பகுதி 2 – காணாமற்போன கனம்

Published by

on

ஐந்து பகுதிகளைக் கொண்ட காணாமற்போன கனம் என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், இரண்டாவது பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

பிறரைக் கனப்படுத்து

வேத பகுதி: மத்தேயு 20: 20-28

வேதாகம நிகழ்வு: இயேசு மற்றவர்களுக்கு சேவை செய்தார்

செய்தி: நீங்கள் கீழ்நிலையில் சேவை செய்ய தயாராக இருக்கும் போது நீங்கள் உச்சத்தை அடைவீர்கள் என்று இயேசு கூறுகிறார்.

அட்டவணை:
  1. பாடல் நேரம் (10 mins)
  2. மனப்பாட வசனம் ( 5 mins)
  3. பேசலாம் வாங்க (10 mins)
  4. வேதாகம நிகழ்வு (25 mins)
  5. Game/ Craft நேரம் (10 mins)

🔊Note: உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அட்டவணையை மாற்றிக்கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளையும்/ விவாதங்களையும் நடத்த உங்களுக்கு நேரம் இல்லாமல் போகலாம். கவலை படாதீர்கள். சிறுவர்களுக்கு ஏதோ ஒரு முறையில் செய்தி போய் சேர்வதே நமது குறிக்கோள், அணைத்து செயல்பாடுகளையும் செய்து முடிப்பது அல்ல.

பாடல் நேரம்

சிறுவர்களை பாடல் வேளையில் நடத்துங்கள்.

மனப்பாட வசனம்
பேசலாம் வாங்க

நோக்கம்:

இன்றைய பாடத்தின் சூழலை அமைக்க இந்தப் பகுதியைப் பயன்படுத்துவீர்கள்.

தேவையான பொருள்கள்: ஒரு சிறிய பெட்டியை அலங்கரித்து அதில் “இழந்து கண்டுபிடிக்கப்பட்டது (Lost and found)” என்று எழுதவும். ஒரு காகிதத்தில் உங்கள் கை தடையதை வரைந்து அதை வெட்டுங்கள். பெட்டியின் உள்ளே வெட்டிய காகிதத்தை வைக்கவும்.

செய்முறை:

இது உட்பட 5 வாரங்களில், கணத்தை இழந்த 5 முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிக்கப் போகிறீர்கள் என்று சிறுவர்களுக்குச் சொல்லுங்கள். இந்த முக்கியமான விஷயங்கள் சாதாரண மனிதர்களை அசாதாரணமாக உருவாக்குகின்றன. உங்கள் சிறுவர்கள் சிறந்த மனிதர்களாக மாறுவதற்கு இந்த சாத்தியங்களை கவனமாக கேட்க ஊக்கப்படுத்துங்கள்.

பெட்டியைக் காட்டி, பெட்டியில் முதல் இழந்த பொருள் என்ன என்று யூகிக்கச் சொல்லுங்கள். சிறுவர்கள் சில பதில்கள் சொன்னதற்கு பின், உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் காட்டி, பின்வரும் அறிமுகத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்:

நீங்கள் தேவாலயத்தில் ஒரு நாடகத்தில் பங்கேற்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், இன்னும் இரண்டு பாத்திரங்கள் உள்ளன – ராஜா மற்றும் வேலைக்காரன். நீங்கள் எதை தேர்வு செய்ய விரும்புகிறீர்கள்? அரசனா? அல்லது வேலைக்காரனா? இயேசு எதைத் தேர்ந்தெடுப்பார் என்பதை இன்று நாம் விவாதிக்கப் போகிறோம். நீங்கள் தயாரா? நீங்கள் தயாரா?

வேதாகம நிகழ்வு

வேத பகுதி: மத்தேயு 20: 20-28

சம்பவ சுருக்கம்:
யாக்கோபு மற்றும் யோவானுக்கு (இயேசுவின் சீஷர்கள்) ஒரு நல்ல தாய் இருந்தார். தன மகன்கள் கனத்திற்குரிய மனிதர்களாக வாழ வேண்டும் என்று விரும்பினர். அம்மா அவர்கள் இயேசுவிடம் சென்று அவருடைய ராஜ்யத்தில் முதல் இரண்டு பதவிகளுக்கு தன மகன்களுக்கு பரிந்துரைத்தாள். அந்த முடிவு அவருடையது அல்ல என்று இயேசு அவர்களிடம் கூறினார். எஞ்சியிருந்த சீஷர்கள் இதைக் கேட்டு மிகவும் கோபமடைந்தனர். அவர்கள் இரு சகோதரர்களுடன் சண்டையிட்டனர். மற்றவர்களை விட அதிகமாக மதிக்கப்பட வேண்டும் என்று விரும்பினர் என்று அவர்களுக்கு கோபம். இயேசு இதைக் கேட்டு அவர்களுக்கு ஒரு முக்கியமான பாடம் கற்பித்தார். எல்லா சீஷர்களையும் ஒன்றாக அழைத்து, அவர்களிடம் இதை கூறினார், “உங்களில் ஒருவன் பெரியவனாக ஆக விரும்பினால், அவன் உங்களுக்கு ஒரு வேலைக்காரனைப் போல ஊழியம் செய்ய வேண்டும். உங்களில் ஒருவன் முதலாவதாக வர விரும்பினால், அவன் உங்களுக்கு ஓர் அடிமையைப் போல் ஊழியம் செய்ய வேண்டும்”.

உங்களைச் சுற்றியுள்ள பெரும்பாலான மக்கள் செய்வதற்கு இது எதிராக உள்ளது, இல்லைய்யா? பொதுவாக தங்களை பெரியதாகக் காட்ட ஒரு பலவீனமான நபரை கொடுமைப்படுத்துகிறார்கள்; தங்களைப் பற்றி நன்றாக உணர மற்றவரைப் பற்றி கிசுகிசுக்கிறார்கள். மற்றவரை விட பேர் பதவி உயரம் கணம் அடைவதற்கு சிலர் செய்யும் தவறான விஷயங்களை பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் பார்த்ததை கூறமுடியுமா? (சிறுவர்கள் பதிலளிக்கட்டும்) நீங்கள் கூறின சூழ்நிலைகளில் இயேசு கற்பித்தபடி எப்படி வாழவேண்டும் என்று சொல்ல முடியுமா? (சிறுவர்கள் பதிலளிக்கட்டும்).

இயேசு கற்பித்தது போல வாழ்வது கடினமாக தெரிகிறது, இல்லையா? ஆனால் ஒன்று தெரியுமா? இயேசு சொன்னது போல வாழ நம்மக்கு ஒரு முன்மாதிரி இருக்குறார். அவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம்! இயேசுவே. 2000 வருஷங்கள் முன்பு இயேசு பூமிக்கு வந்தபோது, மற்றவர்கள் தமக்குச் சேவை செய்ய வேண்டும் என்று விரும்பி ஒரு அரண்மனையில் ராஜாவாக வரவில்லை. மாறாக, தம்மை நேசிப்பவர்களுக்கும் வெறுக்கும் மக்களுக்கும் நன்மை செய்யும் வேலைக்காரனைப் போல சுற்றித்திரிந்தார். அப்படி நாமும் வாழ்வோம் என்றால் தேவன் நம்மை நிச்சையம்மாக ஒரு நாள் எல்லா மனிதர்களுக்கு முன்பாக நம்மை உயர்த்துவார், காணப்படுத்துவர்.

விளையாட்டு நேரம்

தேவையான பொருள்கள்: சிறிய துண்டு; ஒரு காகித கிரீடம் செய்யுங்கள்;

செய்முறை:

சிறுவர்களை  ஒரு வட்டத்தில் உட்கார வைக்கவும். ஒரு பிடிப்பவரைத் (catcher) தேர்ந்தெடுத்து, அவர்களை வட்டத்திற்கு வெளியே போக சொல்லுங்கள். பிடிப்பவரிடம் காகித கிரீடத்தை கையில் வைத்திருக்கச் சொல்லுங்கள். பின்பு ராஜாவாக வட்டத்தில் உள்ள ஒரு சிறுவரைத் தேர்ந்தெடுக்கவும். அவருக்கு/அவளுக்கு துண்டை கொடுங்கள். அவர்கள் துண்டின் மேல் உட்கார்ந்து அதை மறைக்க வேண்டும். பிடிப்பவர் பின்னர் ராஜாவை யூகிக்க முயற்சிப்பார். அவர் ராஜாவை அடையாளம் கண்டுகொண்டதும், அந்தக் பிள்ளையின் மேல் கிரீடத்தை வைக்கச் சொல்லுங்கள். பிடிப்பவர் சரியாக யூகித்திருந்தால் வெகுமதி அளிக்கவும். நேரம் அனுமதிக்கும் அளவும் விளையாட்டை தொடரவும்.

ஆட்டத்தின் முடிவில், சிறுவர்களிடம் கலந்துரையாடுங்கள்.

  • நாம் ஏன் கிரீடத்தை, துண்டை வைத்திருந்தவரிடம் கொடுத்தோம்? ஏன் அவரை பொய் ராஜா என்று அழித்தோம்?
  • பதில்: ராஜாவாக இருக்க விரும்புகிறவர் முதலில் பிறருக்கு வேலைக்காரனாக இருக்க வேண்டும், மற்றவர்களை தனக்கு மேலாக மதிக்க வேண்டும் என்று இயேசு நமக்குக் கற்பித்ததால் நாம் அவ்வாறு செய்தோம்.

கைவினை நேரம்

தேவையான பொருள்கள்: ஒவ்வொரு சிறுவருக்கும் ஒரு வண்ணத் தாள்/செய்தித்தாள் (A5 அளவு), குறிப்பான்கள், கத்தரிக்கோல்

செய்முறை

  • A5 தாளை ஜிக்-ஜாக் முறையில் மடியுங்கள்.
  • இணைக்கப்பட்ட ஒரு காகித பொம்மையை வெட்டுங்கள்.
  • அவர்கள் சேவை செய்யக்கூடிய சகாக்கள் மற்றும் இளையவர்களின் பெயர்களை எழுதச் சொல்லுங்கள்.
  • அன்றைய பாடத்தை அவர்களுக்கு மீண்டும் நினைவூட்டுங்கள் – மற்றவர்களுக்கு சேவை செய்யுங்கள், சரியான நேரத்தில் தேவன் உங்களை உயர்த்துவார்.

டாட்டா

“லாஸ்ட் அண்ட் ஃபைன்ட்” பெட்டியிலிருந்து காகிதக் கையை மீண்டும் காட்டி, அதன் அர்த்தம் என்னவென்று சிறுவர்களிடம் கேளுங்கள் (மற்றவர்களுக்கு சேவை செய்யுங்கள், நீங்கள் மேலே வருவீர்கள்). அர்ப்பணிப்பின் ஜெபத்தோடு பாடத்தை நிறைவு செய்யுங்கள்.

Leave a comment