Unit 1 – வேதாகம அறிமுகம்
வாசிக்க தேவைப்படும் நேரம்:
சிறுவர்கள் என்ன கற்றுக்கொள்வார்கள்:
✅ தேவன் மனிதர்களை ஆழமாக நேசிக்கிறார்; அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு விவரத்தையும் கவனிக்கிறார்
✅ மனிதர்களுக்கு மற்ற மனிதர்கள் தேவையுள்ளனர்
✅ மனிதர்களின் பிரதான தேவை தேவன்
வணக்கம்! 👋
சிறுவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அவர்களுக்கு இயேசுவை அறிமுகப்படுத்தும் J4K-52 பணியில் நீங்கள் இணைந்ததற்கு மிக்க நன்றி.
இந்தப் பாடம் Unit 1 (NEW Account) இன் Chapter 4, Flame Kids 🔥 (8 வயது மற்றும் அதற்கு மேல்) க்காக தயாரிக்கப்பட்டது.
முழுமையான பாடத் திட்டத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
வாங்க, ஆரம்பிக்கலாம்! 🚀
அன்புள்ள ஆசிரியரே
இந்தப் பாடத்திற்கான ஆசிரியர் அறிமுக ஒலி பதிவை (Audio Introduction) எழுத்தாளர் லிண்டா ஷைனி அவர்கள், ஆசிரியர்களுக்காக சிறப்பாகத் தயாரித்துள்ளார்.
ஆசிரியர் குறிப்பு அட்டை (Teacher Cue Card)
பாடத்தின் அமைப்பு, செயல்பாடுகள் மற்றும் முக்கிய செய்திகளை ஆசிரியர்கள் விரைவாகப் பார்க்க உதவும் சுருக்கமான வழிகாட்டி இது.

பாடத்தின் அமைப்பு
- 4 பகுதிகள்: Bond Time → Bible Time → Build Time → Bye Time
- Bond Time: Spark மற்றும் Flame சிறுவர்கள் 2 தனித்தனி குழுக்களாக பிரிக்கப்படுவர்
- Bible Time: சிறுவர்கள் தங்களது வகுப்புகளாகப் பிரிக்கப்படுவர்
- Build Time: சிறுவர்கள் தங்களது சொந்த வகுப்புகளில் இருப்பர் அல்லது Spark அல்லது Flame என குழுக்களாக பிரிக்கப்படுவர்
- Bye Time: சிறுவர்கள் தங்களது சொந்த வகுப்புகளில் இருப்பர்
1. BOND TIME – வீட்டுப் பணி மீள்பார்வை [🔥🔥]
- கடந்த அமர்வின் வீட்டுப் பணியை மீள்பார்வை செய்யவும்.
- சிறிய சிறுவர்கள் கேள்வி: கைப்பேசிகள் இருந்தாலும், மற்ற மனிதர்கள் நமக்கு தேவையா?
→ முக்கிய கருத்து: மனிதர்களே மனிதர்களுக்கு ஏற்ற துணைவர்கள் (ஆதியாகமம் 2:20). - பெரிய சிறுவர்கள் கேள்வி: ஒருவர் தவறான உடலில் பிறக்க முடியுமா?
→ முக்கிய கருத்து: தேவன் மனிதர்களை ஆண் மற்றும் பெண் என மட்டுமே படைத்தார் (ஆதியாகமம் 1:27). - மாற்றம்: மனிதர்களுக்கான தேவனுடைய வடிவமைப்பு கவனமாகவும் நோக்கத்துடனும் உள்ளது.
2. BIBLE TIME – பகிர்வு [🔥]
வேதாகமப் பகுதி: ஆதியாகமம் 1:27; 2:18–24
- ஆதாமின் தனிமையை தேவன் கவனித்தார்.
- மிருகங்கள் ஏற்ற துணைவர்களாக இல்லை.
- மனித உறவு முக்கியம் என்பதைக் காட்ட தேவன், மனிதனிலிருந்து பெண்மையை படைத்தார்.
- தேவன் அவர்களுடன் நடந்தார் — மனிதர்களின் பிரதான தேவை தேவன்
- வலியுறுத்தவும்: நாம் தனியாக இருக்க உருவாக்கப்படவில்லை.
3. BUILD TIME – கண்காட்சி [🔥🔥]
செயற்பாடு: விவாதம் – கைப்பேசிகள் & மனித உறவு
- குழு A: கைப்பேசிகள் மனிதர்களை மேலும் நெருக்கமாக்குகின்றன
- குழு B: கைப்பேசிகள் இடைவெளியை உருவாக்குகின்றன
- இரு பார்வைகளையும் புரிந்து கொள்ள நடுவில் குழுக்களை மாற்றவும்
- முடிவுரை: கருவிகள் பயனுள்ளவை; ஆனால் மனித உறவுகளுக்கு பதிலாக இடங்கொள் முடியாது
4. BYE TIME – வீட்டுப் பணிகள் [🔥]
அடுத்த அமர்வு: ஏழாம் நாள்
வீட்டுப் பணி: இந்த வாரம் உண்மையான உறவுகளைப் பற்றி சிந்திக்க ஊக்கப்படுத்தவும்
விரிவான குறிப்பு
ஒவ்வொரு அமர்வு பகுதியின் விவரங்களைப் பார்க்க கீழ்க்காணும் இணைப்புகளைப் பயன்படுத்தவும்.
நேரம்: 15 நிமிடங்கள்: [🔥🔥]

செயல்பாடு:
கடந்த அமர்வின் வீட்டுப்பாடத்தை மீண்டும் நினைவுபடுத்தி, அதை அதை சிறுவர்களை பகிர சொல்லுங்கள்.
*** சிறு வயது பிள்ளைகளுக்கான கேள்வி:**
“உங்களிடம் மொபைல் இருந்தால் மட்டும் பொதுமா? அல்லது மற்ற மனிதர்களும் உங்களுக்கு தேவையா?”
ஆசிரியர் குறிப்பு:
ஆம், நமக்கு கண்டிப்பாக மற்ற மனிதர்கள் தேவை. இன்று, தேவன் மனிதர்களை எவ்வளவு விசேஷமான முறையில் படைத்தார் என்பதைப் பார்போம் . ஒரு நபருக்கு தகுந்த துணை இன்னொரு நபரே —அதிக வலிமையான சிங்கமோ, மிகவும் அழகான பாண்டாவோ கூட அல்ல (ஆதியாகமம் 2:20).
*** பெரிய வயது பிள்ளைகளுக்கான கேள்வி:**
சில தேசங்களில் 11 %க்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் தவறான சரீரத்தில் பிறந்ததாக கருதுகிறார்கள்- ஒரு ஆண் பெண் சரீரத்திலும் / ஒரு பெண் ஆண் சரீரத்திலும்.
இப்படி தவறான சரீரத்தில் ஒரு நபரால் பிறக்க முடியுமா?
ஆசிரியர் குறிப்பு:
இந்த கருத்து சமீப காலங்களில் பிரபலமாகி, மனிதரின் பாவ இயல்பை நியாயப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. ஒருவரின் மனம் ஒரு பாலினமாகவும், உடல் மற்றொரு பாலினமாகவும் இருக்கலாம் என்று இது கூறுகிறது. ஆனால் மனமும் உடலும் வேறு வேறு என்பதற்கான ஆதாரத்தை அறிவியலில் கூட இல்லை. தேவன் மனிதர்களை தமது சாயலில்—ஆணாகவும் பெண்ணாகவும்—இரு பாலினங்களாகவே படைத்தார் என்று வேதாகமம் தெளிவாக கூறுகிறது (ஆதியாகமம் 1:27). தேவனின் அமைப்பிற்கு எதிரான கருத்துக்கள் தேவனிடமிருந்து வரவில்லை, மனிதனின் தீய செயலின் விளைவாகும். (ரோமர் 1).
இன்றைய பாட இணைப்பு:
இன்றைய பாடத்தில், தேவன் மனிதர்களை எவ்வளவு ஆழமாகக் சிந்தித்து படைத்துள்ளார் என்றும், நாம் அவருக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை கற்றுக்கொள்வோம்.
நேரம்: 20 நிமிடங்கள் [🔥]
வேதாகம பகுதி: ஆதியாகமம் 1:27; ஆதியாகமம் 2:18–24
செயல்பாடு: கதை நேரம்
சம்பவ சுருக்கம்:
தேவன் தாம் உருவாக்கிய மனிதனை ஆழமாக நேசித்தார்; அவன் வாழ்க்கையின் மிகச் சிறிய விஷயங்களைக் கூட கவனிதித்து வந்தார். தேவன், “மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல. அவனுக்குத் ஏற்ற துணையை நான் உண்டாக்குவேன்” என்று கூறினார்.
அதனால், தேவன் பல விலங்குகளை படைத்து ஆதாமிடம் கொண்டு வந்தார். ஆதாம் அவைகளுக்கு பெயர் வைத்து மகிழ்ந்தான். ஆதாம் விலங்குகளை நேசித்தாலும், அவனுக்குள் ஏதோ ஒன்று குறைவாக இருந்தது. இதை கவனித்த தேவன் ஆதாமுக்குத் மிருகங்கள் தகுந்த துணை இல்லை என்று அறிந்தார்.
தேவன் ஆதாமை மிகவும் நேசித்ததால், அவனுக்குச் சிறந்ததையே கொடுக்க விரும்பினார். தேவன் ஆதாமை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தி, அவனுடைய ஒரு விலாவை எடுத்து, அதிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கினார். அவள் அவனுக்கு சரியான துணையாக இருந்தால்.
இதன் மூலம், மனிதரின் மிக முக்கியமான தேவைகளில் ஒன்றை தேவன் பூர்த்தி செய்தார்— சக மனித உறவு. மனிதர்கள் தனியாக வாழ படைக்கப்படவில்லை. அதனால் தான் தேவன் நமக்கு பெற்றோர், குடும்பம், நண்பர்கள் ஆகியவர்களைத் தந்து உள்ளர் .
ஆதாம் மற்றும் ஏவாளுக்கு இன்னும் மிகப் பெரிய தேவையொன்று இருந்தது—தேவனே. அதை அறிந்த தேவன் அவர்களுடன் தோட்டத்தில் நேரம் செலவிட்டு அவர்களுடன் பேசி வந்தார். நமக்கு மிகப் பெரிய தேவை மற்ற மனிதர்கள் முட்டும் அல்ல, ஒரு சாதனமோ அல்ல—தேவனே. தேவன் உங்களுடன் நெருக்கமான உறவில் இருப்பதை விரும்புகிறார்.
நேரம்: 20 நிமிடங்கள் [🔥🔥]
செயல்பாடு: விவாதம் – “மொபைல் போன்கள் மனித உறவுகளுக்கு உதவுகிறதா அல்லது தீங்கு விளைவிக்கிறதா?“
• வகுப்பை இரண்டு குழுக்களாகப் பிரித்து விவாதத்தை நடத்தவும்.
• குழு 1: “மொபைல் போன் மனிதர்களை இணைபதற்கு மிகவும் உதவுகின்றன”
• குழு 2: “மொபைல் போன் மனிதர்களை ஒருவரிடமிருந்து ஒருவரை தூரப்படுத்துறது ”
• இரு குழுகளும் இரு கருத்துகளையும் விவாதிக்கும்படி அவ்வப்போது அணிக்காக தலைப்புகளை மாற்றவும்.
நோக்கம்:
எப்படி தொழில் நுட்பம் மனித உறவுகளையும், அவர்களின் இணைப்பையும் பாதிக்கிறது/உதவுகிறது என்பது பற்றி சிறுவர்களை சிந்திக்க சொல்லுங்கள்
நேரம்: 5 நிமிடங்கள் [🔥]
சிறுவர்களை பின்வரும் வீட்டுப்பாடத்தை செய்யுமாறு சொல்லுங்கள்:
👉 அடுத்த வகுப்பிற்கு வரும் முன், நீண்ட காலமாக நீங்கள் பேசாமல் இருந்த நபரிடம் தொடர்பு கொள்ளுங்கள். முடிந்தால் நேரில் சந்தியுங்கள்— இல்லையெனில் அவர்களுக்கு போன் செய்து பேசுங்கள்..
விரைவு இணைப்புகள்
பாடத்திற்கு தேவையான வடிவங்களை (Templates) இங்கே பதிவிறக்கம் செய்யலாம் (உள்ளிருந்தால்).
சுட்டி இணைப்புகள்
பாடத்தை மேலும் ஆய்வு/ஆராய்ச்சி செய்ய விரும்பினால் கீழ்க்காணும் இணைப்புகளைப் பயன்படுத்தவும்:
அறிவிப்பு பலகை

Eஒவ்வொரு பாடத்திற்கும் தனித்துவமான மனப்பாட வசனம் இல்லை. பதிலாக, சிறுவர்கள் முழு அதிகாரங்கள் அல்லது வேதாகமப் பகுதிகளை மனப்பாடம் செய்ய ஊக்கப்படுத்துங்கள்.
Unit 1 (NEW Account) நினைவுப் பகுதி:
சங்கீதம் 33
உங்களுக்கும் உங்கள் சிறுவர்களுக்கும் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருந்ததா? அப்படியானால், கமெண்ட் பாக்ஸில் உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
தன்றி! 💖

Leave a comment