✨அத்தியாயம் 2 – குடும்பம் தேவனை மறுத்தது

Published by

on

Time to READ:

3–5 minutes

வணக்கம்! 👋
சிறுவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அவர்களுக்கு இயேசுவை அறிமுகப்படுத்தும் J4K-52 பணியில் நீங்கள் இணைந்ததற்கு மிக்க நன்றி.

இந்தப் பாடம் Unit 2 ( BLOCKED Account) இன் Chapter 2, Spark Kids ✨ (8 வயதுக்குக் கீழ்) க்காக தயாரிக்கப்பட்டது.
முழுமையான பாடத் திட்டத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

வாங்க, ஆரம்பிக்கலாம்! 🚀


ஒவ்வொரு அமர்வு பகுதியின் விவரங்களைப் பார்க்க கீழ்க்காணும் இணைப்புகளைப் பயன்படுத்தவும்.

10 mins:   [✨✨]

செயல்பாடு:

கடந்த அமர்வின் வீட்டுப்பணியான, வண்ணம் தீட்டிய படத்தை சிறுவர்களை மற்றவர்களுடன் பகிர்ந்து காட்டச் சொல்லுங்கள்.

ஒவ்வொரு சிறுவரும் தங்கள் படத்தை காட்டும்போது அவர்களை ஊக்கப்படுத்தி, அந்தப் படத்தைப் பற்றி சில கேள்விகள் கேட்டு, முந்தைய அமர்வின் செய்தியை மீண்டும் அவர்களுக்கு நினைவூட்டுங்கள்.

நேரம் இருந்தால், அனைவரும் சேர்ந்து “Block Pannaathe” பாடலைப் பாடலாம்.

இன்றைய பாட இணைப்பு:
“இன்றைய அமர்வில், ஒரு குடும்பம் எவ்வாறு தேவனுக்கு ‘Yes’ என்று சொல்ல முடியும் என்பதையும்—ஒருவர் தேவனுக்கு ‘No’ என்று சொன்னால் என்ன நிகழலாம் என்பதையும் நாம் கற்றுக்கொள்ளப் போகிறோம்.”

20 mins:   [✨]

வேதாகமப் பகுதி: ஆதியாகமம் 4:1–16
வேதாகம நிகழ்வு: காயீன் மற்றும் ஆபேல்

காயீன் வயலில் வேலை செய்து காய்கறிகளை விளைவித்தான் . 🌱
ஆபேல் ஆடுகளை மேய்த்தான். 🐑

ஒருநாள், இரு சகோதரர்களும் தேவனுக்குக் காணிக்கை கொண்டு வந்தார்கள்.

காயீன் சரியான செயல்களைச் செய்து கொண்டிருக்கவில்லை (ஆதியாகமம் 4:7). அவன், தன் வயலில் இருந்த சில காய்கறிகளை காணிக்கையாக கொண்டு வந்தாலே போதும் என்று நினைத்தான்.

ஆனால், தேவன் நம்முடைய காணிக்கையை மட்டும் பார்ப்பதில்லை, தேவன் நம்முடைய இருதயத்தையும் பார்க்கிறார். 💛
காயீனின் இருதயம் சரியாக இல்லை என்று தேவன் கண்டார். அதனால், அவர் காயீனின் காணிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆபேல், தேவனை நேசித்து, சரியானதைச் செய்ய முயன்றான். அவனும் தேவனுக்குக் தன் காணிக்கையை கொண்டு வந்தான்.

ஆபேலின் காணிக்கைக்கு தேவன் என்ன சொன்னார் என்று நினைக்கிறீர்கள் — “Yes” அல்லது “No”?

தேவன் “Yes!” என்றார். 😊
ஆபேலின் இருதயம் சரியாக இருந்ததால், தேவன் அவனுடைய காணிக்கையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

இதினால், காயீன் மிகவும் கோபமடைந்தான். தேவன் தன் சகோதரனின் காணிக்கையை ஏற்றுக்கொண்டு, தன்னுடையதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், அவன் மிகவும் வருந்தினான். தேவன் காயீனிடம் அன்பாக, “நீ சரியானதைத் செய்ய தேர்ந்தெடுத்திருந்தால் , நீயும் ஏற்றுக்கொள்ளப்படுவாய்,” என்றார்.

ஆனால், காயீன் தேவனுடைய வார்த்தையை கேட்கவில்லை. அவன் மீண்டும் தேவனுக்கு “No” என்று சொல்லத் தேர்ந்தெடுத்தான். அவன் தனது கோபத்தில், தன் சகோதரனையே காயப்படுத்தினான்.

நாம் ஒன்றாக சிந்திப்போம் 🤔

  • வீட்டில் எது உங்களை மிகவும் கோபப்பட செய்யும்?
    உங்களுக்கு கோபம் வந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?
  • நீங்கள் கோபத்தில் இருக்கும் போது தேவனுக்கு “Yes” என்று எப்படி சொல்லலாம்?
  • நீங்கள் காயீன் போல இருக்க விரும்புகிறீர்களா? அல்லது ஆபேல் போல இருக்க விரும்புகிறீர்களா?

குறிப்பு: இந்த வயது சிறுவர்களுக்கு கற்பிக்கும் போது கொலை என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம். காயீன் தனது சகோதரனை காயப்படுத்தினான் என்று சொல் மட்டும் போதுமானது.

பெரிய வட்டமாக சிறுவர்களை உட்கார வையுங்கள் (சிறியவர்களும் பெரியவர்களும் சேர்ந்து இருக்கட்டும்).

“YES God, Family” கைவினையை செய்யுங்கள்.

முறை:

  • “தேவனுக்கு ‘Yes’ என்று சொல்லும் குடும்பம் எப்படி இருக்கும்?” என்பதைப் பற்றி சிறுவர்களை ஒன்றாக சேர்ந்து கலந்துரையாட சொல்லுங்கள் . அவர்கள் தங்கள் எண்ணங்களை பகிர ஊக்குவியுங்கள். கீழே உள்ள படத்தை மாதிரியாக கொண்டு, அவர்கள் கூறும் குணாதிசயங்கள் அல்லது பண்புகளை அட்டவணையில் எழுத சொல்லுங்கள்.
  • பெரிய பிள்ளைகள் , சின்ன பிள்ளைகளிடம் பதில்களை கேட்டு, அவர்களுக்குப் எழுத உதவ வேண்டும். அதோடு, தங்கள் கைவினைப் அட்டைலும் தங்களுடைய பதில்களை எழுத வேண்டும்.

  • வகுப்பிற்கு முன், இதய வடிவில் காகிதங்களை வெட்டி தயார்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.
  • ஒவ்வொரு சிறுவர்களும் தங்களின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் எத்தனை பேரோ, அதே எண்ணிக்கையில் இதயங்களைத் பெற்று கொள்ள சொல்லுங்கள்.
  • ஒவ்வொரு இதயத்திலும், எடுத்துக்காட்டில் காட்டப்பட்டதுபோல், ஒரு குடும்ப உறுப்பினரின் முகத்தை வரையவோ அல்லது அவர்களின் பெயரை எழுதவோ சொல்லுங்கள்.
  • சிறிய நூல்கள் மற்றும் செலோடேப் உதவியுடன், அந்த இதயங்களை அட்டையின் அடி பகுதியில் ஒட்ட உதவுங்கள்.
  • இறுதியாக, அட்டையின் மேல் பகுதியில் இரண்டு துளைகள் போட்டு, அதில் ஒரு நூலை கட்டுங்கள்.
  • இப்போது இது தங்கள் அழகான வீட்டின் கதவை அலங்கரிக்க தயாராக உள்ளது!

5 mins:   [✨]

சிறுவர்களிடம் சொல்லுங்கள்: அடுத்த அமர்வில், சமுதாயத்திலுள்ள நண்பர்களாக நாம் தேவனுக்கு எப்படி “Yes” சொல்லலாம் என்று கற்று கொள்ளவோம். அடுத்த அமர்வுக்கு முன்பு, இந்த வீட்டு பணியை முடிக்க வேண்டும்:

👉 நீங்கள் கோபப்படும்போது குறைந்தது ஒருமுறையாவது தேவனுக்கு “Yes” என்று சொல்லுங்கள்.

குறிப்பு: வரும் வாரத்தில், தினமும் அவர்கள் தேவனுக்கு எப்படி “Yes” என்று சொல்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் சிறுவர்களிடம் இருந்து கேட்டு அறிந்து கொள்ள உற்சாகப்படுத்துங்கள் .


இந்த பாடத்திற்குத் தேவையான மாதிரிகளை (இருந்தால்) இங்கே பதிவிறக்கம் செய்யலாம்:

1. Block Panaathe Song (Tamil)

2. Block Panaathe Song (Audio)

3. Block Panaathe Lyrical


பாடத்தை மேலும் ஆய்வு செய்ய / படிக்க விரும்பினால், கீழே உள்ள இணைப்புகளை பயன்படுத்தலாம்:


ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்துவமான மனப்பாட வசனம் இல்லை. பதிலாக, சிறுவர்கள் முழு அதிகாரங்கள் அல்லது வேதாகமப் பகுதிகளை மனப்பாடம் செய்ய ஊக்கப்படுத்துங்கள்.
Unit 2 (Blocked Account) நினைவுப் பகுதி:

சங்கீதம் 119 : 9-11

உங்களுடைய அனுபவத்தை பற்றி கேட்க எங்களுக்கு மிகவும் ஆசை!

நன்றாக நடந்த விஷயங்கள், மேலும் மேம்படுத்தக்கூடிய பகுதிகள், அல்லது நீங்கள் புதியதாக முயற்சி செய்து சிறப்பாக செயல்பட்ட எந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு சிறிய நேரம் ஒதுக்க முடியுமா?

தன்றி! 💖

Leave a comment