Level 1 – வேதாகம அறிமுகம் – Unit 2
Time to READ:
சிறுவர்கள் என்ன கற்றுக்கொள்வார்கள்:
✅ தேவனுக்கு “YES” என்று சொல்லாமல் இருப்பதும், அவருக்கு “NO” என்று சொல்வதும் ஒன்றே.
✅ சிறுவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் தேவனுக்கு எப்படியெல்லம் “NO” சொல்லலாம் என்று வழிகளை கண்டுபிடிக்கின்றனர் .
வணக்கம்! 👋
சிறுவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அவர்களுக்கு இயேசுவை அறிமுகப்படுத்தும் J4K-52 பணியில் நீங்கள் இணைந்ததற்கு மிக்க நன்றி.
இந்தப் பாடம் Unit 2 (Blocked Account) இன் Chapter 1, Flame Kids 🔥 (8 வயது மற்றும் அதற்கு மேல்) க்காக தயாரிக்கப்பட்டது.
முழுமையான பாடத் திட்டத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
வாங்க, ஆரம்பிக்கலாம்! 🚀
ஆசிரியர் குறிப்பு அட்டை (Teacher Cue Card)
பாடத்தின் அமைப்பு, செயல்பாடுகள் மற்றும் முக்கிய செய்திகளை ஆசிரியர்கள் விரைவாகப் பார்க்க உதவும் சுருக்கமான வழிகாட்டி இது.

பாடத்தின் அமைப்பு
- 3 பகுதிகள்: Build Time → Bible Time → Bye Time
- Build Time: spark மற்றும் flame சேர்த்து இருப்பார்கள
- Bible Time: சிறுவர்கள் தங்களது வகுப்புகளாகப் பிரிக்கப்படுவர்
- Bye Time: சிறுவர்கள் தங்களது சொந்த வகுப்புகளில் இருப்பர்
1. Build Time [✨🔥]
செயல்பாடு: பாடல்கள்
“Block பண்ணாதே” பாடலை பயன்படுத்தவும்
(அல்லது இதே தலைப்பிற்கு பொருத்தமான வேறு பாடல்)
Action-வுடன் பாடவும்
இன்றைய பாடத்தின் அறிமுகம்:
“முந்தைய UNIT – New Account-ல், தேவன் முழு உலகையும் உருவாக்கி ஒரு New Account-ஐ தொடங்கினார் என்பதை நாம் பார்த்தோம்.
தேவன் அனைத்தையும் பார்த்து, ‘இது நல்லது’ என்று சொன்னார்.
ஆனால் இன்று நாம் பார்க்கும் உலகம் அவ்வளவு நல்லதாக தெரியவில்லையே.
தேவன் உருவாக்கிய அந்த நல்ல உலகம், நல்ல இயற்கை, நல்ல மனிதர்களுக்கு —என்ன நடந்தது?
அதை அறிய இன்று நாம் Unit 2 – Blocked Account-ஐ தொடங்குவோம்”
3. Bible TIME [🔥]
பகுதி 1: ❤️ Heart-Block விளையாட்டு
- Heart-Block சவால் விளையாட்டு பொருள்-ஐ பயன்படுத்தவும்
- வீடியோவில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும் (Quick Links)
- இந்த வாரம் வெளிப்படும் block: MAN
(இந்த விளையாட்டு இந்த unit முழுவதும் தொடரும்)
பகுதி 2: குழு வேலை
- சிறிய குழுக்கள் / ஜோடிகள்
- ஆதியாகமம் 2:15–17; ஆதியாகமம் 3
வாசித்து கலந்து ஆலோசிக்கவும்.
எழுதுக:
ஆதாமும் ஏவாளும் எவ்வாறு தேவனுக்கு “No” சொன்னார்கள்?
தேவைப்பட்டால் உதவும் கேள்விகள்:
- தேவனை விட சாத்தானை நம்பினர்
- முதலில் தேவனிடம் அவர்கள் பேசவில்லை
- மனந்திரும்புவதற்குப் பதிலாக மறைந்து கொண்டும், பிறரை குற்றமும் சாட்டினர்.
பகிர்வு:
குழுக்களை விரிவாக பகிர சொல்லுங்கள்
பகுதி 3: தனிப்பட்ட மனப்பரிசீலனை
ஒவ்வொரு சிறுவர்களும் எழுத வேண்டும்:
“நான் என் தினசரி வாழ்க்கையில் எவ்வாறு தேவனுக்கு “No” சொல்கிறேன் ?”
(விருப்பப்பட்டால்: Yes–No–God சிறு புத்தகம்)
4. BYE TIME [🔥]
கேள்:
“இந்த வாரம் தேவனுக்கு “Yes” சொல்லும் வகையில் நான் செய்யப் போகும் ஒரு விஷயம்”
வீட்டில் செய்யவேண்டியது:
அடுத்த வகுப்புக்கு முன் அதைச் செய்து முடிக்கவும்
அடுத்த அமர்வு:
“குடும்பங்கள் எப்படி தேவனுக்கு “No” என்று சொல்கிறது”
விரிவான குறிப்பு
ஒவ்வொரு அமர்வு பகுதியின் விவரங்களைப் பார்க்க கீழ்க்காணும் இணைப்புகளைப் பயன்படுத்தவும்.
10 mins: [✨🔥]

செயற்பாடு: பாடல்கள்
சிறுவர்களை பாடல் பாடும் நேரத்தில் உற்சாகமாக கலந்து கொள்ளச் செய்யுங்கள்.
“Block பண்ணாதே” என்ற பாடலை (Quick Links-ல் உள்ள இணைப்பு) பயன்படுத்தலாம்.
அல்லது, பாடங்களின் பொருத்தமான எந்தப் பாடலையும் பயன்படுத்தலாம்.
இன்றைய பாட இணைப்பு: முந்தைய UNIT (NEW ACCOUNT)-ல், தேவன் முழு உலகத்தையும் எவ்வாறு படைத்தார் என்பதையும், ஒரு புதிய Account-ஐ தொடங்கினார் என்பதை பற்றி நாம் பார்த்தோம். தேவன் தாம் படைத்த அனைத்தையும் பார்த்து, ‘இது நல்லது’ என்று சொன்னார். ஆனால் இன்று நாம் வாழும் உலகம் நல்லதாகத் தோன்றுகிறதா? தேவன் படைத்த அந்த நல்ல உலகம், நல்ல இயற்கை , நல்ல மனிதர்களுக்கு —என்ன நடந்து ? அதை பற்றி தான், நாம் Unit 2 – BLOCKED ACCOUNT-ல் கற்றுக்கொள்ளப் போகிறோம்.”
40 நிமிடங்கள்: [🔥]
வேதாகம பகுதி: ஆதியாகமம் 2:15–17, ஆதியாகமம் 3
பகுதி 1: ❤️ Heart-Block விளையாட்டு
கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி ஒரு எளிய Heart-Block Challenge-ஐ உருவாக்குங்கள்.
படிப்படியாக “எப்படி விளையாடுவது” என்பதை பற்றி அறிய Quick Links-ல் உள்ள வீடியோவையும் பார்க்கலாம்.
இந்த unit-ல், ஒவ்வொரு வாரமும் Bible Time-ஐ தொடங்க இந்த விளையாட்டு சவால் பயன்படுத்தப்படும்.
ஒவ்வொரு அமர்விலும் ஒரு “Block” வெளிப்படுத்தப்பட்டு அதை பற்றி கற்றுக்கொடுக்கப்படும்.
இந்த அமர்வில் வெளிப்படுத்தப்பட வேண்டிய Block: “மனிதன் (Man)”
பேச்சுக் குறிப்பு:
சிறுவர்களிடம் கேளுங்கள்:
“தேவன் உங்கள் மொபைல்- லில் ஒரு contact-ஆக அல்லது Instagram-ல் ஒரு நண்பராக இருந்தால், நீங்கள் அவரை block அல்லது cancel செய்வீர்களா?”
(சிறுவர்கள் பெரும்பாலும் “No” என்று பதிலளிப்பார்கள்)
பதில் சொல்லுங்கள்:
“சரி தான். நாம் யாரும் வெளிப்படையாக தேவனிடம் ‘No’ என்று சொல்லமாட்டோம்.
ஆனால் பல நேரங்களில், நம் இதயங்களில் அமைதியாக தேவனிடம் ‘No’ என்று சொல்கிறோம். ஒரு முறை, இரண்டு முறை மட்டும் அல்ல—ஒவ்வொரு நாளும் பல முறை.
இதைக் கேட்டு உங்களுக்கு ஆச்சரியமாகவும், நம்பமுடியாததாகவும் ம இருக்கலாம்.
ஆனால் இன்று, முதல் மனிதன் மற்றும் முதல் பெண்ணின் கதையைப் பார்க்கும் போது , ஆரம்பத்திலிருந்தே மனிதர்கள் தங்கள் இதயங்களில் தேவனிடம் ‘No’ என்று சொன்னதை நாம் அறிந்து கொள்வோம்.”
பகுதி 2: ஆதாம் மற்றும் ஏவாளின் தேர்வைப் புரிந்துகொள்வது
சிறுவர்களை இரண்டு பேர்களாக அல்லது சிறு குழுக்களாகப் பிரிக்கவும். ஒவ்வொரு குழுவும் வேதாகமப் பகுதியை கவனமாக வாசித்து, கதையைப் பற்றி கலந்துரையாடச் சொல்லுங்கள். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு காகிதத் தாளை கொடுத்து , ஆதாம் மற்றும் ஏவாள் எந்த எந்த விதங்களில் தேவனுக்கு “No” என்று சொன்னார்கள் என்பதை எழுதச் சொல்லுங்கள். பெரும்பாலான குழுக்கள் “கீழ்ப்படியாமையினால் ” என்ற சொல்லுடன் தொடங்குவார்கள் (சில நேரங்களில் அதிலேயே நின்றுவிடுவார்கள்). இன்னும் ஆழமாக சிந்திக்க அவர்களை ஊக்குவியுங்கள்.
பின்வரும் கருத்துகளுக்குள் அவர்களை நீங்கள் வழிநடத்தலாம்:
- சாத்தானின் வார்த்தைகளை தேவனுடைய வார்த்தையைக் காட்டிலும் அதிகமாக நம்பினதினால், அவர்கள் தேவனுக்கு “No” என்று சொன்னார்கள்.
- தேவனிடம் முன்பே ஆலோசிக்காமல் முடிவு எடுத்தினால், அவர்கள் தேவனுக்கு “No” என்று சொன்னார்கள்.
- உண்மையாக மனந்திரும்புவதற்குப் பதிலாக தேவனுக்கு பயந்தும், மறைந்தும் , பிறரை குற்றம் சாட்டியும் தேவனுக்கு “No” என்று சொன்னார்கள்.
- ஒவ்வொரு குழுவும் தங்களின் எண்ணங்களை முழு வகுப்புடன் பகிர்ந்து கொள்ள சொல்லுங்கள் .
பகுதி 3: தனிப்பட்ட சிந்தனை
ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஒரு காகிதத்தை கொடுத்து,
அவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் அவர்களுடைய செயல்கள், மனப்பாங்குகள் அல்லது தேர்வுகள் மூலம் எப்படி தேவனுக்கு “No” என்று சொல்கிறார்கள் என்பதை எழுதச் சொல்லுங்கள்.
விருப்பப்பட்டால் :
இந்தப் பகுதியில் “இல்லை ஆம், தேவனே” booklet (மேலும் இந்த தொடர் நான்கு வாரங்களிலும்) பயன்படுத்தலாம். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள Quick Links-ஐ பார்க்கவும்.
10 நிமிடங்கள் [🔥]
ஒவ்வொரு சிறுவர்களையும் , இந்த வாரத்தில் தேவனுக்கு “Yes” என்று சொல்லும் வகையில் அவர்கள் செய்யக்கூடிய ஒரு செயலை எழுதச் சொல்லுங்கள்.
(இந்தச் செயல்பாட்டிற்கு “Yes–No, God” Booklet பயன்படுத்தலாம்.)
வீட்டுப்பணி:
அடுத்த அமர்விற்கு முன், சிறுவர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த செயலை நிறைவேற்ற வேண்டும்.
அடுத்த அமர்வு:
அடுத்த அமர்வில், குடும்பங்கள் எவ்வாறு தேவனுக்கு “No” சொல்லுகிறார்கள் என்றும் — மேலும் அதற்குப் பதிலாக எவ்வாறு “Yes” என்று சொல்லலாம் என்பதைப்பற்றி அவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்று சொல்லுங்கள்.
விரைவு இணைப்புகள் (Quick Links)
Download the templates required (if any) for the lesson here:
1. Block Panaathe Song (Tamil)
2. Block Panaathe Song (Audio)
3. Block Panaathe Lyrical
4. [Optional] “Yes No, God” Booklet: Template
A4 காகிதத்தில் முன் மற்றும் பின் பக்க அச்சு எடுக்கவும்
(“Flip on long edge” அமைப்பைத் தேர்வு செய்யவும்).
அச்சிடப்பட்ட தாளை நடுவில் மடக்கவும். குறிக்கப்பட்ட இடத்தில் வெட்டவும். பின்னர் உள்ளபுற ஓரங்களை ஸ்டேபிள் செய்யவோ அல்லது ஒட்டவோ செய்து, படத்தில் காட்டியபடி ஒரு சிறிய புத்தகமாக (mini booklet) உருவாக்கவும்.

5. Heart-Block Game Instructions
சுட்டி இணைப்புகள்
NA
அறிவிப்பு பலகை

ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்துவமான மனப்பாட வசனம் இல்லை. பதிலாக, சிறுவர்கள் முழு அதிகாரங்கள் அல்லது வேதாகமப் பகுதிகளை மனப்பாடம் செய்ய ஊக்கப்படுத்துங்கள்.
Unit 2 (BLOCKED Account) நினைவுப் பகுதி:
சங்கீதம் 119: 9 – 16
உங்களுக்கும் உங்கள் சிறுவர்களுக்கும் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருந்ததா? அப்படியானால், கமெண்ட் பாக்ஸில் உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
தன்றி! 💖

Leave a Reply