Time to READ:

3–4 minutes

வணக்கம்! 👋
சிறுவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அவர்களுக்கு இயேசுவை அறிமுகப்படுத்தும் J4K-52 பணியில் நீங்கள் இணைந்ததற்கு மிக்க நன்றி.

இந்தப் பாடம் Unit 2(BLOCKED Account) இன் Chapter 3, Spark Kids ✨ (8 வயதுக்குக் கீழ்) க்காக தயாரிக்கப்பட்டது.
முழுமையான பாடத் திட்டத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

வாங்க, ஆரம்பிக்கலாம்! 🚀


ஒவ்வொரு அமர்வு பகுதியின் விவரங்களைப் பார்க்க கீழ்க்காணும் இணைப்புகளைப் பயன்படுத்தவும்.

25 mins:   [✨✨]

தொடங்குவதற்கு முன், “HEART BLOCK” விளையாட்டை நடத்துங்கள். மூன்றாவது கட்டமான COMMUNITY-யை வெளிப்படுத்திகள். (விவரங்கள் Quick Links-ல் கொடுக்கப்பட்டுள்ளன.)

செயல்பாடு: திரைப்பட நேரம்

அனைத்து சிறுவர்களையும் ஒன்றாக வசதியாக அமரச் செய்யுங்கள். அவர்களிடத்தில் இவ்வாறு சொல்லி உற்சாகப்படுத்துங்கள்:

“இன்று, நம்மைப் போல ஒருவரின் கதையை பார்க்கப் போகிறோம் — அவரைச் சுற்றியிருந்த அனைவரும் தேவனுக்கு ‘No’ என்றபோதும், அவர் தேவனுக்கு ‘yes’ என்று சொன்னார்”

சிறுவர்கள் நன்றாக புரிந்து கொள்ளும் மொழியில் நோவாவின் கதையை காண்பியுங்கள் . (இணைப்பு- Quick Links-ல் கிடைக்கும்.)

விருப்பப்பட்டால் செய்யலாம் :

திரையிடும் இடத்தை அமைதியானதாகவும் கவனிக்கக்கூடிய சூழ்நிலைக்கு மாற்ற, நீங்கள் விளக்குகளை சற்றுக் குறைக்கலாம் . அனைவரும் தெளிவாகப் பார்க்கும் வகையில் இருக்கைகளை தேவையெனில் மாற்றி அமைக்கவும். சிறுவர்களுக்கு இதை ஒரு நல்ல அனுபவமாக மாற்ற, அவர்களுக்கு சிறிய சிற்றுண்டிகளையும் வழங்கலாம்.

திரைப்படத்திற்குப் பிறகு, பாடத்துக்கு நேராக நடத்துங்கள் :

“இன்று, நாம் மிகவும் அழகான ஒரு விஷயத்தைப் பற்றியும் கேட்கப் போகிறோம் — வானவில் பற்றிய கதை.”

30 mins:   [✨]

வேதாகமப் பகுதி: ஆதியாகமம் 6, 7, 8, 9

சிறுவர்களை அவர்கள் இப்போது பார்த்த நோவாவின் கதையை தங்களுடைய பாணியில் மீண்டும் சொல்ல சொல்லுங்கள். அவர்கள் நினைவில் கொள்ள உதவும் எளிய கேள்விகளை கேளுங்கள். இது செய்தியின் அர்த்தத்தை மீண்டும் அவர்களுக்கு நினைவுப்படுத்த உதவும்.

பின்னர் இந்த செய்தியை தெளிவாக அவர்களுடன் பகிருங்கள்:

செய்தி:
நோவாவின் நண்பர்கள் தேவனுக்கு “No” என்று சொல்லி தவறான காரியங்களைத் தொடர்ந்து செய்தார்கள். அவர்களுடைய இருதயங்கள் மிகவும் கடினமானதால், தேவன் அவர்கள் அக்கிரமத்தை நிறுத்த வேண்டியதாக இருந்தது. தேவன் பெருவெள்ளத்தை அனுப்பினார்; ஆனால் நோவா தேவனுக்கு “Yes” என்று சொல்லி கீழ்ப்படியத் தேர்ந்தெடுத்ததால், தேவன் அவரை காப்பாற்றினார் .

மற்றவர்கள் “No” என்று சொன்னாலும், நாம் தேவனுக்கு “Yes” என்று சொல்லத் தேர்ந்தெடுக்கலாம்.

சிறுவர்களைக் கேளுங்கள்:

  • பாஸ்டர் பிரசங்கம் செய்யும்போது, உங்கள் நண்பர்கள் உங்களை விளையாட வரச் சொன்னால், நீங்கள் தேவனுக்கு “Yes” என்று எப்படி சொல்வீர்கள்?
  • பள்ளியில் ஆசிரியர் சொல்லும் வார்த்தைகளை உங்கள் நண்பர்கள் கேட்க மறுத்தால், நீங்கள் தேவனுக்கு “Yes” என்று எப்படி சொல்வீர்கள்?
  • உங்கள் நண்பர்கள் தங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படியாமல் இருந்தால், நீங்கள் தேவனுக்கு “Yes” என்று எப்படி சொல்வீர்கள்?

கேட்பது, கீழ்ப்படிதல், மரியாதையாக நடந்து கொள்வது, சரியானதை செய்வது போன்ற நடைமுறை பதில்களை சொல்ல அவர்களை ஊக்குவிக்கவும்.

தேவையான பொருட்கள்:

“தேவனின் சிறப்பு வாக்குத்தத்தம்” வானவில் வண்ணம் தீட்டுக படம் (Quick Links-இல் பார்க்கவும்)

கிரேயான்கள்

செயல்பாடு :

சிறுவர்கள் வானவிலை மிகவும் விரும்புவர்கள், ஏனெனில் அது பிரகாசமாகவும் பல நிறங்களுடனும் இருப்பதால் . அவர்கள் வண்ணம் தீட்டும் போது, அவர்களுக்கு நினைவூட்டுங்கள்: தேவன் வானவிலை பார்க்கும் ஒவ்வொரு முறையும், தமது சிறப்பு வாக்குத்தத்தத்தை நினைவுகூர்கிறார் — உயிர்களை காக்கவும் பாதுகாக்கவும் அளித்த வாக்குத்தத்ததை.

வண்ணம் தீட்டும் நேரம் அமைதியாகவும் சிந்தனைக்குரியதாகவும் இருக்கட்டும்.

5 mins:   [✨]

“அடுத்த அமர்வில், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் நாம் எவ்வாறு தேவனுக்கு ‘Yes’ என்று சொல்லலாம் என்பதைப் பற்றி மேலும் கற்போம்.”

வீட்டு பணி

👉 அடுத்த அமர்விற்கு முன் குறைந்தது ஒரு நண்பருடன் சேர்ந்து ஜெபியுங்கள்.

அவர்கள் தேவனுக்கு எவ்வாறு “Yes” என்று சொன்னார்கள் என்பதை அடுத்த வாரம் பகிர ஊக்குவியுங்கள்.

பெற்றோருக்கான குறிப்பு:

உங்கள் சிறுவர் தங்கள் அன்றாட வாழ்க்கையில் தேவனுக்கு “Yes” என்று சொல்ல எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பதை ஒவ்வொரு வாரத்திலும் பகிர ஊக்குவிக்கவும்.


இந்த பாடத்திற்குத் தேவையான (இருந்தால்) மாதிரிகளை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்:

1. Noah – Short Movie

Tamil:

English:


2. “God’s Special Promise” coloring sheet

“தேவனின் சிறப்பு வாக்குத்தத்தம்” வானவில் வண்ணம் தீட்டுக படம்


3. Heart-Block Game Instructions


பாடத்திற்காக மேலும் ஆய்வு செய்ய / ஆராய்ச்சி செய்ய விரும்பினால், கீழே உள்ள இணைப்புகளை பயன்படுத்தலாம்:


ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்துவமான மனப்பாட வசனம் இல்லை. பதிலாக, சிறுவர்கள் முழு அதிகாரங்கள் அல்லது வேதாகமப் பகுதிகளை மனப்பாடம் செய்ய ஊக்கப்படுத்துங்கள்.
Unit 2(Blocked Account) நினைவுப் பகுதி:

சங்கீதம் 119: 9-11

உங்களுக்கும் உங்கள் சிறுவர்களுக்கும் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருந்ததா? அப்படியானால், கமெண்ட் பாக்ஸில் உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
தன்றி! 💖

Leave a Reply

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading