வாசிக்க தேவைப்படும் நேரம்:

3–5 minutes

வணக்கம்! 👋
சிறுவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அவர்களுக்கு இயேசுவை அறிமுகப்படுத்தும் J4K-52 பணியில் நீங்கள் இணைந்ததற்கு மிக்க நன்றி.

இந்தப் பாடம் Unit 1 (NEW Account) இன் Chapter 1, Flame Kids 🔥 (8 வயது மற்றும் அதற்கு மேல்) க்காக தயாரிக்கப்பட்டது.
முழுமையான பாடத் திட்டத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

வாங்க, ஆரம்பிக்கலாம்! 🚀


ஒவ்வொரு அமர்வு பகுதியின் விவரங்களைப் பார்க்க கீழ்க்காணும் இணைப்புகளைப் பயன்படுத்தவும்.

15 நிமிடங்கள்: [🔥🔥]

செயல்பாடு:
கடந்த அமர்வில் கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடத்தை மீண்டும் நினைவூட்டி தொடங்குங்கள்:
“மனிதர்கள் குரங்குகளில் இருந்து வந்தனரா?”
சிறுவர்கள் அவர்கள் கண்டறிந்ததைப் பகிர்ந்து கொள்ள சொல்லுங்கள்.

பின்னர், பரிணாமவாதிகள் அடிக்கடி குறிப்பிடும் ஆதாரங்களில் ஒன்றை சுருக்கமாக அறிமுகப்படுத்துங்கள் — Ardipithecus ramidus, பொதுவாக “ஆர்டி (Ardi)” என்று அழைக்கப்படுகிறது.

இது எத்தியோப்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட, சுமார் 4.4 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு புதைபடிவம் (fossil) என்று நம்பப்படுகிறது. ஆர்டி சில நேரங்களில் இரு கால்களில் நடக்க கூடியவைகள் என்றும், மனிதர்களைப் போல பற்கள் உடையவை என்றும், மேலும் குரங்குகளிலிருந்து மாறுபட்ட கைகள் இருந்ததால், அது மனிதனைப் போன்றதாக இருந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த அம்சங்கள் அதனை பாதி மனிதன், பாதி குரங்கு இருந்திருக்கலாம் என்றும், மனிதன் குரங்கில் இருந்து வந்த இடைநிலையை காட்டுகிறது என்று கருதுகின்றனர்.

ஆனால் இது ஒரு விளக்கம் (interpretation) மட்டுமே; மனிதர்கள் குரங்குகளில் இருந்து வந்தார்கள் என்பதற்கான உறுதியான ஆதாரம் (proof) அல்ல. மேலும், இந்த விளக்கம் வேதாகமத்துக்கு முரண்படுகிறது.

இன்றைய பாடத்திற்கான இணைப்பு:
தேவன் மனிதனை மிகுந்த கவனத்துடனும் விஷேஷமாகவும் படைத்தார் என்பதை வேதாகமம் தெளிவாக காட்டுகிறது. இத்தகைய கோட்பாடுகள் கூறுவது போல மனிதர்கள் குரங்குகளில் இருந்து பரிணமிக்கவில்லை. இதைத்தான் இன்று நாம் ஆழமாகக் கற்றுக்கொள்ளப் போகிறோம்.

20 mins:   [🔥]

வேதாகம பகுதி: ஆதியாகமம் 2:4–8; ஆதியாகமம் 1:27
செயற்பாடு: கதை நேரம்

சம்பவ சுருக்கம்:
தேவன் உலகத்தையும் அதில் உள்ள அனைத்தையும் ஆறு நாட்களில் படைத்தார். ஆகாயத்தில் பறவைகள், கடலில் மீன்கள், நிலத்தில் மிருகங்கள் உருவாகின. தேவன் பேசினார்; அவர் வார்த்தையினாலே எல்லாம் உருவானது—அவை அனைத்தும் சிறந்ததாக இருந்தன.

பின்பு தேவன், “நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக” என்று சொன்னார். மனிதர்கள் தேவனுடைய குணத்தைப் பிரதிபலிக்கவும், மற்ற சிருஷ்டிகளை கவனித்து கொள்ளவும், பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டார்கள். தேவன் மற்ற உயிரினங்களை உருவாக்கியதுபோல் மனிதரை உருவாக்கவில்லை. அவர் மனிதனை நிலத்தின் மண்ணிலிருந்து உருவாக்கி, அவனுக்குள் ஜீவ சுவாசத்தை ஊதினார். அந்த சுவாசம் மனிதனை ஜீவனுள்ளவனாக ஆக்கியது.

இதுவே மனிதர்களை மிருகங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. மனிதர்களுக்கே தேவனுடன் உறவு கொள்ளும் திறன் உள்ளது. மனிதர்களுக்கே மனச்சாட்சி உள்ளது—சரி, தவறு என்பதைக் காட்டும் உள்ளார்ந்த குரல். அடுத்த முறை ஏதாவது செய்ததற்கு உங்களுக்கு குற்ற உணர்வு ஏற்பட்டால், அந்த மனச்சாட்சி தேவன் உங்களுக்குள் வைத்துள்ள பரிசு என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் செல்ல நாய் அல்லது பூனைக்குக் கூட இந்தச் சிறப்பு இல்லை.

மனிதர்கள் தேவனுக்கு விசேஷமானவர்கள்.
நீங்களும் தேவனுக்கு மிகவும் விசேஷமானவரே.

20 நிமிடங்கள்: [🔥🔥 / 🔥]

செயற்பாடு (ஒன்றைத் தேர்வு செய்யவும்):

  1. “Did You Know?” (உங்களுக்குத் தெரியுமா?) தாள்களை அச்சிட்டு ஞாயிறு பள்ளி அறையில் ஒட்டவும். ஒவ்வொரு நிலையத்திற்கும் சிறுவர்களை அழைத்து சென்று, அங்குள்ள தகவல்களை சிறுவர்களுடன் கலந்துரையாடவும்.
    அல்லது

2. உங்கள் கைபேசியில் உள்ள டிஜிட்டல் படங்களை காட்டி, அனைவரும் அமர்ந்த நிலையில் ஒவ்வொரு தகவலையும் கலந்துரையாடவும்.

பேசும் கருத்து (Talk Point):
சங்கீதம் 139:14 — நாம் பிரமிக்கத்தக்க அதிசயமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளோம் என்று சொல்லுகிறது. உங்கள் தாயின் கருவில் இருந்தபோதே தேவன் உங்களை மிக கவனமாக உருவாக்கினார்.
எபேசியர் 1:4 — உலகம் படைக்கப்படுவதற்கு முன்பே தேவன் உங்களை நினைவில் வைத்திருந்தார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

நீங்கள் தற்செயலாக பிறந்தவர்கள் அல்ல.
தேவனுடைய சாயலில், அன்புடனும் கவனத்துடனும் நீங்கள் உருவாக்கப்பட்டவர்கள்.

(இந்த செயல்பாட்டை உங்கள் ஞாயிறு பள்ளி இயக்குநருடன் ஆலோசித்து திட்டமிடவும்.)

5 நிமிடங்கள்: [🔥]

அடுத்த அமர்வில், முதல் உறவு (relationship) எவ்வாறு உருவானது என்பதை அவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்பதை சிறுவர்களுக்கு தெரிவிக்கவும். அதற்கு முன், வேதாகமம் / Google / AI / அவர்களுடைய ஆசிரியரை கேட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்வியை ஆய்வு செய்து வருமாறு சொல்லுங்கள்.

இளைய சிறுவர்கள்:
👉 உங்களிடம் ஏற்கனவே மொபைல் போன் இருப்பதால், உங்களுக்கு மனித உறவுகள் தேவையா?

மூத்த சிறுவர்கள்:
👉 சில தேசங்களில் 11 % மேற்பட்டோர் தாங்கள் தவறான சரீரத்தில் பிறந்ததாக கருதுகிறார்கள் – ஒரு ஆண் பெண் சரீரத்திலும் / ஒரு பெண் ஆண் சரீரத்திலும். இப்படி ஒரு நபர் தவறாக பிறக்க முடியுவா?


பாடத்திற்கு தேவையான வடிவங்களை (Templates) இங்கே பதிவிறக்கம் செய்யலாம் (உள்ளிருந்தால்).

Did you know (PDF)
Did you know (Video)

பாடத்தை மேலும் ஆய்வு/ஆராய்ச்சி செய்ய விரும்பினால் கீழ்க்காணும் இணைப்புகளைப் பயன்படுத்தவும் (உள்ளிருந்தால்).


ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்துவமான மனப்பாட வசனம் இல்லை. பதிலாக, சிறுவர்கள் முழு அதிகாரங்கள் அல்லது வேதாகமப் பகுதிகளை மனப்பாடம் செய்ய ஊக்கப்படுத்துங்கள்.
Unit 1 (NEW Account) நினைவுப் பகுதி:

சங்கீதம் 33

உங்களுக்கும் உங்கள் சிறுவர்களுக்கும் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருந்ததா? அப்படியானால், கமெண்ட் பாக்ஸில் உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
தன்றி! 💖

Leave a Reply

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading