✨அத்தியாயம் 3 – வாழ்க்கை

Published by

on

வாசிக்க தேவைப்படும் நேரம்:

2–4 minutes

வணக்கம்! 👋
சிறுவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அவர்களுக்கு இயேசுவை அறிமுகப்படுத்தும் J4K-52 பணியில் நீங்கள் இணைந்ததற்கு மிக்க நன்றி.

இந்தப் பாடம் Unit 1 (NEW Account) இன் Chapter 3, Spark Kids ✨ (8 வயதுக்குக் கீழ்) க்காக தயாரிக்கப்பட்டது.
முழுமையான பாடத் திட்டத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

வாங்க, ஆரம்பிக்கலாம்! 🚀


ஒவ்வொரு அமர்வு பகுதியின் விவரங்களைப் பார்க்க கீழ்க்காணும் இணைப்புகளைப் பயன்படுத்தவும்.

15 நிமிடங்கள்: [✨✨]

செயற்பாடு (Activity):
கடந்த அமர்வின் வீட்டுப் பாடமாக அவர்கள் வரைந்த தேவனின் படைப்புகளைப் பற்றிய படத்தை மற்றவர்களுடன் பகிர சிறுவர்களிடம் சொல்லுங்கள்.

அடுத்தாக, தேவன் உருவாக்கிய சரீரத்தை பற்றிய ஆக்ஷன் பாடலைக் கற்றுக்கொடுங்கள்:
🎵 Head, Shoulders, Knees and Toes
🔗 https://youtu.be/58zBuYsnv2k?si=aproUPak4FMkDN8V

இன்றைய பாட இணைப்பு:
“இன்று, நாம் இப்பாடலில் பாடிய எல்லாவற்றையும்—நம் தலை, தோள்கள், முழங்கால்கள், கால்விரல்கள்—தேவன் எப்படிப் படைத்தார் என்பதைப் பற்றி கற்றுக்கொள்ளப் போகிறோம்!”

நேரம்: 20 நிமிடங்கள்: [✨]
வேதாகம பகுதி: ஆதியாகமம் 2:4–8; சங்கீதம் 139:14
செயற்பாடு: கதை நேரம் (Story Time)

தேவையானவை: பிளே டோ (Play dough) அல்லது பிசைந்த மாவு

சம்பவ சுருக்கம்:

தேவன் தமது வார்த்தையால் முழு உலகையும் படைத்தார். அவர் பேசினார்; உடனே பறவைகள், மீன்கள், விலங்குகள் உருவாயின. அதன்பிறகு, தேவன் முதல் மனிதனை உருவாக்கினார்.

தேவன் பூமியின் மண்ணை எடுத்து, உடலின் ஒவ்வொரு பகுதிகளையும் கவனமாக வடிவமைத்தார்.
“நாமும் அப்படியே செய்து பார்க்கலாமா?”

(ஒவ்வொரு பிள்ளைக்கும் சிறிது மாவு கொடுக்கவும். நீங்கள் உடல் பகுதிகளின் பெயர்களை சொல்லும் பொது—தலை, கண்கள், கைகள், கால்கள்—அவற்றை மாவை கொண்டு வடிவமைக்க சிறுவர்களுக்கு உதவுங்கள். ஒவொரு உறுப்பை ஒன்றின் பின் ஒன்றாகி உருவாக்கி, இறுதியில் ஒரு சிறிய மனித உருவத்தை உருவாக்குக்கங்கள்)

பின்னர் தேவன் அந்த மனிதனுக்குள் ஜீவசுவாசத்தை ஊதினார்.
(மண்ணால் செய்யப்பட்ட உருவத்தின் மீது மெதுவாக ஊதுவது போல நடித்துக் காட்டுங்கள்.)

அந்த மனிதன் உயிர் பெற்றான்—உங்களைப் போலவே அவன் பார்க்கவும், சிந்திக்கவும், பேசவும், நடக்கவும் முடிந்தது; அவன் பெயர் தான் ஆதாம்.

நீங்கள் உங்கள் அம்மாவின் வயிற்றில் உருவாகிக் கொண்டிருந்த போதும், தேவன் உங்களை பார்த்தார்; உங்களை மிகவும் கவனமாகவும் அழகாகவும் உருவாக்கினார்.

“உங்களை உருவாக்கியதற்காக தேவனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்களா?”
(சிறுவர்களை சிறிய ஜெபத்தில் வழிநடத்துங்கள்.)

நேரம்: 20 நிமிடங்கள்: [✨✨ / ✨]
செயற்பாடு: விரல் ஓவியம் (Finger Painting)

இயற்கை வண்ணம் (Natural Paint) தயாரிக்க, பீட்ரூட்டை (Beetroot) தண்ணீரில் 20–30 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்னர் அதை குளிர விடுங்கள். (வண்ணம் நீண்ட நேரம் நிலைத்திருக்க சிறிதளவு வினிகர் சேர்க்கலாம்.)

ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு காகிதத்தையும் சிறிது பீட்ரூட் வண்ணத்தையும் கொடுங்கள். தேவன் படைத்த உடல் பகுதிகளில் ஒன்றை—கண்கள், மூக்கு, காதுகள், கைகள் அல்லது கால்கள்—விரல்களைப் பயன்படுத்தி வரைந்து வண்ணம் தீட்டச் சொல்லுங்கள்.

5 நிமிடங்கள்: [✨]

அடுத்த அமர்வில், தேவன் ஏன் மற்ற மனிதர்களை உருவாக்கினார் என்பதை அவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்று சிறுவர்களுக்கு தெரிவியுங்கள். அதற்கு முன், கீழ்க்கண்ட வீட்டுப் பணியை செய்யுமாறு சொல்லுங்கள்.

👉 உங்கள் நண்பர்களின் படத்தை ஒரு காகிதத்தில் வரைந்து, அடுத்த வகுப்பிற்கு கொண்டு வாருங்கள்.


பாடத்திற்கு தேவையான வடிவங்களை (Templates) இங்கே பதிவிறக்கம் செய்யலாம் (உள்ளிருந்தால்).


பாடத்தை மேலும் ஆய்வு/ஆராய்ச்சி செய்ய விரும்பினால் கீழ்க்காணும் இணைப்புகளைப் பயன்படுத்தவும் (உள்ளிருந்தால்).


ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்துவமான மனப்பாட வசனம் இல்லை. பதிலாக, சிறுவர்கள் முழு அதிகாரங்கள் அல்லது வேதாகமப் பகுதிகளை மனப்பாடம் செய்ய ஊக்கப்படுத்துங்கள்.
Unit 1 (NEW Account) நினைவுப் பகுதி:

சங்கீதம் 33: 1-9

உங்களுக்கும் உங்கள் சிறுவர்களுக்கும் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருந்ததா? அப்படியானால், கமெண்ட் பாக்ஸில் உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
தன்றி! 💖

Leave a comment