்கள். சிறுவர்களுக்கு ஏதோ ஒரு முறையில் செய்தி போய் சேர்வதே நமது குறிக்கோள், அணைத்து செயல்பாடுகளையும் செய்து முடிப்பது அல்ல.
பாடல் நேரம்
சிறுவர்களை பாடல் வேளையில் நடத்துங்கள்.
மனப்பாட வசனம்
கை அசைவுகள் அல்லது ஏதேனும் ஒரு செய்முறையைப் (Actions) பயன்படுத்தி பின்வரும் மனப்பாட வசனத்தை சிறுவர்களுக்குக் கற்பிக்கவும்.
உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். [மத்தேயு 5:37]
பேசலாம் வாங்க
நோக்கம்:
இன்றைய பாடத்தின் சூழலை அமைக்க இந்தப் பகுதியைப் பயன்படுத்துவீர்கள்.
தேவையான பொருள்கள்: ஒரு சிறிய பெட்டியை அலங்கரித்து அதில் “இழந்து கண்டுபிடிக்கப்பட்டது (Lost and found)” என்று எழுதவும். A4 தாளில் ஒரு பெரிய வாயை வரைந்து வெட்டுங்கள். பெட்டியின் உள்ளே காகித வாயை வைக்கவும்.
செய்முறை:
இது உட்பட வரவிருக்கும் 5 வாரங்களில், கணத்தை இழந்த 5 முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிக்கப் போகிறீர்கள் என்று சிறுவர்களுக்குச் சொல்லுங்கள். இந்த முக்கியமான விஷயங்கள் சாதாரண மனிதர்களை அசாதாரணமாக உருவாக்குகின்றன. உங்கள் சிறுவர்கள் சிறந்த மனிதர்களாக மாறுவதற்கு இந்த சாத்தியங்களை கவனமாக கேட்க ஊக்கப்படுத்துங்கள்.
பெட்டியைக் காட்டி, பெட்டியில் முதல் இழந்த பொருள் என்ன என்று யூகிக்கச் சொல்லுங்கள். சிறுவர்கள் சில பதில்கள் சொன்னதற்கு பின், உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் காட்டி, பின்வரும் அறிமுகத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்:
ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 16000 வார்த்தைகள் பேசுகிறான் என்பது உங்களுக்குத் தெரியுமா? எவ்வளவு அதிகம் பேசுகிறோம், இல்லையா? இருப்பினும், அந்த வார்த்தைகளில் பலவற்றிற்கு ஒரு மதிப்பும் இல்லை, ஏனென்றால் நிறைய “சும்மா” பேச்சு தான் பேசுகிறோம்.
- “நாளைல இருந்து நான் ஒழுங்கா படிப்பேன்” என்று சும்மா சொல்கிறோம்.
- “இனிமே இந்த தப்பை நான் பண்ணவேமாட்டேன்” என்று தண்டனையில் இருந்து தப்பிக்க சும்மா சொல்கிறோம். நாம் அதே தவறை பல முறை செய்து, உண்மையில் மாறாமல் “Sorry” என்று கூறுகிறோம்.
- “நாளைக்கு போன் பண்றேன்” என்று பாட்டி தாத்தாவிடம் சும்மா சொல்கிறோம்.
இதுபோன்ற வார்த்தைகளை சொல்வது முதலில் பெரிய பிரச்சினையாகத் தெரியாது. அனால் அதுவே உங்களை ஒரு சிறந்த நபராக ஆவதைத் தடுக்கும். வாழ்க்கையில் வெற்றிபெறுகிறவர்கள், அவர்கள் சொன்னதை செய்கிறார்கள். எவ்வளவு கடினமாக இருந்தாலும் அவர்கள் வார்த்தையை கணப்படுத்துகிறார்கள். உலகின் தலைசிறந்த மனிதரிடமிருந்து ஒரு உதாரணத்தைப் பகிர்ந்து கொள்ளபோகிறேன். நீங்கள் தயாரா?
வேதாகம நிகழ்வு
வேத பகுதி: மாற்கு 4: 35-41
சம்பவ சுருக்கம்:
நீண்ட சோர்வான நாளுக்குப் பிறகு, இயேசு தம் சீஷர்களிடம், “என்னோடு வாருங்கள். இக்கடலைக் கடந்து அக்கரைக்குச் செல்வோம்” என்றார். அவரும் அவருடைய சீஷர்களும் படகுகளில் ஏரியின் ஒரு கரையில் இருந்து புறப்பட்டனர். இயேசு மிகவும் கடின வேலையின் நாளிற்கு பின் அசந்து படகில் தூங்கினார். துரதிர்ஷ்டவசமாக, ஒரு புயல் வந்தது. படகின் மீது அலைகள் உடைந்து கிட்டத்தட்ட மூழ்க செய்தது. சீஷர்கள் இயேசுவை அவசரமாக எழுப்பினார்கள். அவர்கள் அவரிடம், “போதகரே, உங்களுக்கு எங்களைப் பற்றிய அக்கறை இல்லையா? நாங்கள் மூழ்கும் நிலையில் உள்ளோம்” என்று கேட்டார்கள். எவ்வளவு கடினமாக இருந்தாலும் இயேசு தம்முடைய வார்த்தையைக் கடைப்பிடிப்பவர். சீஷர்கள் மறுபக்கம் அளித்து செல்வதாக சொல்லியிருந்தார். அவர் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் அல்லது தடிமன் உழைப்பிற்கு பின் தூங்க விரும்பினாலும் அல்லது புயல் எவ்வளவு எரிச்சலூட்டினாலும், இயேசு சொன்னதைச் செய்பவர். அவர் விழித்துக்கொண்டு அலைகளை நோக்கி, “இரையாதே, அமைதியாய் இரு” உடனே புயல் நின்றது. கடலும் அமைதியானது. இயேசுவும் சீஷர்களும் அவர் சொன்னபடியே மறுகரையை அடைந்தனர். இயேசு தம்முடைய வார்த்தையைக் கணம்பண்ணினார். அவர் இன்றைக்கும் மாறவில்லை. நீங்கள் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுகிறீர்களா, கணம்பண்ணுவீர்களா?
விளையாட்டு நேரம்
தேவையான பொருள்கள்: ”ஒரு பாடலைப் பாடுங்கள்”, “இரண்டு முறை குதிக்கவும்”, “சத்தமாக சிரிக்கவும்”, “பூனை சத்தமிடுவது போல் செய்யுங்கள்” போன்ற சில எளிய செயல்களை சிறிய காகிதத்தில் எழுதவும். அவற்றை மடித்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
செய்முறை:
ஒவ்வொரு சிறுவரையும் முன் வந்து ஒரு காகித துண்டை எடுக்கச் சொல்லுங்கள். அவர்கள் சத்தமாக எழுதப்பட்டதைப் படித்துவிட்டு, அது சொல்வதைச் செய்ய வேண்டும். அது சொல்வதைச் செய்யும் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு சிறிய பரிசு (உதா. ஒரு மிட்டாய்) வழங்கவும். அவர்கள் சொல்வதைச் செய்ய சிறுவர்களுக்கு நினைவூட்டுங்கள். ஞானமுள்ள சில சிறுவர்கள் சத்தமாக எழுதப்பட்டதை படிக்க மாட்டார்கள். கடைசியில் அதை சுட்டி காட்டி “செய்வதை மட்டுமே பேசுங்கள். செய்யாததை சொல்லாதீர்கள்” என்று சிறுவர்களுக்கு கற்று தாருங்கள். அப்படி செய்த சிறுவர்களும் சிறிய பரிசு வழங்குங்கள்.
கைவினை நேரம்
தேவையான பொருள்கள்: ஒவ்வொரு சிறுவருக்கும் ஒரு வண்ணத் தாள்/செய்தித்தாள் (A5 அளவு), குறிப்பான்கள், பசை.
ஆயத்தம்: காட்டப்பட்டுள்ளபடி வண்ண காகிதத்தில் காதுகள், மூக்கு, நாக்கு மற்றும் பற்களை வெட்டுங்கள். மாற்றாக, சிறுவர்களை நேரடியாக பொம்மையின் மீது வரையச் சொல்லலாம்.
செய்முறை
- A5 தாளை செங்குத்தாக மடித்து, பக்கங்களை ஓரத்தில் ஒன்றாக ஒட்டவும், ஒரு உருளைக் குழாயை உருவாக்கவும்.
- நீங்கள் உருவாக்கிய குழாயை சமன் செய்யுங்கள்.
- படத்தில் காட்டப்பட்டுள்ளபடி தட்டையான காகிதத்தை M ஆக மடியுங்கள். விரல்களை உள்ளே வைக்க முனைகளில் உள்ள துளைகள் பயன்படுத்தப்படும்.
- பொம்மையின் முக அம்சங்களை வரையவும்/ ஒட்டவும்.
- சிறுவர்களை பொம்மையைப் பயன்படுத்தி தங்கள் நண்பர்களிடம் ஏதாவது சொல்ல சொல்லுங்கள்.
- அன்றைய பாடத்தை அவர்களுக்கு மீண்டும் நினைவூட்டுங்கள் – உங்கள் வார்த்தைகளை கணப்படுத்துங்கள்.

டாட்டா
அர்ப்பணிப்பின் ஜெபத்தோடு பாடத்தை நிறைவு செய்யுங்கள்.

Leave a comment