ஐந்து பகுதிகளைக் கொண்ட காணாமற்போன கனம் என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தின், நான்காவது பகுதியை இங்கு காணலாம். முழு தொடரையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
பெற்றோரைக் கனப்படுத்து கனப்படுத்து
வேத பகுதி: லூக்கா 2:41-52
வேதாகம நிகழ்வு: இயேசு தன்னுடைய பூமிக்குரிய பெற்றோருக்குக் கீழ்ப்படிந்தார்
செய்தி: எவ்வளவு கடினமாக இருந்தாலும் நீங்கள் சொல்வதை செய்யுங்கள். வாழ்க்கையில் வெற்றிபெறுபவர்கள் தங்கள் சொந்த வார்த்தையை கணம் செய்கிறார்கள்.
அட்டவணை:
- பாடல் நேரம் (10 mins)
- மனப்பாட வசனம் ( 5 mins)
- பேசலாம் வாங்க (10 mins)
- வேதாகம நிகழ்வு (25 mins)
- Craft + Game நேரம் (10 mins)
🔊Note: உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அட்டவணையை மாற்றிக்கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளையும்/ விவாதங்களையும் நடத்த உங்களுக்கு நேரம் இல்லாமல் போகலாம். கவலை படாதீர்கள். சிறுவர்களுக்கு ஏதோ ஒரு முறையில் செய்தி போய் சேர்வதே நமது குறிக்கோள், அணைத்து செயல்பாடுகளையும் செய்து முடிப்பது அல்ல.
பாடல் நேரம்
சிறுவர்களை பாடல் வேளையில் நடத்துங்கள்.
மனப்பாட வசனம்
கை அசைவுகள் அல்லது ஏதேனும் ஒரு செய்முறையைப் (Actions) பயன்படுத்தி பின்வரும் மனப்பாட வசனத்தை சிறுவர்களுக்குக் கற்பிக்கவும்.
உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. [யாத்திராகமம் 20:12b]
பேசலாம் வாங்க
நோக்கம்:
இன்றைய பாடத்தின் சூழலை அமைக்க இந்தப் பகுதியைப் பயன்படுத்துவீர்கள்.
தேவையான பொருள்கள்: ஒரு சிறிய பெட்டியை அலங்கரித்து அதில் “இழந்து கண்டுபிடிக்கப்பட்டது (Lost and found)” என்று எழுதவும். நீளமான காகிதத்தை வெட்டி, அவற்றை ஒன்றாக இணைத்து இன்னும் நீளமான காகிதத்தை உருவாக்கவும். அதை உருட்டி பெட்டியில் வைக்கவும்.
செய்முறை:
இது உட்பட வரவிருக்கும் 5 வாரங்களில், கணத்தை இழந்த 5 முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிக்கப் போகிறீர்கள் என்று சிறுவர்களுக்குச் சொல்லுங்கள். இந்த முக்கியமான விஷயங்கள் சாதாரண மனிதர்களை அசாதாரணமாக உருவாக்குகின்றன. உங்கள் சிறுவர்கள் சிறந்த மனிதர்களாக மாறுவதற்கு இந்த சாத்தியங்களை கவனமாக கேட்க ஊக்கப்படுத்துங்கள்.
பெட்டியைக் காட்டி, பெட்டியில் முதல் இழந்த பொருள் என்ன என்று யூகிக்கச் சொல்லுங்கள். சிறுவர்கள் சில பதில்கள் சொன்னதற்கு பின், உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் காட்டி, பின்வரும் அறிமுகத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்:
“லாஸ்ட் அண்ட் ஃபோன்ட்” பெட்டியை ஒரு சிறுவரிடம் காட்டி, அதில் உள்ளதை வெளியே எடுக்கச் சொல்லுங்கள்.
நீண்ட காகிதத்தை விரிக்கச் சொல்லுங்கள். அதன்பின் இன்றைய மனப்பாட வசனத்தைப் வாசியுங்கள்.
உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிவதே நீண்ட ஆயுளுக்கான ஒரு அளவுகோல் என்று வேதம் கூறுகிறது. ஆனால் நம் பெற்றோருக்குக் கீழ்ப்படிவது மிகவும் கடினம் அல்லவா? அதைப் பற்றித்தான் இன்று பேசப் போகிறோம்.
வேதாகம நிகழ்வு
வேத பகுதி: லூக்கா 2:41-52
சம்பவ சுருக்கம்:
ஒவ்வொரு வருடமும் இயேசுவின் பெற்றோர் அவரை பஸ்கா பண்டிகைக்காக எருசலேம் ஆலையத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அவர்கள் பெரிய குழுக்களாக ஒன்றாக பயணம் செய்வார்கள். நீங்கள் உங்கள் உறவினர்களுடன் குடும்பமாக சுற்றுலா சென்றிருக்கிறீர்களா? அது மிகவும் ஜாலியாக இருந்ததா? (சிறுவர்கள் பதிலளிக்கட்டும்)
அப்படிப்பட்ட ஒரு பயணத்தில் என்ன நடந்தது என்பதை இன்று பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இயேசுவுக்கு 12 வயது. இயேசுவின் குடும்பத்தினர் வழக்கம் போல் எருசலேம் சென்றனர். அவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தேவனை ஆராதித்தனர். ஆராதனை முடிந்ததும், இயேசுவின் பூமிக்குரிய பெற்றோர்களான மரியாள் மற்றும் யோசேப்பு தங்கள் குடும்பத்தோடு, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தங்கள் வீட்டிற்கு பயணத்தைத் தொடங்கினர்.
இதற்கிடையில், இயேசு சில வேத போதகர்களைக் கண்டுபிடித்தார். அவர்கள் சொல்வதைக் கேட்டார். அவர்களுடன் உரையாடி அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். இயேசு இவ்வளவு ஞானத்துடன் பேசிய விதம் கண்டு அவர்கள் அனைவரும் வியந்தனர். இயேசு எப்படி இப்படிப் பேச முடிந்தது என்று நினைக்கிறீர்கள்? (பதில்: தேவன் மனிதன் ஆனார். அவர் பெயர் இயேசு )
கிட்டத்தட்ட ஒரு நாள் முடிந்தது. இயேசுவின் பெற்றோர் அவரிடம் ஏதோ ஒன்றைக் கேட்க , “இயேசு! இங்கே வா!” என்று அழைத்தனர். இயேசுவின் சத்தம் தங்கள் குழுவில் இல்லை. தங்கள் மற்ற நண்பர்களுடன் இருக்க வேண்டும் என்று நினைத்த அவர்கள், அருகில் நடந்து கொண்டிருந்த மற்ற குழுவில் இயேசுவை தேட விரைந்தனர். இயேசுவும் அங்கும் இல்லை. அவர்களின் பீதியை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு விரைந்தனர். பண்டிகை காரணமாக ஜெருசலேம் மக்களால் நிரம்பி வழிந்தது. அவர்கள் எல்லா இடங்களிலும் இயேசுவைத் தேடினார்கள் ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கிருந்தார் தெரியுமா? (சிறுவர்கள் பதிலளிக்கட்டும்)
ஆம்! அவர் ஆசிரியர்களுடன் தேவனுடைய வார்த்தையைப் பற்றிப் பேசி கொண்டிருந்தார். மூன்றாம் நாள் தேடுதல் வேட்டையில், ஒரு சிறு பையனின் பேச்சைக் கேட்டு ஒரு பெரிய கூட்டம் இருப்பதைக் மரியாளும் யோசேப்பும் கண்டார்கள். யார் என்று பார்க்க அருகில் சென்றனர். யார் என்று நினைக்கிறீர்கள்? ஆம்! இயேசு. அவனுடைய தாய் அவரிடம், “என்ன செய்தாய்! உன்னை எல்லா இடங்களிலும் தேடிக்கொண்டிருக்கிறோம்” என்று கேட்டார். தான் ஆலயத்தில் இருக்க வேண்டும் என்று இயேசு அவர்களிடம் கூறினார். ஆனால் அவரது பெற்றோர் அவரை அழைத்ததால், அவர் கீழ்ப்படிந்தார். அவர் வீடு திரும்பினார், மேலும் 18 ஆண்டுகள் கடவுளின் பணியை முழுமையாகச் செய்ய வேண்டிய நேரம் வரும் வரை அவர்களுக்குத் தன்னைச் சமர்ப்பித்தார்.
இயேசுவிற்கு கீழ்ப்படிவது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இயேசு மக்களிடம் பேசவும் அவர்களுக்கு உதவவும் விரும்பினார். அவர் விரும்பியதைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, அவர் தனது பெற்றோரின் கட்டளைகளைத் தேர்ந்தெடுத்தார். இப்படி, நீங்கள் செய்யக்கூடிய எந்தவொரு சாதனையையும் அல்லது வேறு எதையும் விட கீழ்ப்படிதல் சிறந்தது என்பதற்கு அவர் ஒரு உதாரணத்தைக் காட்டினார்.
கைவினை நேரம்
தேவையான பொருள்கள்: ஒரு செவ்வக அட்டை, இரண்டு காகித இதய கட்-அவுட்கள்.
செய்முறை:
- காட்டப்பட்டுள்ளபடி இதய அட்டையை உருவாக்கவும். 2 பக்கங்களை உருவாக்க இதயங்களை பாதியிலேயே ஒட்டவும். இந்த இதயப் பக்கங்களை செவ்வக சார்ட்டில் ஒட்டவும்.
- பெற்றோரின் எந்தக் கோரிக்கைக்குக் கீழ்ப்படிவது மிகவும் கடினமானது என்பதைப் பகிர்ந்துகொள்ளும்படி சிறுவர்களிடம் கேளுங்கள்.
- முதல் பக்கத்தில் அவர்கள் பதிலை எழுதச் சொல்லுங்கள்.
- இரண்டாவது பக்கத்தில், “கீழ்ப்படிதல் சிறந்தது” என்று எழுதச் சொல்லுங்கள்.

விளையாட்டு நேரம்
தேவையான பொருள்கள்: மேலே ஹார்ட் கிராஃப்ட் செய்யப்பட்டது
செய்முறை
- சிறுவர்களை ஒரு பெரிய வட்டத்தில் நிற்கச் செய்யுங்கள்.
- கைவினைப் பிரிவில் அவர்கள் செய்த அட்டைகளை கையில் வைத்திருக்கச் சொல்லுங்கள்.
- மையத்தில் நில்லுங்கள். உங்களால் முடிந்தால் “இயேசு” என்ற குறிச்சொல்லைப் போடுங்கள்.
- சிறுவர்களில் ஏதேனும் ஒருவருடன் தொடங்குங்கள். அவர்கள் அட்டையில் எழுதிய ஒன்றைக் கூப்பிட்டு, அதை அழைக்கும் போது, ”இயேசு உங்களுக்குச் சொல்கிறார்…” என்று சொல்லி சொல்லுங்கள். உதாரணமாக, “நீண்ட நேரம் மொபைலில் விளையாட வேண்டாம் என்று இயேசு கூறுகிறார்”.
- இப்போது அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய முடிவு செய்யும் ஒவ்வொரு சிறுவரும் வட்டத்தின் உள்ளே (உங்களை நோக்கி) ஒரு படி மேலே வர வேண்டும்.
- வெவ்வேறு செயல்களை அழைப்பதன் மூலம் விளையாட்டை மீண்டும் செய்யவும். முதலில் மையத்தை அடையும் சிறுவர்கள் வெற்றி பெறுவார்கள்.
- முடிந்தால் அவர்களுக்கு ஒரு சிறிய மிட்டாய் பரிசளிக்கவும்.
செய்தி: உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிவது கடினமாக இருக்கும்போதெல்லாம், அதைச் செய்யும்படி இயேசு உங்களைக் கேட்பதை நினைத்துப் பாருங்கள். நீங்கள் இயேசுவுக்குக் கீழ்ப்படிய மாட்டீர்களா? கடினமாக இருந்தாலும் கீழ்ப்படிய உதவும்படி இயேசுவிடம் ஜெபிப்போமா? (ஒரு பிரார்த்தனை நேரத்தில் சிறுவர்களை நடத்துங்கள்)
டாட்டா
அர்ப்பணிப்பின் ஜெபத்தோடு பாடத்தை நிறைவு செய்யுங்கள்.

Leave a comment