🔥ரீகேப் & ரெஸ்பாண்ட்

Published by

on

வாசிக்க தேவைப்படும் நேரம்:

1–2 minutes

வணக்கம்! 👋
சிறுவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அவர்களுக்கு இயேசுவை அறிமுகப்படுத்தும் J4K-52 பணியில் நீங்கள் இணைந்ததற்கு மிக்க நன்றி.

இந்தப் பாடம் Unit 1 (NEW Account) இன் Recap & Respond, Spark Kids 🔥 (8 வயதுக்குக் கீழ்) க்காக தயாரிக்கப்பட்டது.
முழுமையான பாடத் திட்டத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

வாங்க, ஆரம்பிக்கலாம்! 🚀

ஆதியாகமம் 2:1–3 வாசித்து, 7-ஆம் நாளில் தேவன் என்ன செய்தார் என்பதை பகிரவும். தேவன் தமது பணியை நிறுத்தி அந்த நாளை சிறப்பாகச் செய்தார். அதனால் நாமும் ஞாயிற்றுக்கிழமையை இதேபோல் ஒதுக்கி வைத்திருக்கிறோம். நமது வழக்கமான பணிகளை (பள்ளிக்கு போகுதல், படித்தல் போன்றவை) நிறுத்தி தேவனுடன் சபையில் நேரத்தை செலவிடுகிறோம்.

இன்று, நமது பாடங்களை தற்காலிகமாக நிறுத்தி இதுவரை கற்றுக்கொண்டதை நினைவுகூர்வோம்.

நான்கு அத்தியாயங்களின் சுருக்கம் –
சிறுவர்களுடன் தொடர்புடைய முறையில் (Interactive method) முக்கிய கருத்துகளை மீள்பார்வை செய்யுங்கள். இவ்வயது சிறுவர்கள் கதைகளை மீண்டும் மீண்டும் சொல்ல விரும்புகிறார்கள் — அவர்களைக் கேட்டறிந்து நான்கு அத்தியாயங்களில் தொடக்கம் முதல் முடிவு வரை நடந்த சம்பவங்களை சொல்லச் சொல்லுங்கள்.

அத்தியாயம் 1 – இருள்

சம்பவம் : பூமி இருண்டதும் அமைதியானதும் இருந்தது, ஆனால் தேவன் பயப்படவில்லை. அவர் இருண்டத்தில் நடந்து, வெறுமையான அமைதியான உலகத்தை உயிருடன் நிரப்பினார்.

✅இயேசு பயப்படுவதில்லை
✅இயேசுவிடம் உங்கள் பயன்களை சொல்லுங்கள்; பயன்களை வெல்லுங்கள்
✅ கவிதையை நினைவுகூருங்கள்

அத்தியாயம் 2 – உலகம்

சம்பவம் : தேவன் வார்த்தையால் 6 நாட்களில் உலகத்தை படைத்தார்.

✅ தேவன் வார்த்தையால் உலகத்தை படைத்தார்
✅ தேவன் தனது வார்த்தைகளை வேதாகமத்தில் எழுதியுள்ளார்
✅ வேதாகமத்தை அனுபவிக்கவும்

அத்தியாயம் 3 – வாழ்க்கை

சம்பவம் : தேவன் ஆதாமை படைத்தார்

✅ தேவன் உங்களை படைத்தார்
✅ நீங்கள் அவருக்கு மிகவும் சிறப்பானவர்

அத்தியாயம் 4 – அன்பு

சம்பவம் : தேவன் ஆதாமுக்காக ஏவாளை படைத்தார்

✅ அவர் மற்ற மனிதர்களையும் உங்களுக்காக படைத்தார் – பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள்
✅ மற்ற மனிதர்கள் இருந்தாலும் தேவன் மிகவும்

சிறுவர்களுடன் சேர்ந்து, அவர்கள் இதுவரை கற்றுக்கொண்ட அனைத்துக்காக ஜெபம் செய்யலாம்.

இது வரை கற்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்க சிறுவர்களை ஊக்கப்படுத்துங்கள். அவர்கள் அதை ஒரு காகிதத்தில் வரைந்து/எழுதலாம் (சிறிய பிள்ளைகளுக்கும் கேள்விகள் இருப்பதை பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்).

சிறுவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, உங்களால் முடிந்தவரை பதிலளிக்கவும். எந்தக் கேள்விக்கும் பதில் தெரியவில்லை என்றால், “எனக்கு இப்போது தெரியவில்லை” என்று சொல்லுவது சரியே. அந்தப் பதிலை கண்டுபிடித்து அடுத்த வாரம் வந்து சொல்லுவதாக அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் — அதை மறக்காமல் செய்து முடிக்கவும். இது பணிவு, ஆர்வம் மற்றும் முதிர்ச்சியை முன்மாதிரியாகக் காட்டுகிறது.


சிறுவர்களுடன் சேர்ந்து, இந்த அலகிற்கான வேதாகம நினைவுப் பகுதியை கற்றுக்கொள்ள சிறிது நேரம் செலவிடுங்கள்.

சங்கீதம் 33: 1-9

உங்களுக்கும் உங்கள் சிறுவர்களுக்கும் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருந்ததா? அப்படியானால், கமெண்ட் பாக்ஸில் உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
தன்றி! 💖

Leave a comment