✨அத்தியாயம் 4 – அன்பு

Published by

on

வாசிக்க தேவைப்படும் நேரம்:

2–3 minutes

வணக்கம்! 👋
சிறுவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அவர்களுக்கு இயேசுவை அறிமுகப்படுத்தும் J4K-52 பணியில் நீங்கள் இணைந்ததற்கு மிக்க நன்றி.

இந்தப் பாடம் Unit 1 (NEW Account) இன் Chapter 2, Spark Kids ✨ (8 வயதுக்குக் கீழ்) க்காக தயாரிக்கப்பட்டது.
முழுமையான பாடத் திட்டத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

வாங்க, ஆரம்பிக்கலாம்! 🚀

இந்தப் பாடத்திற்கான ஆசிரியர் அறிமுக ஒலி பதிவை (Audio Introduction) எழுத்தாளர் லிண்டா ஷைனி அவர்கள், ஆசிரியர்களுக்காக சிறப்பாகத் தயாரித்துள்ளார்.

<coming soon>


ஒவ்வொரு அமர்வு பகுதியின் விவரங்களைப் பார்க்க கீழ்க்காணும் இணைப்புகளைப் பயன்படுத்தவும்.

நேரம்: 15 நிமிடங்கள்: [✨✨]

செயல்பாடு:
கடந்த அமர்வில் வீட்டுப் பணியாக சிறுவர்கள் வரைந்த கொண்டு வந்த தங்கள் நண்பர்களின் படங்களை பெயருடன் சொல்ல சொல்லுங்கள். ஒவ்வொரு சிறுவரின் ஓவியத்தையும் பாராட்டி, அவர்களை உற்சாகப்படுத்துங்கள் .

வீட்டுப் பணியை செய்யாத சிறுவர்களுக்கு காகிதம் கொடுத்து, வகுப்பிலேயே அவர்கள் தங்கள் நண்பர்களின் படத்தை வரைய சொல்லவும்.

நேரம்: 20 நிமிடங்கள்: [✨]
வேதாகமப் பகுதி: ஆதியாகமம் 1:27; ஆதியாகமம் 2:18–24
செயற்பாடு: கதை நேரம் (Story Time)

சம்பவ சுருக்கம்:
தேவன் ஒரு அழகான தோட்டத்தை உருவாக்கி அதில் ஆதாமை வசிக்கச் செய்தார் . ஆதாம் பல விலங்குகள் மத்தியில் இருந்தான்.
“சில விலங்குகளின் பெயர்களை உங்களால் சொல்ல முடியுமா?”
(புலி, சிங்கம், நாய் குட்டி, பூனை குட்டி போன்றவை.)

ஆதாம் தோட்டத்தில் மகிழ்ச்சியாக இருந்தான்; ஆனாலும் தேவன் ஒரு முக்கியமான விஷயத்தை அறிந்திருந்தார்—ஆதாமுக்கு சக நபர் தேவை என்று. அதனால் தேவன் ஆதாமை ஆழ்ந்த நித்திரையில் ஆழ்த்தி, ஏவாளை உருவாக்கினார். ஆதாம் ஏவாளை பார்த்தபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

ஆதாம் ஏவாள் இருவரும் அந்தத் தோட்டத்தில் மகிழ்ச்சியாக இருந்தார்கள். தேவன் அவர்களுடன் இருந்ததார். தேவன் அவர்களுடன் பேசி நேரம் செலவிட்டு வந்தார்.

தேவன் நம்மை தனியாக இருக்கும்படி படைக்கவில்லை. அதனால்தான் அவர் உங்களுக்கு அம்மா, அப்பா, சகோதரர்கள், சகோதரிகள், தாத்தா, பாட்டி, நண்பர்கள், ஆசிரியர்கள் என்ன அனைவரையும் கொடுத்துள்ளார். அனைவரும் எல்லா நேரமும் உங்களுக்கு பிடித்தவர்களாக கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவரும் நமக்கு தேவை என்பதை தேவன் அறிந்திருக்கிறார்.

ஆதாம் ஏவாள் போல நமக்கும் தேவன் நம்மோடு கூட இருப்பதும் தேவை.

“நமக்காக மனிதர்களைக் கொடுத்து , நம் அருகில் இருக்கும் தேவனுக்கு நன்றி சொல்லலாமா?”
(சிறுவர்களைச் சேர்த்து ஒரு சிறிய ஜெபத்தை நடத்துங்கள்.)

நேரம்: 20 நிமிடங்கள் [✨]

செயற்பாடு:

வகுப்பில் ஒரு பந்தை சுற்றி கொடுங்கள். ஒரு பிள்ளைக்கு பந்து கிடைக்கும் போது, நண்பனுடன் இருந்த ஒரு மகிழ்ச்சியான தருணத்தை பகிரச் சொல்லுங்கள் — அவர்கள் என்ன விளையாடினார்கள், எங்கே சென்றார்கள், அல்லது ஒன்றாக என்ன மகிழ்ந்தார்கள் என்பதை சொல்லட்டும்.

நேரம்: 5 mins:   [✨]

அடுத்த அமர்வில் 7-ஆம் நாளில் தேவன் என்ன செய்தார் என்பதை அவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்பதை சிறுவர்களுக்கு தெரிவியுங்கள். இதோ இந்த வாரத்தின் வீட்டுப் பணி:

👉 இந்த வாரம், பள்ளியிலோ அல்லது சபையிலோ ஒரு புதிய நண்பனை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.


ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்துவமான மனப்பாட வசனம் இல்லை. பதிலாக, சிறுவர்கள் முழு அதிகாரங்கள் அல்லது வேதாகமப் பகுதிகளை மனப்பாடம் செய்ய ஊக்கப்படுத்துங்கள்.
Unit 1 (NEW Account) நினைவுப் பகுதி:

சங்கீதம் 33: 1-9

உங்களுக்கும் உங்கள் சிறுவர்களுக்கும் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருந்ததா? அப்படியானால், கமெண்ட் பாக்ஸில் உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
தன்றி! 💖

Leave a comment