வாசிக்க தேவைப்படும் நேரம்:

4–6 minutes

வணக்கம்! 👋
சிறுவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அவர்களுக்கு இயேசுவை அறிமுகப்படுத்தும் J4K-52 பணியில் நீங்கள் இணைந்ததற்கு மிக்க நன்றி.

இந்தப் பாடம் Unit 1 (NEW Account) இன் Chapter 2, Spark Kids ✨ (8 வயதுக்குக் கீழ்) க்காக தயாரிக்கப்பட்டது.
முழுமையான பாடத் திட்டத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

வாங்க, ஆரம்பிக்கலாம்! 🚀


ஒவ்வொரு அமர்வு பகுதியின் விவரங்களைப் பார்க்க கீழ்க்காணும் இணைப்புகளைப் பயன்படுத்தவும்.

10 mins:   [✨✨]

செயல்பாடு: கடந்த அமர்வில் கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடத்தை மீண்டும் நினைவுபடுத்தி தொடங்குங்கள்:
“இந்த வாரம் நீங்கள் பயப்படும்போது, உடனே இயேசுவிடம் சொல்லுங்கள்—ஏனெனில் அவர் பயமற்றவர்.”
சிறுவர்கள் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அழைக்கவும்.

இன்றைய பாடம்:
இந்த அமர்வில், தேவன் உலகத்தை எவ்வாறு உருவாக்கினார் என்பதை நாம் கற்றுக்கொள்ளப் போகிறோம்.

25 நிமிடங்கள்: [✨🔥]

செயல்பாடு:

  • மாணவர்களை 6 சிறிய எல்லா வயதினரும் கலந்த குழுக்களாகப் பிரிக்கவும். ஒவ்வொரு குழுவிலும் SPARK சிறுவர்கள் (8 வயதுக்கு கீழ்) மற்றும் FLAME சிறுவர்கள் (8 வயது மற்றும் அதற்கு மேல்) இருக்க வேண்டும். செயல்பாட்டின் போது, பெரிய சிறுவர்கள் இளைய சிறுவர்களை வழிநடத்தி உதவும்.
  • 1 முதல் 6 வரை எண்களை சிறிய காகிதங்களில் எழுதிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு குழுவும் ஒன்றை எடுத்துக்கொள்ளட்டும். அவர்கள் தங்கள் அணிக்காகத் தேர்ந்தெடுத்த படைப்பு நாளை (ஆதியாகமம் 1) மீண்டும் உருவாக்குவார்கள்.
  • அறையின் நடுவில் தரையில் சில சார்ட் காகிதங்களை விரித்து, ஒரு பெரிய “தோட்ட இடத்தை” உருவாக்குங்கள். இதுவே அனைத்து குழுக்களும் சேர்ந்து தோட்டத்தை உருவாக்கும் அடிப்படை இடமாக இருக்கும்.
  • மணல், பருத்தி, பிசைந்த மைதா மாவு அல்லது Play-clay (விலங்குகள் மற்றும் பறவைகளுக்காக), நீல நிற காகிதம் அல்லது தூள் (தண்ணீருக்காக), செய்தித்தாள்கள் போன்ற அனைத்து பொருட்களையும் ஒரே பொதுவான இடத்தில் வைத்திருங்கள்.
  • வெளிப்புற இடம் இருந்தால் அதை பயன்படுத்துங்கள்! சிறுவர்கள் நிஜ புல், கற்கள், இலைகள், மலர்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம். இல்லையெனில், முன்பே சில இயற்கை பொருட்களை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • பெரிய குழுக்களுக்கு, 30 சிறுவர்களுக்கு ஒரு சார்ட் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு சார்டும் தனித்தனி தோட்டமாக இருக்கும்.
  • வழங்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி அவர்கள் பொதுவான சார்டில் படைப்பின் தங்கள் பகுதியை உருவாக்க வேண்டும்.
  • இறுதியாக, ஒவ்வொரு குழுவும் தங்கள் படைப்பின் பகுதியை அனைவருடனும் பகிரச் சொல்லுங்கள்.

பேச்சுக் குறிப்பு (Talk Point):
தேவன் தான் முழு உலகத்தையும் படைத்தார் — நீங்கள் அல்ல, நான் அல்ல, இந்த உலகில் உள்ள வேறு எந்த மனிதரும் அல்ல.

20 mins:   [✨]

வேதாகம பகுதி : ஆதியாகமம் 1: 1-25

பகுதி 1: படைப்பை மீண்டும் நினைவுகூருதல்

Build Time-இல் சிறுவர்கள் ஆராய்ந்த படைப்பின் ஒவ்வொரு நாளையும் சுருக்கமாக மீண்டும் நினைவுபடுத்துங்கள்.

பேச்சு குறிப்பு:
சிறுவர்களிடம்,
“உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து தோட்டத்தை உருவாக்க நீங்கள் என்ன பயன்படுத்தினீர்கள்?” என்று கேளுங்கள்.
அவர்கள் தங்கள் கைகள், கண்கள், கால்கள் மற்றும் சிந்தனை (மனம்) ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள் என்று சொல்வார்கள்.

பிறகு கேளுங்கள்,
“முழு உலகத்தையும் உருவாக்க தேவன் என்ன பயன்படுத்தினார் என்று உங்களுக்குத் தெரியுமா?”

அவருடைய வார்த்தை!
தேவன் பேசினார் — அதுவே நிகழ்ந்தது.

படைப்பின் சம்பவத்தை நீங்கள் சிறுவர்களுக்கு ஆதியாகம புத்தகத்திலிருந்து வாசிக்கும் பொது சிறுவர்கள் தேவன் செய்ததை நடித்து காட்ட சொல்லுங்கள். கீழே உள்ள அட்டவணையை வழிகாட்டியாகப் பயன்படுத்துங்கள். தேவனுடைய வார்த்தைகளை உரக்கமாக வாசியுங்கள்; ஒவ்வொரு நாளிலும் உருவாக்கப்பட்டவற்றை சிறுவர்கள் நடித்துக் காட்டட்டும்.

நாள்தேவன் சொன்னது
(ஆசிரியர் உரக்கமாக வாசிக்க வேண்டும்)
என்ன நடந்தது
(சிறுவர்கள் நடித்து காட்ட வேண்டும்)
1“வெளிச்சம் உண்டாகக்கடவது!”எழுந்து, பிரகாசமான ஒளிபோல் கைகளை விரித்து திறக்கவும்
2“வானம் உண்டாகக்கடவது!”கைகளை மேலே நீட்டி, பெரிய வானவில் வடிவமாக செய்யவும்
3“நிலமும், கடல்களும், பூமியின்மேல் செடிகளும் , கனிவிருட்சங்களும் முளைப்பிக்கக்கடவது “கீழே குனிந்து, மெதுவாக எழுந்து, செடிகள் வளர்வதுபோல் விரல்களை அசைக்கவும்
4“சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் உண்டாகக்கடவது!”சூரியனைப் போல பெரிய வட்டமிடுக, பின்னர் நட்சத்திரங்களைப் போல விரல்களை மினுங்கச் செய்யவும்
5“பறவைகளும் மீன்களும் பூமியை நிரப்புக!”பறவைகள் போல கைகளை அசைக்கவும், பின்னர் மீன்கள் போல நீந்தவும்
6“விலங்குகளும் உண்டாகக்கடவது”
“நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக!”
விலங்குகள் போல நடக்கவும் / விலங்கு சத்தங்கள் செய்யவும்
7“தேவன் ஓய்வெடுத்தார்.”அமர்ந்து, கைகளை மடித்து, ஆழமாக சுவாசிக்கவும்

பகுதி 2: வேதாகமத்தை அறிமுகப்படுத்துதல்

பேச்சு குறிப்புகள் (Talk Point):
வேதாகமத்தை கையில் பிடித்து காட்டி,
“இது என்ன என்று உங்களுக்கு தெரியுமா?” என்று கேளுங்கள். இது தான்வேதாகமம் என்று விளக்குங்கள். இதில் தேவன் தமது வார்த்தையை எழுதி வைத்திருக்கிறார் என்று சொல்லுங்கள். சிறுவர்கள் அதைத் தொடவும், கையில் பிடித்துப் பார்க்கவும் வேதாகமத்தை அவர்களிடம் கொடுங்கள்.

அவர்களிடம் சொல்லுங்கள்,
“நாம் தேவனை கண்களால் பார்க்க முடியாது. ஆனால் அவர் எப்படிப்பட்டவர், அவர் என்ன சொன்னார் என்பதை வேதாகமத்தின் மூலம் அறியலாம். நீங்கள் இயேசுவை அறிய விரும்பினால், வேதாகமத்தை அறிந்திருக்க வேண்டும்”.

அதை எப்படி வாசிப்பது என்பதை நீங்கள் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பீர்கள் என்று விளக்குங்கள்.

பின், வேதாகமத்தை சங்கீதம் 23-ஆம் அதிகாரத்திற்கு திறந்து, சிறுவர்களுடன் மெதுவாக, வார்த்தை வார்த்தையாக வாசிக்க வழிநடத்துங்கள். சில சிறுவர்கள் இன்னும் வாசிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் வேதாகமத்தை அனுபவிப்பதும், அதற்கு பழகுவதுமே இங்கே நோக்கமாகும்.

5 mins:   [✨]

அடுத்த அமர்வில் மனிதர்கள் எப்படி படைக்கப்பட்டார்கள் என்பதை அவர்கள் கற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்று சிறுவர்களுக்கு தெரிவியுங்கள். அதற்கு முன், கீழ்க்கண்ட வீட்டுப் பணியை செய்யுமாறு சொல்லுங்கள்.

👉 தேவன் படைத்த ஒரு விஷயத்தையும், உங்கள் வீட்டிற்குள் அல்லது வீட்டைச் சுற்றி உள்ளவைகளில் கண்டுபிடியுங்கள். அதைப் ஒரு காகிதத்தில் வரைந்து, அடுத்த வாரம் வகுப்பிற்கு கொண்டு வாருங்கள்.


பாடத்திற்கு தேவையான வடிவங்களை (Templates) இங்கே பதிவிறக்கம் செய்யலாம் (உள்ளிருந்தால்).


பாடத்தை மேலும் ஆய்வு/ஆராய்ச்சி செய்ய விரும்பினால் கீழ்க்காணும் இணைப்புகளைப் பயன்படுத்தவும் (உள்ளிருந்தால்).


ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்துவமான மனப்பாட வசனம் இல்லை. பதிலாக, சிறுவர்கள் முழு அதிகாரங்கள் அல்லது வேதாகமப் பகுதிகளை மனப்பாடம் செய்ய ஊக்கப்படுத்துங்கள்.
Unit 1 (NEW Account) நினைவுப் பகுதி:

சங்கீதம் 33: 1-9

உங்களுக்கும் உங்கள் சிறுவர்களுக்கும் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருந்ததா? அப்படியானால், கமெண்ட் பாக்ஸில் உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
தன்றி! 💖

Leave a Reply

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading