பகுதி 3 – காணாமற்போன கனம்

Published by

on

ஐந்து பகுதிகளைக் கொண்ட காணாமற்போன கனம் என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், மூன்றாவது பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

தேவனைக் கனப்படுத்து

வேத பகுதி: யோவான் 9:1-38

வேதாகம நிகழ்வு: பார்வையற்றவன் தேவனை கனப்படுத்தினார்

செய்தி: தேவனை கனம் பண்ணினால், அவர் உங்களைக் கனம்பண்ணுவார். அவர் உங்களுக்கு எப்படி உதவி செய்தார் என்பதை உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களிடம் வெளிப்படையாக அறிவிப்பதன் மூலம் நீங்கள் தேவனை கனம் பானுகிறீர்கள்.

அட்டவணை:
  1. பாடல் நேரம் (10 mins)
  2. மனப்பாட வசனம் ( 5 mins)
  3. பேசலாம் வாங்க (10 mins)
  4. வேதாகம நிகழ்வு (25 mins)
  5. Game/ பேசும் நேரம் (10 mins)

🔊Note: உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அட்டவணையை மாற்றிக்கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளையும்/ விவாதங்களையும் நடத்த உங்களுக்கு நேரம் இல்லாமல் போகலாம். கவலை படாதீர்கள். சிறுவர்களுக்கு ஏதோ ஒரு முறையில் செய்தி போய் சேர்வதே நமது குறிக்கோள், அணைத்து செயல்பாடுகளையும் செய்து முடிப்பது அல்ல.

பாடல் நேரம்

சிறுவர்களை பாடல் வேளையில் நடத்துங்கள்.

மனப்பாட வசனம்
பேசலாம் வாங்க

நோக்கம்:

இன்றைய பாடத்தின் சூழலை அமைக்க இந்தப் பகுதியைப் பயன்படுத்துவீர்கள்.

தேவையான பொருள்கள்: ஒரு சிறிய பெட்டியை அலங்கரித்து அதில் “இழந்து கண்டுபிடிக்கப்பட்டது (Lost and found)” என்று எழுதவும். மற்றொரு காகிதத்தில் “தேவன்” என்று எழுதி பெட்டியின் உள்ளே வைக்கவும்.

செய்முறை:

இது உட்பட 5 வாரங்களில், கணத்தை இழந்த 5 முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிக்கப் போகிறீர்கள் என்று சிறுவர்களுக்குச் சொல்லுங்கள். இந்த முக்கியமான விஷயங்கள் சாதாரண மனிதர்களை அசாதாரணமாக உருவாக்குகின்றன. உங்கள் சிறுவர்கள் சிறந்த மனிதர்களாக மாறுவதற்கு இந்த சாத்தியங்களை கவனமாக கேட்க ஊக்கப்படுத்துங்கள்.

பெட்டியைக் காட்டி, பெட்டியில் முதல் இழந்த பொருள் என்ன என்று யூகிக்கச் சொல்லுங்கள். சிறுவர்கள் சில பதில்கள் சொன்னதற்கு பின், உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் காட்டி, பின்வரும் அறிமுகத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்:

நீங்கள் கணிதத்தில் 100/100 பெற்றுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் டாப் ஸ்கோரைப் பார்த்த பிறகு நீங்கள் என்ன செய்வீர்கள்?
நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். நண்பர்களிடம் சொல்லுவீர்கள். உங்கள் கணித ஆசிரியருக்கு நன்றி கூறுவீர்கள். நீங்கள் வீட்டிற்கு வந்தவுடன் உங்கள் தேர்வுத் தாளை உங்கள் பெற்றோரிடம் காண்பிப்பீர்கள்.


நீங்கள் இன்னும் ஏதாவது செய்யாமல் இருக்கிறீர்களா? “லாஸ்ட் அண்ட் ஃபைன்ட்” பெட்டியைப் பார்த்து அதைக் கண்டுபிடிப்போம். “தேவன்” ஒரு கணம் நிறுத்தி, 100/100 பெற தேவன் என்ன செய்தார் என்று சிந்திப்போம்.

  • நீங்கள் உதவி கேட்டபோது அவர்
    உங்களுக்கு பதிலளித்தார்.
  • தேர்வுக்கு வரும் பாடங்களைப் புரிந்துகொள்ள உதவினார்.
  • நீங்கள் படிக்க உதவும் நல்ல ஆசிரியர்களைக் கொடுத்தார்.
  • 100/100 எடுக்க உதவிய ஒரு பள்ளியில் உங்களை சேர்க்க உங்கள் பெற்றோரிடம் பணம் கொடுத்தார்.
  • பரீட்சை நாளில் உங்களை நோய்வாய்ப்படாமல் பாதுகாத்தார்.

பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நல்ல விஷயம் கிடைத்தபோது அவன் என்ன செய்தேன் என்பதே இன்றைய கதை.

வேதாகம நிகழ்வு

வேத பகுதி: யோவான் 9:1-38

சம்பவ சுருக்கம்:
பிறப்பிலிருந்தே பார்வையற்ற ஒரு மனிதனை இயேசு கண்டார். 40 வருடங்களாக அவரால் பார்க்க முடியவில்லை. அதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இயேசு அவரிடம் போய், சேற்றில் ஒரு பேஸ்ட்டை உருவாக்கி அந்த மனிதனின் கண்களில் வைத்தார். பின்னர் அவர் சிலோயாம் குளத்திற்கு நடந்து சென்று அதைக் கழுவச் சொன்னார். அந்த மனிதர் கீழ்ப்படிந்தார். இயேசு சொன்னது போலவே அவர் பூரண குணமடைந்தார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பார்க்க முடிந்த மகிழ்ச்சியை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

அவரை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். “நீ குருடன் இல்லையா? உனக்கு எப்படித் கண் பார்வை வந்தது?” என்று கேட்டனர். இது தான் சுவாரசியமான பகுதி – அந்த மனிதன் “சரி, நான் சிலோம் குளத்திற்கு வெகுதூரம் நடந்து சென்று அங்கு கழுவினதாலே நான் குணமடைந்தேன்” அல்லது “ஓ அது ஒயூனும் இல்லை. தற்சயலாக நடந்தது” அல்லது “ஒரு மந்திரம் நடந்தது” என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் கூறியது இதோ – “இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வையடைந்தேன்” (யோவான் 9:11)

அவர் தேவனை எப்படி கனம் பேணினார் என்று பார்த்தீர்களா? அவர் தனது இதயத்தில் மட்டும் இயேசுவுக்கு நன்றி சொல்லவில்லை, ஆனால் அவர் தனது நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடம் இயேசு தன்னைக் குணப்படுத்தினார் என்றும் அது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல, ஒரு அதிசயம் என்றும் கூறினார். துரதிர்ஷ்டவசமாக, அது அவருக்கு உதவவில்லை. இயேசுவை விரும்பாத பலசாலிகள் இருந்தனர். இயேசு அவரைக் குணமாக்கியதை மறுக்குமாறு அவரையும் அவருடைய பெற்றோரையும் சொன்னார்கள். அந்த மனிதனின் பெற்றோர் அவர்களுக்குப் பயந்தார்கள், அதனால் அவர்கள் தேவனுக்கு கனம் கொடுக்கவில்லை. ஆனால் இந்த மனிதர் மிகவும் தைரியமாக இருந்தார், அவர் “நான் குருடனாக இருந்தேன், ஆனால் இப்போது நான் இயேசுவால் பார்க்கிறேன்” என்று கூறினார். எதிர்பார்த்தது போலவே அவர் சமுதாயத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இயேசு அதைக் கேள்விப்பட்டு, சென்று அவரைக் கண்டார். மற்ற யாருக்கும் கிடைக்காத ஒரு ஆசீர்வாதத்தை இயேசு அவருக்குக் கொடுத்தார் – பரலோகத்தில் தனக்கு ஒரு இடத்தைக் கொடுக்கக்கூடிய மெசியாவாக அவர் தன்னை வெளிப்படுத்தினார். அந்த மனிதர் மிகவும் மகிழ்ச்சியடைந்து இயேசுவை வணங்கினார் .

உங்கள் இதயத்தில் நன்றியுடன் இருப்பதன் மூலம் மாத்திரம் அல்ல இயேசு உங்களுக்கு உதவுகிறார் என்று உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களிடம் வெளிப்படையாக அறிவிப்பது மூலம் நீங்கள் தேவனை கனப்படுத்துகிறீர்கள். உங்கள் நண்பர்கள் சிலர் உங்களைப் பார்த்து சிரிக்கலாம். ஆனால் இயேசு சொன்னதை நினைவில் வையுங்கள்.
“மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன். [மத்தேயு 10:32,33]”

விளையாட்டு நேரம்

செய்முறை:

  • சிறுவர்களை ஒரு வட்டத்தில் நிற்க வைக்கவும்.
  • நீங்கள் மையத்தில் நின்று சிறுவர்களை நோக்கி உங்கள் கைகளை சுட்டிக்காட்டுங்கள். எந்த பிள்ளையை காட்டுகிறீர்களோ அவர் “சீ” என்று சொல்ல வேண்டும்.
  • உங்கள் கைகளை மற்றொரு பிள்ளை நோக்கி சுட்டிக்காட்டவும், அவர் “சா” என்று சொல்ல வேண்டும்.
  • வெவேறு சிறுவர்களை இவரு தேர்ந்தெடுத்து விளையாட்டை தொடரவும். முந்தைய சிறுவர் “சீ ” என்று சொன்னால் “சா” என்று அடுத்தவர் அவர்கள் சரியாகச் சொல்ல வேண்டும். அடுத்த சிறுவர் மறுபடியும் “சீ” என்று ஆரம்பிப்பார். இப்படி “சீ”, “சா” என்று மாறி மாறி சொல்லவேண்டும்.
  • தவறாக சொல்லும் சிறுவர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில அமர வேண்டும்.
  • ஆட்டம் முடியும் வரை நிற்பவர்கள் வெற்றியாளர்கள்.

செய்தி: நீங்கள் சீ-சாவில் விளையாடிஇருக்கிறீர்களா? (சிறுவர்கள் பதில் சொல்லட்டும்) நீங்கள் ஒருவரைத் தூக்கும்போது மற்றவர் உங்களைத் தூக்குகிறார் அல்லவா? அதுபோலவே நீங்கள் தேவனை கனப்படுத்தும்போது அவர் உங்களைக் கனம்பண்ணுவார். உலகின் மிகப் பெரியவரால் புகளபடுவதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? தேவனால் கனம்பணப்படுவது எவ்வளவு அருமையருக்கும்!

பேசும் நேரம்

தேவையான பொருள்கள்: சார்ட் பேப்பர், குறிப்பான்கள்

செய்முறை
வகுப்பின் முன் ஒரு பெரிய சார்ட் பேப்பரை வைக்கவும். சிறுவர்களை முன் வந்து தேவன் அவர்களுக்காக செய்ததை எழுத/வரையச் சொல்லுங்கள். மக்களுக்கு முன்பாக தேவனை கனம் செய்வது முக்கியம் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுங்கள். கிறிஸ்தவர் அல்லாத நண்பர்களுக்கு முன்பாகவும் அதைச் செய்ய அவர்களை ஊக்குவியுங்கள்.

டாட்டா

“லாஸ்ட் அண்ட் ஃபைன்ட்” பெட்டியிலிருந்து காகிதக் கையை மீண்டும் காட்டி, அதன் அர்த்தம் என்னவென்று சிறுவர்களிடம் கேளுங்கள் (தேவனை கனம் பண்ணினால், அவர் உங்களைக் கனம்பண்ணுவார்). அர்ப்பணிப்பின் ஜெபத்தோடு பாடத்தை நிறைவு செய்யுங்கள்.

Leave a comment