நான் பேசுவது கேட்கிறதா?

Published by

on

நான்கு பகுதிகளைக் கொண்ட “Hello👋🏼” என்ற ஞாயிறு பள்ளி பாடத்திட்டத்தில், மூன்றாவது பகுதியை இங்கு பார்ப்போம்.

நம்முடன் ஆழமான உறவை வைக்க விரும்பும் தேவனை இந்தத் தொடர் அறிமுகப்படுத்திகிறது. மேலும் அறிய அல்லது பிற மொழிகளில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

நோக்கம்:

தேவன் உன்னிடம் பேச விரும்புகிறார் என்று சிறுவர்களிடம் கற்று தர போகிறோம். அவர் வேதத்தின் மூலம் நம்முடன் பேசுகிறார்.

அட்டவணை:
  1. அறிமுகம்
  2. பாடல் நேரம் (15 mins)
  3. மனப்பாட வசனம் (5 mins)
  4. வேதாகம நிகழ்வு (20 mins)
  5. செயல்பாடு (10 mins)
  6. விளையாட்டு (10 mins)
அறிமுகம்

(உங்கள் போனை காதுக்கு அருகில் வைத்துக்கொண்டு யாரிடமாவது போனில் பேசுவது போல் காட்டுங்கள் ) “ஹலோ! ஹலோ! ஹலோ! யாராவது இருக்கிறார்களா? ஏன் யாரும் பேசவில்லை? ஹலோ! யாராவது இருக்கிறார்களா?” (தொலைபேசியில் மற்றவரிடம் சொல்ல உங்களுக்கு அநேக விஷயங்கள் இருக்கிறது என்றும் அனால் அவர்கள் கேட்காமல் இருக்கிறார்கள் என்றும் பின்னர் சிறுவர்களிடம் சொல்லுங்கள்)
இன்று நான் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்து கொள்ளப்போகிறேன். நாம் ஒவ்வொருவரும் பல சமயங்களில் ஒரு முக்கியமானவர் பேசுவதைக் கேட்காமல் இருக்கிறோம். ஆச்சரியமா இருக்கா? இன்று அதை பற்றி தான் பேச போகிறோம். ரெடியா?

மனப்பாட வசனம்

என்னிடம் ஜெபம் செய். நான் பதில் கூறுவேன். எரேமியா 33:3b (Tamil Easy Reading Version)

வசனத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் தனி தனி சிட்டில் எழுதி அதை குலுக்கி போடவும்.
சிறுவர்கள் வசனத்தை சரியான வரிசையில் மறுசீரமைக்க வேண்டும். இந்த விளையாட்டை சிறு போட்டியாக மாற்ற சிறுவர்களை சிறு குழுக்களாக பிரித்து விளையாடவும்.

வேதாகம நிகழ்வு

வேத பகுதி: 1 சாமுவேல் 3
கதை: தேவன் சாமுவேலிடம் பேசினார்
செய்தி:

தேவனால் உங்களை பார்க்க முடியும் என்றும் அவர் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் முதல் பாடத்தில் பார்த்தோம். அவர் உங்கள் பேச்சைக் கவனமாக கேட்கிறார் என்பதை இரண்டாவது பாடத்திலிருந்து அறிந்து கொண்டோம். இன்று நாம் தெரிந்துகொள்ளப்போவது என்னவென்றால் தேவனால் பேச முடியும். அவர் உங்களுடன் பேச விருமுகிறார்.
“சாமுவேலே! சாமுவேலே!” என்று தன் பெயரை சொல்லி அழைத்து சின்ன சாமுவேலிடம் தேவன் பேசினார். எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்களைச் சாமுவேலுக்கு சொன்னார் . ஒருமுறை மட்டும் அல்ல மீண்டும் மீண்டும் பேசினார். தேவன் உங்களிடம் பேச விரும்புகிறீர்களா? தேவன் சொல்வதைக் கேட்பீர்களா?

செயல்பாடு

தேவன்  பரிசுத்த வேதத்தை பயன்படுத்தி மனிதர்களிடம் பேசுகிறார் என்று இந்த செயல்முறையை கொண்டு சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். ஒரு வேதத்தைக் காட்டி, கீழே கொடுக்கப்பட்டுள்ள உண்மைகளைப் சிறுவர்களிடம் பகிருங்கள்:

  • வேதம், தேவனின் வார்த்தை என்று அழைக்கப்படுகிறது – அதாவது வேதம், தேவன் முன்பு பேசியவற்றின் தொகுப்பாகும்.
  • சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், இந்த வார்த்தைகள் கடந்த காலத்தில் பேசப்பட்டிருந்தாலும், அவர்கள் இன்று உங்களுடன் பேசும் மற்றும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று கூட சொல்லும். இது நம் தேவனின் வல்லமையால் ஆகிறது.
  • வேதத்தில் 66 புத்தகங்கள் உள்ளன.
  • சுமார் 40 ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். இவளவு மகத்தான வேதத்தை மனிதர்கள் எப்படி எழுதினார்கள் என்று தெரியுமா? 2 தீமோத்தேயு 3:16 சொல்கிறது அணைத்து வேதவாக்கியங்களும் தேவனால் கொடுக்கப்பட்டவை. ஒவொரு புத்தகத்தின் ஆசிரியர்களும் தேவன் சொல்வதை கேட்டு எழுதினார்கள்.
  • மிக ஆச்சிரியமாக விஷயம் என்னவென்றால் வேதத்தை எழுதின அநேக ஆசிரியர்கள் ஒருவரை ஒருவர்பார்க்க கூட இல்லை. சுமார் 1400 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப்பட்டு தொகுக்கப்பட்டது. அனால் அவர்கள் எழுதினது ஒன்று கூட இனொருவர் எழுதின வார்த்தைகளுக்கு முரண்படவில்லை. இது நமக்கு ஒரு முக்கியமான ரகசியத்தை வெளிப்படுத்திகிறது. வேதம், தேவன் என்னும் ஒரே ஆசிரியரால், பல மனிதர்களைக் கொண்டு எழுத பட்டுள்ளது.  
  • அதுவே இந்நூலைச் சிறப்புறச் செய்கிறது. கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் உள்ள ஒவ்வொரு மனிதனும் படிக்க தேவன் எழுதிய அன்பு கடிதம் தான் வேதம்.
  • தேவனின் அன்பு  கடிதத்தைப் படிக்க நீங்கள் தயாரா?
  • வேதத்தை வாசித்தீர்கள் என்றால், இன்று தேவன் உங்களிடம் பேசுவதை நீங்கள் கேட்கலாம்.
விளையாட்டு

இது “சைமன் கூறுகிறார்” என்று அழைக்கப்படும் நன்கு அறியப்பட்ட விளையாட்டு. நீங்கள் “சைமன்” என்பதை விட வேறு பெயரைப் (உதா. “ரவி) பயன்படுத்தலாம்.
“ரவி சொல்கிறார்” என்று சொல்லி சிறுவர்கள் கீழ்ப்படியும்படி சிறு கட்டளைகளை கொடுங்கள். உதா. “ரவி இரண்டு முறை குதிக்க சொல்கிறார்” சிறுவர்கள் இரண்டு முறை குதிக்க வேண்டும். “ரவி சொல்கிறார்” என்று தொடங்காத கட்டளையை நீங்கள் கொடுக்கும் பொது, சிறுவர்கள் அதைச் செய்ய கூடாது. அப்படி செய்தார்கள் என்றல் அவர்கள் ஆட்டத்தைவிட்டு வெளியேறவேண்டும். ​​

செய்தி: உங்களில் சிலர் கட்டளையைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிந்தாலும் விளையாட்டில் தோற்றீர்கள். அது ரவியிடமிருந்து வந்ததா என்பதை நீங்கள் சரிபார்க்காததே இதற்குக் காரணம். தேவன் உன்னிடம் பேச விரும்புகிறார். ஆனால் நீங்கள் கவனமாகக் கேட்க வேண்டும். தேவன் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள், ஏனென்றால் பலர் தேவளைப் போல பேசுகிறார்கள் ஆனால் அவர்கள் தேவன் இல்லை. தேவன் உங்களுடன் பேசுகிறார் என்பதை நீங்கள் எப்படி உறுதியாக அறிந்துகொள்ள முடியும்? தேவனின் வார்த்தை அதாவது வேதம் அப்படித்தான் கூறுகிறது என்று நீங்கள் வாசித்து அறியும்போது தான் தேவன் உங்களிடம் பேசுகிறார் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ள முடியும்.

Leave a comment