✨அத்தியாயம் 1 – மனிதன் தேவனை மறுத்தான்

Published by

on

Time to READ:

3–5 minutes

வணக்கம்! 👋
சிறுவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அவர்களுக்கு இயேசுவை அறிமுகப்படுத்தும் J4K-52 பணியில் நீங்கள் இணைந்ததற்கு மிக்க நன்றி.

இந்தப் பாடம் Unit 1 (Blocked Account) இன் Chapter 1, Spark Kids 🔥 (8 வயதுக்குக் கீழ்) க்காக தயாரிக்கப்பட்டது.
முழுமையான பாடத் திட்டத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.


ஒவ்வொரு அமர்வு பகுதியின் விவரங்களைப் பார்க்க கீழ்க்காணும் இணைப்புகளைப் பயன்படுத்தவும்.

10 mins:   [✨✨]

செயற்பாடு: பாடல்கள்

சிறுவர்களை பாடல் பாடும் நேரத்தில் உற்சாகமாக கலந்து கொள்ளச் செய்யுங்கள்.
Block பண்ணாதே” என்ற பாடலை (Quick Links-ல் உள்ள இணைப்பு) பயன்படுத்தலாம்.
அல்லது, பாடங்களுக்கு பொருத்தமான எந்தப் பாடலையும் பயன்படுத்தலாம். 🎶

Block பண்ணாதே (3)
உன்னை உண்மையாய் நேசிப்பவர BLOCK பண்ணாதே

“I love you Jesus” சொன்ன மட்டும் பத்தாது
வேதம் சொல்லும் வாழ்கையை நம்ம வாழனும்!
“I am Christian” சொன்ன மட்டும் பத்தாது!
தினம் தினம் இயேசு போல மாறணும்!

ஷலலல ஷலலல லலலல
நேசிப்பேனே இயேசுவையே உண்மையாக (2)

இன்றைய பாட இணைப்பு:

“முந்தைய UNIT (NEW ACCOUNT)-ல், தேவன் முழு உலகத்தையும் எவ்வாறு படைத்தார் என்பதையும், ஒரு புதிய Account-ஐ தொடங்கினார் என்பதை பற்றி நாம் பார்த்தோம். தேவன் தாம் படைத்த அனைத்தையும் பார்த்து, ‘இது நல்லது’ என்று சொன்னார். ஆனால் இன்று நாம் வாழும் உலகம் நல்லதாகத் தோன்றுகிறதா?
தேவன் படைத்த அந்த நல்ல உலகம், நல்ல இயற்கை , நல்ல மனிதர்களுக்கு —என்ன நடந்து ? அதை பற்றி தான், நாம் Unit 2 – BLOCKED ACCOUNT-ல் கற்றுக்கொள்ளப் போகிறோம்.”

45 mins:   [✨]

Bible Portion: Genesis 2: 15-17, Genesis 3

ஆதாம் மற்றும் ஏவாள் பற்றிய கதையையும், அவர்கள் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படையாமல் நடந்துகொண்டார்கள் என்பதையும் சொல்லுங்கள்.
தேவன் தெளிவாக செய்யக்கூடாது என்று சொன்னதை அவர்கள் செய்தபடியால், அவர்கள் தேவனுக்கு “No” சொன்னதை எளிமையாக சிறுவர்களுக்கு எடுத்துக்காட்டுங்கள்.

குறிப்பு (Tip):
இணையத்தில் படங்களைத் தேடி கதை சொல்ல அவற்றை பயன்படுத்தலாம். இப்படங்கள் சிறுவர்களுக்கு கதையை எளிதாகக் கற்பனை செய்து பார்க்கவும், ஆர்வத்துடன் கவனிக்கவும் உதவும்.

செய்தி:
தேவன் செய்யக்கூடாது என்று சொன்னதை நாம் செய்யும்போது, அது தேவனுக்கு “No” என்று சொல்வதாகும்.
தேவன் செய்யச் சொன்னதை நாம் செய்யும்போது, அது தேவனுக்கு “Yes” என்று சொல்வதாகும்.

தேவையானவை:
“Yes, God” படங்கள் (Quick Links-ஐ பார்க்கவும்)

செயல்பாடு:

ஒவ்வொரு படமும் சிறுவர்கள் அறிந்த இடங்களை குறிப்பவை —திருச்சபை, வீடு, பள்ளி, மற்றும் விளையாடும் இடம். இந்த படங்களை பயன்படுத்தி, சிறுவர்களை படத்திலுள்ள ஒவ்வொரு இடத்திற்கும் கற்பனைப் பயணமாக அழைத்துச் சென்று அவர்களின் செயல்களினால் எப்படி தேவனுக்குப் “Yes” சொல்லலாம் என்பதை சிந்திக்க உதவுங்கள்.

அறிமுகம் (இவ்வாறு சொல்லாம் ):

“இன்று, நம் கற்பனையாக பல இடங்களுக்கு பயணம் செய்யப் போகிறோம். ஒவ்வொரு இடத்திலும், இயேசு உங்களை என்ன செய்ய வேண்டும் என்று விரும்புவார் என்பதை நீங்கள் யோசிக்கப் போகிறீர்கள் . நினைவில் கொள்ளுங்கள்—தேவன் விரும்புவதை செய்யும் போது நாம் தேவனுக்கு ‘Yes’ என்று சொல்கிறோம். தயாரா? வாங்க, போகலாம்!”

கதாபாத்திர நடிப்பு- எடுத்துக்காட்டு: திருச்சபை

“வாருங்கள், திருச்சபைக்கு போகலாம்!
(எல்லோரும் கையில் Bible பிடித்துக்கொண்டு நடப்பது போல நடிக்க வேண்டும்)

Pastor பேசுகிறார். அவர் பேசுவது உங்களுக்கு கேட்கிறதா?
(சிறுவர்கள் தலையாட்டியோ அல்லது ‘ஆம்!’ என்று சொல்கிறார்கள்.)

அப்பொழுது உங்கள் மனதிற்குள் இன்னொரு குரல் கேட்கிறது:
‘இது சலிப்பாக இருக்கிறது. அம்மாவிடம் சென்று நான் விளையாட வேண்டும்! என்று ’

இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
இங்கே தேவனுக்கு நீங்கள் எப்படி ‘Yes’ சொல்லலாம்?”
(சிறுவர்கள் பதிலளிக்கட்டும்—ஆராதனை முடியும் வரை அமைதியாக காத்திருக்க வேண்டும்.)

“திருச்சபையில் இருக்கும்போது உங்கள் நண்பன் உங்களுடன் பேச விரும்பினாலும், உங்களுக்கும் அவனுடன் விளையாட வேண்டும் என்று தோன்றிற்று என்றாலும் என்ன செய்வீர்கள்?
அப்போது தேவனுக்கு நீங்கள் எப்படி ‘Yes’ சொல்வீர்கள்?”
(சிறுவர்களை பதிலளிக்க அனுமதிக்கவும்— அவர்களின் பதிலை கேட்டு அவர்களை பாராட்டுங்கள்.)

கதாபாத்திர நடிப்பை (Role Play) தொடருங்கள்:

அதேபோல், சிறுவர்களை மற்ற இடங்களுக்கும்—வீடு, பள்ளி, மற்றும் விளையாடும் இடம்—அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் சிந்தித்து, “தேவனுக்கு “Yes” என்று சொல்லும் செயல்களுடன் பதிலளிக்க அவர்களுக்கு உதவும் எளிய கேள்விகளை கேளுங்கள்.

முக்கிய கருத்துகள்:
  • சபை: தேவனுடைய வார்த்தையை கவனமாக கேட்பது
  • வீடு: பெற்றோருக்குக் கீழ்ப்படிவது
  • பள்ளி: ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படிவது
  • விளையாடும் இடம்: நண்பர்களிடம் அன்பாக இருப்பதும், விளையாட்டு பொருள்களை பகிர்வதும்

5 mins:   [✨]

தேவையான பொருட்கள்:
ஒவ்வொரு சிறுவர்களுக்கும் “Yes to God” வண்ணமிடும் படத்தின் printout.

அடுத்த அமர்வில், குடும்பமாக நாம் எவ்வாறு தேவனுக்கு “Yes” சொல்லலாம் என்பதைக் குறித்து மேலும் கற்றுக்கொள்ளப் போகிறோம் என்று சிறுவர்களிடம் சொல்லுங்கள். அடுத்த அமர்வுக்கு முன், அவர்கள் இந்த வீட்டுப்பணியை முடிக்க வேண்டும்:

👉 “Yes to God” என்னும் படத்தை வண்ணம் திட்டுக .

குறிப்பு:
வரும் வாரம் முழுவதும், தினமும் தேவனுக்கு எவ்வாறு “Yes” சொல்லலாம் என்பதை சிறுவர்களிடமிருந்து கேட்க, பெற்றோர்களை ஊக்குவிக்கவும்.


Download the templates required (if any) for the lesson here:

1. Block Panaathe Song (Tamil)

2. Block Panaathe Song (Audio)

3. Block Panaathe Lyrical


4. “Yes” God coloring sheet

5.“Yes” God Sheet for the Role Play (Bible Time – Part 2)


ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்துவமான மனப்பாட வசனம் இல்லை. பதிலாக, சிறுவர்கள் முழு அதிகாரங்கள் அல்லது வேதாகமப் பகுதிகளை மனப்பாடம் செய்ய ஊக்கப்படுத்துங்கள்.
Unit 2 (BLOCKED Account) நினைவுப் பகுதி:

சங்கீதம் 119 : 9-11

உங்களுக்கும் உங்கள் சிறுவர்களுக்கும் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருந்ததா? அப்படியானால், கமெண்ட் பாக்ஸில் உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
தன்றி! 💖

Leave a comment